March 28, 2013

மூலிகை மர்மம் - தொட்டால் சுருங்கி

மூலிகைகளில் ஓவ்வொரு மூலிகையும்  ஐந்து வகையாக பார்க்கலாம் அது போல சுருங்கும் இனத்தில் உள்ள மூலிகைகளில் முதல் வகையான தொட்டால் சுருங்கி பற்றி இன்று பார்ப்போம்

தொட்டால் சுருங்கி நீர்பாங்கான இடத்தில் அதிகம் வளரும்.தொட்டால் சுருங்கிக்கு காப்பு கட்டி பிடுங்கி வேரை தாயத்தில் அடைத்து பயன்படுத்தலாம் அல்லது வேரையும் சிறிது இலையையும் காயவைத்து கலந்து பொடிசெய்து வசியமாகும் நபர்க்கு கொடுக்கலாம்

வசிய மூலிகையில் இது முதலிடம் வகிக்கிறது.மாந்திரீகத்திலும் பயன்படுகிறது 

தொடர்ந்து 48 நாட்கள் பெண்உறவு,மச்ச, மாமிசம், பெண் தீட்டு (மாதவிலக்கான பெண்களிடம்யிருந்து ) இவற்றிலிருந்து விலகி  தொட்டால் சுருங்கி செடியை காலை மாலை
தொட்டால் சுருங்கி
 தொட்டு வந்தால் மனோசக்தி என்கிற காந்த சக்தி கிடைக்கும்

ஐந்து இனங்கள்

1.தொட்டால் சுருங்கி அல்லது தொட்டால் வாடி 

2.நின்றால் சுருங்கி அல்லது  நிழல் பட்டால் வாடி

3.நிலம் சுருங்கி அல்லது நிலம் புரண்டி

4.சந்திரன் சுருங்கி ( தாமரை) சந்திரன் வாடை பட்டதும்  சுருங்கி விடும்(அதாவது ஆணி வேர் மறைந்து விடும்)

5.சூரியன் சுருங்கி  (அல்லி)  சூரியன் வாடை பட்டது சுருங்கி விடும் (அதாவது ஆணி வேர் மறைந்து விடும்)




அடுத்து   மூலிகை மர்மத்தில் நின்றால் சுருங்கி அல்லது  நிழல் பட்டால் வாடி




March 14, 2013

திருமுக்கூடலூர் பாகம் -2

சதாசிவ பிரமேந்திரர் வரலாறு

சதாசிவபிரமேந்திரர் மதுரை மாநகரில் 17-18 ம் நூற்றாண்டில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.இவரின் தந்தை சோமநாத அவதானியார் மற்றும் தாயார் பெயர் பார்வதி அம்மையார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இளம் வயதிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோரிடம் முறையாக சாஸ்திரங்களை கற்று தேர்ந்தார். பரமசிவேந்திராளிடம் கல்வி கற்று வரும் போது இவரின் திறமைகளை கேள்விப்பட்டு மைசூர் மகாராஜா இவரை சமஸ்தான வித்வானாக்கி கொண்டார். மைசூர் சமஸ்தானத்தில் மற்ற வித்வான்களை எல்லாம் வாத திறமையில் தோற்கடித்தார். இதை கேள்வியுற்ற அவரின் குரு பரமசிவேந்திராள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மவுனத்தை கடைபிடித்து வந்தார். மேலும், மனிதர்கள் நடமாட்டம் அற்ற காடு, மலைப் பகுதிகளில் சென்று வசிக்க ஆரம்பித்தார்.
புன்னைநல்லூர் மரியம்மன்





திருமுக்கூடலூர் அக்னீஸ்வரர்

மகான் அடிக்கடி வரும் கோவில் என்றால் அது அக்னீஸ்வரர் கோவில் தான் .இங்கு தான் 
சங்கராச்சாரியார் பூஜை செய்தல்
மகான் தவத்தில் ஈடுபட்டு அஷ்டமா சித்தியும்  அடைந்தார். அருணகிரிநாதர் வந்து பதிகம் பாடிய திருக்கோவில் இதுவாகும் .அருணகிரிநாதர் மொத்தம் 11,000  திருபுகழ் பாடியுள்ளார் ஆனால் நமக்கு கிடைத்தது 1300 தான், அதே போல் திருவள்ளுவரும் 22,500 திருக்குறள் பாடியுள்ளார் ஆனால் நமக்கு கிடைத்தது 1330 குறள் மட்டும் தான். சதாசிவ பிரமேந்திரர் சமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. திருமுக்கூடலூர் அக்னீஸ்வரர் கோவில்  செல்லும் வழியில் நெரூர் உள்ளது 

மகானின் சாதனைகள்


மகானின் ஜீவ சமாதி  
புதுகோட்டை மன்னருக்கு  மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது ஆடையில் எடுத்துச் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

புன்னைநல்லூர் மாரியம்மன் சிலையை தன் கையாலெயே புத்து மண்ணை கொண்டு சிலை பிரதிஷ்டை  செய்தார். இதை மகாசக்தி மாரியம்மன் திரைபடத்தில் காணலாம்  

யோக கலையில் உள்ள பிரிவான மந்திர யோகம், பரிச யோகம், பாவ யோகம், அபாவ யோகம், மகா யோகம்  போன்ற ஐந்திலும் தேர்ச்சி பெற்றவர்

இம்மகான் மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.


இவருடைய கை ஒரு காவலரால் வெட்டபட்டது வெட்டிய கையை எடுத்து மீண்டும் ஒட்டினார் ஒட்டிக்கொண்டது 


சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) இலிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் பெளர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது