August 30, 2016

மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 2

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு


யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.


மகரயாளி
இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம் அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து கொள்வோம். யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன் இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
அங்கோவாட்கஜ யாளி 
யாளி…. ஒரு அறிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்குதான், அதிகம் பலம் கொண்ட விலங்கு. இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி,  பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்
ஒரு யானையின் தந்தம்
யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும்,சிம்மயாளியும் தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.

அங்கோர் வாட் யாளியும்  டைநோசர்
இப்படிபட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.

யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் கஜகேசரி ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)

பெரு யாளி
இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என  கொடுத்துள்ளனர். சில விளக்கம் பரிபாஷையாக உள்ளதை நாம் புரிந்து கொள்ளாமல் போனோம். இதை வேறு வகையான புரிதல் கொண்டதால் விளக்க முடியாமல் போனது

    புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது          
                                                ------தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)

யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான்.  அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் . எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.

சரி யாளி எப்படிபட்டவை யாளிகள் தெய்வீக தன்மை கொண்டவை எனவும் இசைக்கு மயங்கும் தன்மை உள்ளவை என்றும் கூறுகிறார்கள் இது சரியான ஆதாரம் இல்லை.  

கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும் என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.

காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.

யானை, சிங்கம் அமைப்புள்ளதை கஜயாளி என்றும்,சிங்கம் போல் உள்ளதை சிம்மயாளி என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை மகரயாளி என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை ஞமலியாளி என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை பெருயாளி என்றும் கூறுவர்.

யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே

நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
யாளி யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
                    -அகத்தியர்

நிரச்சொன்னர்  மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்             
                        ----தேரையர் 

யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன

டைனோசாசர் சுட்டி காட்டும் வெள்ளையர்
டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது. கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு 

நன்றி
வாழ்க வளமுடன்


August 29, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர(இறை)மொழி பாகம் – 9


 (இந்த மனமும் தமிழும் ஆய்வுகளை திரும்ப திரும்ப ஞாபகம் வைத்தால் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்)

மனமும் தமிழும் ஓர் ஆய்வு – 2


கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி! இதை ஞாபகம் வைக்க

சரி இன்று சித்தத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு ஆராய்வோம்.


ஆரம்பத்தில் பரமாத்மா ஒரு பதிவு போட்டு அனுபுவார் என்றேன் அல்லவா, அந்த பதிவு தமிழில் தான் போட்டு அனுப்புவார். ஆன்மாவுக்கு மனம் என்னும் கருவி கிடைப்பது மானுடதேகத்தில் அந்த தேகம் ஆன்மா எடுக்கும் போது சித்தம் அதன் செயல்பாட்டை தொடர இந்த தமிழ் பேசும் இடத்தில் தான் முதலில் பிறக்கிறது. அது உலகில் எங்கும் இருக்கலாம் ஆனால் தமிழ் மொழி பேசும் இடத்தில் தான் சென்றடையும்.

கடவுள் சித்தம் தமிழில் பதியபட்டதால்  அது தானகவே அங்கு சென்று முக்திக்காக பிறக்கும் ஆனால் சில ஆன்மாக்கள் விஷய வாசனைகளில் ஈடுபட்டு இது மறக்கிறது. அடுத்தடுத்த பிறப்பு மேற்கொண்டு மீண்டும் தமிழுக்கு வருகிறது(மேற்கண்ட விஷயம் சித்தர் நூல்களில் திரட்டிய தொகுப்பு)


✝இயேசு கூட தமிழ் கற்ற பின் யோகக்கலை பயின்று சென்றார் என குறிப்பு உள்ளது ஆராய்க.

இது அனுபவத்தில் கூறவேண்டுமானல் அறிதுயில்(hypnotize)யோக கலையில் ஆன்மாவின் பூர்வ ஜென்ம பதிவில் ஆராயும்போது 90 விழுக்காடு, முதல் மனித பிறப்பு ஆன்மா எடுக்கும் இடம் தமிழ் மொழி பேசும் இடத்தில் தான்.

சந்தேகம் இருந்தால்இதை அனைத்து அறிதுயில்(hyponotizem)யோககலை செய்பவர்களும் ஆய்வு செய்து பார்த்து கூறவும்

ஆனால் அறிதுயிலின் போது ஆன்மா திரும்ப செல்லும் வழியை அதாவது கடவுள் போட்ட பதிவை காண இயலாது(இது மறைக்கபட்ட விடயம்).

