நவ பாஷாணத்தில் முருகன்
போகருக்கு 63 சீடர்கள் இருந்தனர் அவற்றுள் முக்கியமான சிலர் புலிபாணி,கோரக்கர்,கருஊரார்,பாபாஜி நாகராஜ்,கொங்கனவர் இதில் புலிபாணியும்,கோரக்கரும் போகரின் நவ பாஷாண சிலை செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர். ஒன்பது பாஷாணத்தில்எட்டுமுடிந்ததது மீதி உள்ள ஒன்றை கட்டினால்தான்பாஷான விஷம் முறியும்.
மொத்தம் 64 பாஷாணம்.இதில் குறிப்பிட்ட சில பாஷணங்களை கூட்டி ஒரு பாஷண கட்டு தயாரித்தார் ஒரு பாஷாண கட்டு என்பது 81 மூலிகை கலவைகள் கலந்து விஷத்தை முறித்து வைப்பது.இந்த 81 கலவைகள் என்பது 4448மூலிகைகள் சேர்ந்தது. ஒன்பதாவது பாஷாணத்திற்கு தேவையான மூலிகை அமெரிக்கா,சீனா ரோமாபுரி ஆகியயிடங்களில் இருந்தன அதை எடுக்க போகர் சென்றார்.நாட்கள் பல கடந்தன போகர் வரவில்லை ஒரு நாட்டின் மன்னனாக உள்ளதையும் அவர் உடல் எரிக்கப்பட்டதையும் அறிந்தனர்.

சீடர்கள் இருவரும் சீன தேசம் சென்றனர் அங்கு போகரை கண்டு நடந்ததை கூறி அழைத்து வந்தனர் போகர் தன் பழைய நிலையை மறந்திருந்தார். பின் சீடர்கள் போகரை அங்கிருந்து அழைத்து வந்தனர்
இப்போது உள்ள கன்னிவாடி என்ற பழநி அருகிலுள்ள மலை பகுதியில் தங்கி மறந்து இருந்ததை மீண்டும் உபதேசம் பெற்றார் பின் பழைய நிலையை அடைந்து ஒன்பதாவது பாஷாண்ம் கட்டிமுடித்து சிலை செய்தார். தன் கற்று தேற உதவிய தண்டத்தை வைத்து முருகன் சிலையை செய்தார். ஆம் முருகன் கையில் உள்ள அந்த தண்டம் போகருக்கு உதவிய தண்டமாகும் இதையும் பின் நவ பாஷான மூலிகை கட்டாக மாற்றினார்.மேலும் இவருக்கு தண்டாயுதபாணி என்ற பெயரும் வைத்தார்.
இந்த நவ பாஷானம் கட்டுவதில் போகருக்கு போட்டியாக இருந்தவர் மருத்துவ உலகில் அகத்தியருக்கு அடுத்து இருந்தவர் தன்வந்திரி சித்தர். தன்வந்திரிக்கு நிகர் தன்வந்திரி தான் என்றார் அகத்தியர். இவரால் எட்டு மட்டுமே முடிக்க முடிந்தது அதற்குள் போகர் ஒன்பதையும் முடித்து வெற்றி கொண்டார் இதனால் கோபமடைந்த தன்வந்திரி எட்டையும் கோவில் குளத்தில் கொட்டிவிட்டார் உடனே மகேஸ்வரன் தோன்றி,"கவலை வேண்டாம் மகனே! அவன் பழனியில் கட்டியதை, பார்த்தால் அதில் வரும் அபிஷேக பொருள்களை உண்டால் நோய் தீரும். நீ கொட்டிய குளத்தில் குளித்தால் அனைத்து பிணிகளும் தீரும் என்றார் மேலும் நான் இங்கு வைத்தீஸ்வரனாக எழுந்தருளி அருள் புரிவோம் என்றார் அதுதான் வைத்தீஸ்வரன் கோவில்.
இவை அனைத்தும் கோரக்கர் சந்திரரேகை, பழனி தல புராணம், வைத்தீஸ்வரன் தல புராணம், ஆகியவைகளை ஆராய்ந்து மிக சுருக்கமாக கூறினேன்

மேலும் இப்போது உள்ள போகர் சமாதியில் போகர் இல்லை என்பதும் தெரியவந்தது அதை தெளிவாக பதிவு செய்ய நாளை சந்திக்கிறேன்
No comments:
Post a Comment