இந்த கருத்தை யாரெல்லாம் மறைமுகமாக சொல்லுகிறார்கள் என காணவும்

தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்,
இன்பத் தமிழ்
எங்கள் வளமிக்க உளமுற்ற தீ               
  
                      ----பாவேந்தர் பாரதிதாசன்

பாரப்பா புலத்தியனே கேள்! முத்திக்கு
வித்தாகும் முத்தமிழால் உரைகின்றேன்                                                  ---அகத்தியர்

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை                                                                                 ------திருமூலர்

இப்படி ஆன்மா தனக்கான சித்தபதிவை திறக்கும் நேரம் சூழ்நிலை என்ன என ஆராயம் போது இது பற்றி தமிழ் இலக்கண நூலில் மறைப்பாக சொல்லபட்டுள்ளது

இசை தமிழ் தான் இந்த பகுதிக்கு மிகவும் உதவுகிறது. அதாவது கடவுள் பற்றிய சிந்தனை உங்களுக்கு கொண்டுவர இசை தமிழை மறைமுகமாக வைத்துள்ளனர்.

இசை தமிழில் உள்ள ராகங்கள்(பண்கள்) குறிப்பிட்ட நேரத்தில் பாடுவதாக வடிவமைத்து சில நுணுக்கமாக வைத்துள்ளனர் .


சித்தத்திற்க்கு கடவுள் பற்றிய பதிவை திறக்கும் ராகம் பூபாளம்(புள்ளாளம்) இதை தமிழிசையில் புறநீர்மை எனப்படும். இந்த இசை வேலை செய்யும் நேரம் அதிகாலை நேரம் 4 மணியிலிருந்து 8 மணிவரை இந்த சமயத்தில் கடவுள் சித்த பதிவை கொண்ட பாடலையோ அல்லது வேறு வகையான பாடலையோ பாடினால் அன்று முழுவதும் அந்த அலைவரிசயில் உங்கள் மனம் வேலை செய்யும்.

பூபாளம் நேரம் இசை இலக்கணபடி 6மணிவரைதான் அதற்கு அடுத்து பிலஹரி வரும் இருப்பினும் பிலஹரியும் சிறிது வேலை செய்கிறது


இது பற்றி இசைத்தமிழில் விரிவாக பின்னால் காண்போம்

இந்த இசை எப்படி வேலை செய்கிறது என்பதை அனுபவமாக சொல்லவேண்டுமானால், இந்த காலத்தில் 4 ல் இருந்து 8 மணிவரைக்கும் யாராவது தூங்கும்போது அவருக்கு தெரியாமல் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடலை ஒலிக்க செய்யவேண்டும் குறிப்பு அந்த பாடல் பாடுகிறது என அவருக்கு தெரியகூடாது அந்த அளவு அலைவரிசை இருக்கவேண்டும்.

பின் அவர் அந்த பாடலை அன்று முழுவதும் அவர் முனுமுனுத்து கொண்டே இருப்பார்.

இதுபோல் தான் நாம் கடவுள் சித்த பதிவு அலைவரிசையை தூண்டிவிட்டால் அது அன்று முழுவதும் அதற்க்கான அலைவரிசை உள்ள செயல்கள்,நபர்களை தொடர்புபடுத்தும்.


இதை சரியாக செய்தவர் மாணிக்கவாசகர். அவர் தன்னுடைய திருப்பள்ளி எழுச்சியில் சரியான தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.இந்த பாடல் பாடபெறும் சிறுபொழுதுகளில் வைகறை அதாவது (2to6) அதிகாலை ஆகும்.இது பாவகையில் எண்சீர் ஆசிரிய விருத்தம் அதாவது உள்ளே உள்ள அறிவை தூண்டும் ஆசிரியர் போல அந்த விருத்தத்தில் பாடபெற்றது.இசை புறநீர்மை அதாங்க பூஆழம்(சித்தர்கள் உச்சரிப்பு)

இதை அறிந்த சைவ நெறியாளர்கள் மறைப்பாக முன்பனிகாலம் என்னும் மார்கழியில் மட்டும் வைகறையில் பாட அனுமதி தந்தனர். அந்த மாதம் பூ ஆழம்(பூபாளம்) என்கிற சஹஸ்ர இதழின்  ஆழத்தில் உள்ள கடவுள் சித்த பதிவு தானாகவே வெளிவரும் அந்த நேரம் பாடுவதால் எளிதாக அமையும்.

மார்கழி மாதம் மட்டும் ஏன் சொர்க்க வாசல் திறக்கிறார்கள் என இப்போது உங்களுக்கு புரியும்.

அறிவியல் ரீதியாக சித்தத்தில் பதிவு செய்யும் முறை தக்க குருவின் துணை கொண்டு அறிக.

இங்கு மெய்ஞ்ஞான (பக்தி) வழியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க

                                             சுபம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

August 24, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் – 8


மனமும் தமிழும் ஓர் ஆய்வு – 1


(இந்த மனமும் தமிழும் ஆய்வுகளை திரும்ப திரும்ப ஞாபகம் வைத்தால் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்)

(அந்த கரணங்களில் ஒன்றான சித்தபதிவுகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு)

சித்தம் என்பது கடவுள் மனம் என சித்தர்கள் அழைக்கிறார்கள்.உடலுக்கும் தமிழுக்கும் சம்பந்தம் உள்ளதை பார்த்து வருகிறோம்.
அதுபோலவே தமிழுக்கும் மனதுக்கும் தொடர்பு உள்ளது
அந்த கரணங்களில் மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம். இதில் மனதுக்கு பெரும் பகுதி சித்தத்துடன் தொடர்பு உள்ளதால் சித்தம் பற்றி ஆராயுங்கள். மனம் என்பது கருவி மட்டுமே அதை செயல் படுத்துவது சித்தம் ஆகும்.

அதாவது நடக்கும் எல்லா பதிவுகளும் சித்தம் சேமிக்கிறது தேவை என்றால் மனம் விரித்து காட்டுகிறது.

உங்களுடைய ஆன்மா பரமாத்மாவிடம் இருந்து வரும்போது நீங்கள் மீண்டும் எப்படி பரமாத்மாவிடம் சேரவேண்டும் என்பதை பரமாத்மா பதிவு செய்து தான் அனுப்புகிறார். ஆனால் நீங்கள் பூமியில் வந்த அனுபவம் மற்றும் சம்பவங்களின் பதிவுகளை மட்டுமே எடுப்பதால் கடவுளிடம் சேரமுடியவில்லை.

இந்த பதிவுகளை பதிவு செய்து மற்றும் விரித்து காட்டும் சக்தி இந்த மனதிற்க்கு உண்டு.
இந்த மனதை சரியான முறையில் இயக்க தெரிந்தால் சித்தபதிவுகளை மாற்ற முடியும்.

ஆழ்நிலையில் உள்ள கடவுள் என்பவர் போட்ட பதிவுகளை திறந்து அவரிடம் செல்லமுடியும்

சமஸ்கிருத வார்த்தையில் சொல்லாமல் புரியும்படியாக சொல்லவேண்டுமானால்

கிளிஜோசியம் தெரியுமல்லவா அது தான் இந்த சித்த பதிவு வெளிவரும் முறை


அதாவது கிளி ஜோசியம் பார்க்கும்போது என்ன நடக்கும் யோசிக்கவும்
நீங்கள் கிளிஜோதிடரிடம் போய் “எனக்கு ஒரு சீட்டு எடுத்து கிளியை போட சொல்லும் அய்யா!“ என்பீர்கள்.பின் அந்த கிளிகூண்டு திறக்கவேண்டும், கிளிக்கு முன் சில சீட்டு கட்டுகள் அடுக்கி இருக்கும்.கிளி வெளியே வரும் சுற்றும் முற்றும் பார்க்கும் உங்களையும் பார்க்கும் பல சீட்டுகள் தள்ளி ஒரு சீட்டு எடுத்து கொடுத்து உள்ளே சென்று அது இருக்கும். அதன் பின் சீட்டை பிரித்து நடக்கவேண்டியதை ஜோதிடர் கூறுவார் நீங்கள் கேட்பீர்கள்.

இது தான் சித்தபதிவு வெளியேரும் கருத்து,


அதாவது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பதிவு தான் சீட்டுகட்டு , கிளி தான் மனம், ஜோதிடர் தான் சூழ்நிலை, நீங்கள் சும்மா இல்லாமல் சூழ்நிலையில் சிக்கும்போது அது மனம் எனும் கிளியின் கூட்டை திறக்கும் வெளியே வந்த மனம்(கிளி) உங்கள் காலநேரம் கணித்து, அதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என பார்த்து ஏற்கனவே உள்ள பதிவுகளை ஆராய்ந்து ஒரு பதிவை வெளியிடும். இந்த பதிவு சூழ்நிலையின்(ஜோதிடர் வார்த்தையில்) கைக்கு போய் அப்படியே செயல்படும் இது தான் சித்தபதிவு வெளிபடும் முறை .


இப்படிபட்ட சித்த பதிவுகளை மாற்றலாம் அல்லது மேல்பதிவு செய்யலாம்.

இந்த சித்தத்தில் கடவுள் பதிவை திறந்தவர்கள் ஞானிகள்,சித்தர்கள்,மகான்கள் இன்னும் என்ன பேரோ அவர்கள் எல்லாம் அடங்குவர்.

அப்படியானால் நீங்களும் ஞானி தான் இன்னும் அந்த பதிவை திறக்கவில்லை. இதை தான் ஞானம் என்பது உனக்குள் இருந்து வருவது என்பார்கள்.புறகாரணிகள் அனைத்தும் தூண்டுதல் மட்டுமே.

இப்படி சித்தத்தை வைத்து அஷ்டமா சித்து செய்வது,சித்தர் ஆவது,கடவுள் ஆவது(கடவுளோடு கலப்பது) என அனைத்தும் முடியும்.

இப்படி பட்ட கடவுள் தன்மை அடையவைக்கும் சித்தத்தை எப்படி திறப்பது,
சூழ்நிலையை எப்படி அமைப்பது,

இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதை அறிய நாளைய பதிவில் காண்போம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன் 

August 21, 2016

மறைக்கப்பட்ட தமிழர்கலைகள் பாகம் - 1

யாழ் மீட்டி யானையை வீழ்த்தும் தமிழர்கள்

 யாழ் மீட்டுதல் - ஓர் ஆய்வு

யாழ் மீட்டுதல் ஒரு பெரிய கலையா? என்றால் இல்லை,ஆனால் யாழ் மீட்டி ஒரு உயிரை பறிப்பது, உடலை பொத்தல் பொத்தலாக கிழிப்பது என்றால் பெரிய கலை தானே.

சாதரணமாக யாழ் இசைக்காக உருவாக்கபட்டது தான். முதல் யாழ், வில் யாழ் என கூறுகிறார்கள்.

இங்கு யாழ் பற்றிய மறைக்கப்பட்ட விடயங்களை மட்டும் ஆராய்வோம்.

யாழ் வைத்து போர் செய்யும் உத்தி ஒன்று உள்ளது. அதாவது படை கொண்டுவருவோரை தடுத்து நிறுத்தி யாழ் மீட்டி அவர்களுடைய உடல்  நரம்புகளை வெட்டி(cutting) விடுதல்


காலட்படையை தாக்க வில்யாழ், யானைகளை மட்டும் தாக்க மகரயாழ், குதிரை மட்டும் தாக்க சகோட யாழ், செங்கோட்டியாழ், படைவீரர்களுடன் சேர்த்து தாக்க *பேரியாழ்.* இது எல்லாம் இசையிலும் பயன்பட்டது ஆனால் போரில் பயன்படுத்தும் முறை வேறு.

யாழ் மீட்டுதல் போர்முறையில் மீட்டலின் தெருட்டல்,உருட்டல் வகையில் அதிகபடியாக மீட்டுவதை குறிக்கிறது.

யாழிசை நூல் என்பது நரம்பின் மறை
     ---- தொல்,எழுத்ததிகாரம்

இங்கு நூல் என்பது யாழில் இசை மீட்டும் குறிப்பு நூல்(புத்தகம்)

இந்த யாழ் குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு தயாரித்தால் மட்டுமே இது போன்ற முறைக்கு வேலை செய்யும் என்பது குறிபிடதக்கது.


இவை அனைத்தும் இயற்கையாக உள்ள மரம் , விலங்குகளிடம் இருந்து மூல பொருள் எடுப்பது என்பது யாழிசை நூல் கூறுகிறது.

இப்படி தயாரித்த யாழை வைத்து தான் போரில் வெற்றி பெற்றனர்.

இந்த கலை நம்மிடம் கற்று சீனர்கள் போரில் பயன்படுத்தி வந்தனர்.

இதை பற்றி சீன படத்தில் இந்த கலையை காட்டி இருப்பார்கள்,அது பற்றி அந்த இயக்குனர் கூறுகிறார்.


இது குறித்து Stephen chow (இயக்குனர்)

" kung fu hustle படத்தில் pipa,zheng( யாழ் போன்ற சீன இசைகருவி) மீட்டி எதிராளியின் உயிர் நரம்புகளை அழித்துள்ளனர். இது பண்டைய சீன போர்கலையில் நாம் மறந்த கலை அதையே காட்டியுள்ளோம்." என்றார்

உண்மையில் அவர்கள் மறந்த கலை அல்ல. நாம் இழந்த போர் கலை தான் இது. இந்த pipa,zheng இசைகருவி மகரயாழ் , செங்கோட்டியாழ் வகையை சார்ந்தது.
 
சீன யாழ்

சீன யாழ்

இந்த யாழில் இருந்து தான் வீணை உருவாக்கபட்டது இது யாழ் இருக்கும்போதே உருவக்கபட்டது. இது வந்ததால் தான் யாழ் மறைந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற யாழ் இப்போது தயாரிக்க சில மூலபொருட்கள் இல்லை என ஆய்வு சொல்கிறது

யாழ் மீட்டி மீன் பிடித்தல்,இறை வழிபாடு செய்தல் என பலவகையில் யாழ்கள் பயன் தந்துள்ளது.


எது எப்படியோ இந்த *யாழ்மீட்டி போர்கலை* அழிந்தது, மறைந்தது என்பது வருந்தம். தமிழன் போர்கலை மிகவும் வலிமை என்பது இதுவும் ஒரு சான்று.

வாழ்க தமிழர்கலைகள்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 7சிவபுராணமும்(திருவாசகமும்) தமிழும் ஓர் ஆய்வு – 3

மாணிக்கவாசகர் சிவபுராணம் கூறிய பின் கீர்த்தித் திருஅகவல் கூறியிருப்பார்.இது அகவல் என்றால், இலக்கண படி, தலைப்பு பற்றி உண்மையை கூறுதல். அதாவது திரு என்கிற குருபிராணை பற்றிய அகவல்.

சற்று கவனிக்க  அதில் சிவகுருவின் பெருமை அனைத்தையும் கூறி  கடைசி இரண்டு வரியில்

“பொலிதரும் புலியூர் புகுத்தி இனிது அருளினான்
  
"ஒலிதரு கயிலையின் உயர்கிழவோனே

கயிலையின் உயர்கிழவோன் என்பது யாரு? வேறு யாரு சிவன் தான். 

மாணிக்கவாசகர் சிவன் தான் என்னை அழைத்துவந்தான் என்று கூறியவுடன் பல்லோரும் வணங்கி உள்ளே வழிவிட்டு பாதையை காட்டுவர்.

இப்படி தான் யார் மூலம் இப்பிராண உலகத்தில் வந்தேன் என்று கூறி


அடுத்து திரு அண்டபகுதிக்கு செல்கிறார் பிராண உலகம் தாண்டி அதி சூட்சம் என்று சொல்லுகின்ற பிரபஞ்சத்தின் பகுதிக்கு செல்கிறார் பின் அதை விளக்கி இந்த ஆன்மா வந்த பாதைக்கு செல்கிறார்.அதன் வழியாக சென்று பேராத்மா எனபடும் அவரை சந்தித்து மீண்டும் தன் பிராண தேகத்தில் வருகிறார் இது வரைக்கும் உள்ள விடயங்கள் போற்றி திரு அகவல் 86 வது வரி வரைக்கும் கூறுகிறார்.

அதற்கு அப்புறம் மீண்டும் போற்றி பாடி பிராண வலிமை பெற்று திரும்புகிறார்.இதெல்லாம் குறைந்த நிமிடங்களிலும் நடக்கலாம் அது பற்றி பின் பார்ப்போம்

மாணிக்கவசகர்பெருமானுக்கு இந்த பகுதில் நடந்த விஷயம் அனைத்தையும் ஒன்னு விடாமல் மிக தெளிவாக 100 பாடலகளாக அடுத்த திருச்சதகம் என்ற தலைப்பில் 10 தலைப்புகளாக தொகுத்து தருகிறார் இது தான் மிக முக்கியம் இதை கவனமாக ஆராய்க.

சதகம் என்பது இலக்கண படி பார்த்தால், தான் பார்த்த காட்சிகளையும்,தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் விளக்கி கூறும் பகுதியாகும்.


ஞான சாதகர்கள் சிவபரம்பொருளை முறையாக சென்று காணம்போது என்ன செய்யவேண்டும்,என்ன நடக்கும் என்பது கூறுகிறார் இது மிக முக்கியமான பகுதியாகும்

1.சிவபுராணம்
2.கீர்த்தித் திருஅகவல்
3.திருஅண்டப் பகுதி
4.போற்றித் திருஅகவல்
6.திருச்சதகம்

இந்த ஐந்து யோக ஞான பகுதிகளுக்கும் ஒரு பெரிய தாழ்பால் போட்டு மூடியுள்ளார். அந்த யோக ஞான தாழ்பாலை திறக்க ஒரு இசை வேண்டும் அதை முதலில் படித்து பின் இதை படிக்க தெளிவாக விளங்கும்.

அது என்ன என்கிறீர்களா? அது தான் மாணிக்கவாசகர் இயற்றிய "யோகஞானதாழிசை" என்ற பாடல்கள் ஆகும்.

இதில் மொத்தம் 12 பாடல்கள் மட்டுமே ஆனால் மேற்கண்ட ஐந்து பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் தான் இது. இதை படித்து ஞானம் பெற அனைவரையும் வேண்டுகிறோம்.

இதை மேம்போக்காக படித்து அர்த்தம் கொள்ளவேண்டாம் இது அனைத்தும் யோக ரகசியத்தை கூறும் பகுதி

இத்துடன் திருவாசக சூட்சமங்களை முடித்து கொள்வோம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி 


வாழ்க வளமுடன்

August 19, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 6


சிவபுராணமும்(திருவாசகமும்) தமிழும் ஓர் ஆய்வு – 2இது சூட்சம பயணத்தை உள்ளடக்கியது


இப்படி மாணவன் தன் ஸ்தூல,சூட்சம தேகங்களை வழுபடுத்திய பின் சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.

அடுத்து21வது வரி கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார் உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற, படித்த பல விடயங்கள் அங்கு வரும் அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும் அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.
                   
                                       
                                        


இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.

அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல்

“விலங்கு மனத்தால் விமலா”  

விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடபடுவது, அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது.இது மிகவும் முக்கியம் நண்பர்களே!!!

மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது அதை தக்க குரு மூலம் அறிக

இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும் அது தான் சிவபுரத்தின்(பிராண உலகத்தின்) நுழைவுவாயில், அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்

அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார். இது எல்லாம் யோக சாதனை என கருத்தில் கொள்க

சிவபுரம் என்பது பிராண உலகம் அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதைபோல் இருக்கும் அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள் அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.

முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும்.பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.
அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி  அழைத்து செல்லுவர் என்கிறார்.

அனுபவ சூட்சம யாத்திரை


இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும். அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும் இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும் அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால்  அங்கு பயணத்தில் குழப்பம் வரும் பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.

இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும். அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும் இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான்.நண்பர்களே!! முதல் முறை மட்டுமே தடுமாற்றம் நடக்கும் பின் அனுபவம் கைகொடுக்கும்,இது அனுபவ உண்மை

மேற்கண்டவற்றில் நான் சொல்லுவதும் மாணிக்கவாசகர் சொல்லுவதும் ஒன்றுதான் என உங்களுக்கு புலப்படும்.

சூட்சம பயணம் இயல்பாகவே தூக்கத்தில் நடக்கும் ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகும்

இங்கு நிறைய விஷயம் மறைப்பாக உள்ளது. ஆதலால் இது பயிற்சி அல்ல,அல்லவே அல்ல!

இனி அடுத்த பகுதியில் உள்ளதை கீர்த்தித்திரு அகவல்,திரு அண்டபகுதி,போற்றித் திரு அகவல் ,திருச்சதகம் சுருக்கமாக கூறி தமிழும் திருவாசகம்  ஆய்வை நிறைவு செய்வோம்.

உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி


வாழ்க வளமுடன்

August 17, 2016

தமிழ் மொழி ஓர் தந்திர மொழி பாகம் – 5


 சிவபுராணமும் தமிழும் -  பாகம் 1சிவபுராணம் என்பது சிவனை பற்றியும் அவன் இருக்கும் இடமான சிவபுரத்தையும் கூறும் ஒரு பகுதியாகும் (இங்கு சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து வரியை ஞாபகம் வைக்க)

தினமும் நமக்கு இறைவனால் கொடுக்கபடும் ஒரு துளி அமிர்தம் அதை முழுவதுமாக நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் ஒரு நூல் தான் இந்த சிவபுராணம்.

சிவபுராணத்தின் முதல் வரியில் இருந்து, முதல் ஐந்து வரிகள் வாழ்க, வாழ்க என முடியும் வரியை கவனிக்க வா…ழ்….க, இது தமிழில் ழ்… என்ற எழுத்து மட்டுமே உள்நாக்குவரை சென்று தொட்டுவரும்.

உங்களுக்கு அமிர்தம் இயற்க்கையாக சுரக்கும் ஒரு துளி, உள்நாக்கில் படர்ந்து இருக்கும் அதை நாக்கு நுனியால் தொடும்போது உங்களுக்கு பலம் கூடும்.

இதனால் தான் இதை ஓதும் முன் உடல் சுத்திகள் செய்து அதிகாலை பிரம்மத்தில் ஓத சொன்னார் வள்ளலார்.

இந்த நேரத்தில் அமிர்தம் கொட்டாது சிறு துளி அளவாக ஊரும், அதாவது சுரக்கும் அதை பிடித்து உடல் முழுவதும் பரவ செய்ய வாழ்க வாழ்க என ஆறு முறை பாடலில் வரும் இவ்வாறு அமிர்தம் உண்டு, ஸ்தூல உடலை வழுபடுத்திய பின் அடுத்த நிலைக்கு செல்வோம்

அடுத்தது வெல்க வெல்க என்று அமிர்தம் கொடுத்த இறைவனை உடலில் வெளிபடுத்தி அடுத்த பகுதிக்கு செல்கிறோம்

இதற்கு அடுத்த ஆறு வரிகள் இது சூட்சம உடல் என குறிப்பிடும் பிராண உடலை வழுபடுத்த போற்றி போற்றி என கூறுகிறோம். போ….ற்….றி  இதில் முதலில் உள்ள போ என்றால் ஓரெழுத்து சொல் அனுப்புதல், நடுவில் உள்ள எழுத்து ‘’ற்’’ அண்ணாக்கு என்னும் அன்னத்தில் தொடும். இங்கு நாக்கு தொடும் போது பிராண உடல் வளிமையாகும்.


அது எப்படி பிராண சக்தி சூட்சம உடலுக்கும் போகும் என கேள்வி கேட்க வேண்டாம், தீர ஆய்வு செய்து தான் விளக்கபட்டது.இது புரிய மெய்யென்ற(உடம்புக்குரிய)எழுத்து அறிந்திருக்க வேண்டும்.

நண்பர்களே ஒன்று நன்றாக நினைவில் கொள்ளவும் அடியோ,வினையோ(சூட்சம)பிராண உடலை தாக்காமல் ஸ்தூல உடலை தாக்காது பிராண சரீரம் வலிமையானால் தூல சரீரம் இன்னல்கள் வேகமாக தாக்க தூல உடல் இடம் கொடாது.

நான் செய்வினை , செயபாட்டு வினை அனுப்பவேண்டுமானால் முதலில் உங்கள் பிராண உடலில் தான் விளைவை ஏற்படுத்துவேன்.பின் அதுதான் ஸ்தூல உடலை பாதிக்கும்.

 சரி இந்த எழுத்தை ஆராய்வோம்

வாழ்க  +  போற்றி  = 2 : ½ : 1(மாத்திரை அளவு)

மேற்கண்ட மாத்திரை அளவு ஒன்று தான் ஆனால் பிறக்கும் இடமும் பொருளும் வேறு இது பற்றி பின் மெய் எழுத்து பதிவில் விரிவாக காணலாம்

போற்றி என்று சொன்னால் பிராண தேகம் வளிமையடையும் இதனால் தான் அனைவரும் போற்றி மாலை பாடுகின்றனர்.  

உம்: ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

பிராண தேகம் வலிமை என்றால் நீங்கள் வலிமை மிக்கவர்

இப்படி சிவபுராணம் பாடும்போது ஸ்தூல சூட்சம உடல் பலம் அடைந்து பதினேழாவது வரிக்கு போனால் சிவன் என்பவர் சிந்தையுள் நிற்பார், இப்போதான் நிற்க வைக்க முடியும்.

அவரிடமே அருள் பெற்று வினை முழுவதும் அழிய சிவபுராணம் பாட ஆரம்பிக்க போறேன் என்கிறார் இருபதாவது வரியில்,

அப்பிடினா!! இப்ப பாடினது எல்லாம், சூட்சம தேகங்களை வலுப்படுத்தி சொன்ன வேலையை செய்வதற்க்காக மட்டுமே என உணர்க

இனிமே தான் சிவபுரத்திற்க்கான முகவரியை சொல்லி அங்கு செல்வது எப்படி என விளக்குகிறார்.

சிவபுராணம் பகுதி இரண்டில் மீதியை காண்போம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

August 14, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் - 4


நெடில் எழுத்துகள் - ஓர் ஆய்வு

நெடில் எழுத்துக்கள்  நாம் ஏற்கனவே பார்த்ததுதான்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

இந்த ஏழு எழுத்துகளும் சித்துகள் என நாம் சொல்லும் வேலையை செய்யவல்லது.


சித்து வேலைகள் இப்போது நமக்கு தேவையில்லை அதனால் இதை கருத்தில் கொள்ளவேண்டாம்.

குறிப்பிட்ட ஓசையுடன் இந்த எழுத்துகள் இசைதமிழில்  பயன்படுத்தபடுகிறது.

ஏழிசை எழுத்துகள் இவைதான் இதை கர்நாடிக் சங்கீதத்தில் ச ரி க ம ப த நி என்பார்களே அது போல தான் இதுவும்.

இந்த நெடில் எழுத்துகளை பயன் படுத்துவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, பிராணா சக்தி அதிகமாக வெளியே செல்லும் அதை சித்துவேலை செய்வதற்கு ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள்
யாழ்

தாவது குறில் எழுத்து சொன்னால் ஒரு மாத்திரை வீதம் செலவு நெடிலாகில் இரண்டு மாத்திரை வீதம் செலவு.

இது அதிகபட்சமாக 4 மாத்திரை வரை நீளும் அது எழுப்புகிற ஒலியை பற்றியது.

ஆண் என்பவன் அதிகபடியான பிராணணை இழக்கிறான் அவன் நெடிலில் வருகிறான்

ஆண் - நெடில்

பெண் என்பவள் தன் பால் அனைத்து சக்தியும் சேகரிக்க தெரிந்தவள் அவள் பிராணனை அதிகம் இழப்பதில்லை,அவள் குறில் சொல்லில் அடக்கம்

பெண் - குறில்

அதிகபடியான நெடில் எழுத்துகள் இலக்கணமும் இசைதமிழும் பயன்படும் போது பிறர் மீது பிராணனை செலுத்தி எதிராளியை செயலிழக்கச் செய்ய முடியம்.

குறில் எழுத்தை பயன்படுத்தி பிராணை வழுபடுத்தி பிராணதேகத்தை வெளிபடுத்தலாம். இதற்கு மெய் எழுத்துக்கள் துணைபுரியும்.

இந்த ஏழு எழுத்துகளும் இசையாக நான்கு மாத்திரை நீட்ட குறிப்பிட்ட விலங்கின் ஒலியில் இருந்து எடுக்கபட்டது

மயில்,மாடு,ஆடு,கிரவுஞ்சபறவை,பஞ்சமம், குதிரை, யானை இந்த ஒலிகள் நெடிலுடன் ஒத்துபோவதால் இசைதமிழில் இது கொடுக்கபட்டது.


இசை தமிழில் இலக்கணம் மிக முக்கியம் இதை தவறாக ஒரு காலத்தில் பயன்படுத்தியதால் அந்த இலக்கணநூல் அழிக்கபட்டது.( இது பற்றி இசை தமிழில் விரிவாக காண்போம்)


தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் பத்தில் ஐந்து எழுத்து பிராணை அதிகம் கொடுக்கவும் ஐந்து எழுத்துகள் பிராணனை நாம் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவருக்கு கொடுக்க தந்திரத்தில் பயன்பட்டது

அந்த மீதி இரண்டு எழுத்துகள் ஆய்வில் உள்ளது அதை குருவருள் இருந்தால் மற்ற பதிவில் பார்ப்போம்.

இப்படி உயிர்கொடுக்கும் வேலை செய்வதால் உயிர் எழுத்து என வகைபடுத்தினர் இது எழுத்துக்கும்,மனிதனும் உயிர் கொடுக்கும் மொழி என்பதை நினைவில் நிறுத்தவும்.

உயிர் எழுத்து ஆய்வு இத்துடன் முடித்து கொள்வோம்.

இது ஒரு தகவல் பகிர்வாக எடுத்துகொள்ளவும்.

அடுத்து நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க

சிவபுராணம்,
கந்த சஷ்டி கவசமும்

சிறு சூட்சம குறிப்பு தருகிறோம் அது குறிப்பு மட்டுமே வரும் முழுவிளக்கம் தெரியாது அது அவரவர் ஆய்வுக்கே விடுகிறோம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்

ஈரோடு


நன்றி
வாழ்க வளமுடன்