October 31, 2012

மூலிகை மர்மம் - நாயுருவி

நாயுருவி இனம்


நாயுருவி (ஆண்)

செந்நாயுருவி (பெண்)

  நாயுருவியில் இரண்டு உண்டு அதில் ஆண்   நாயுருவி பச்சையாகவும் பெண் நாயுருவி சிவப்பாகவும் உள்ளது இதில் பெரும்பாலும் வசியத்திற்க்கு பெண் நாயுருவி பயன்படுத்தபடுகிறது இதை செந்நாயுருவி என்றும் கூறுவர் இதன் படங்களை மேலே கொடுத்துள்ளேன் இது தண்டுபகுதியில் சிவந்த நிறத்தில் இருக்கும் அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும் இது அட்டகர்ம மூலிகைகளில் ஒன்றாகும் பெரும்பாலும் மருத்துவத்தில் இதையே பயன்படுத்துகின்றனர் இது இல்லை என்றால் தான் அதை பயன்படுத்துகின்றனர் 

நாயுருவி மருத்துவப் பயன்கள் 
                          நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். 

மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்


நாயுருவி மர்மங்கள்

இதன் விதையை சோறு போல் சமைத்து உண்ண ஒரு வாரத்திற்க்கு பசி எடுக்காது தேவையானவை இதில் இருந்தே பெறப்படுகிறது. மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

இதன் இலையை மென்று விழுங்கி சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது. குறிப்பு சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும் தவறாக செய்து வாய் கிழிந்து விடபோகிறது.கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது  குடல் கிழிந்து விடும் . மேலும் இது அனைத்தும் ஒரு தகவல் பகிர்வு தக்க குருவின் உதவியுடன் செய்து பார்க்கவேண்டும் என கேட்டுகொள்கிறேன்
October 14, 2012

உலக அழிவு 21-12-2012 PART 2

உலகம் அழிகிறதா?இல்லையா? என்ற கேள்விக்காக நான் இதை பதிவு செய்யவில்லை இந்த கட்டுரையில் பல விஷயங்களை உயர்திரு ராஜ்சிவா அவர்கள் ஆதரபூர்வமாக படஙளுடன் வெளியிடுகிறார் அதுதான் இந்த கட்டுரையின் சிறப்பு.மேலும் அவ்ர்கள் விமானம் ,ராகெட்,கால்பந்து விளையாடியது,அவர்கள் அமைத்த பிரமீடு விளக்கம்,விகிலீக்ஸ் பத்திரிக்கை பற்றி கூருவது அனைத்தும் வியப்பை தருகிறது. மேலும் ரகசிய கட்டிடங்கள் கட்டபடுவது என அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என பொதுவாக கூரியது எனக்கு மிகவும் பிடித்தது அதனால் தான் இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என வெளியிடுகிறேன்.முதல் பகுதியை வெளியிட்ட மூன்று மணி நேரத்திலே (41)நாற்பத்தியோரு மெயில் வந்தது இரண்டாம் பகுதியை கேட்டு .இந்த கட்டுரை வெளிட்டதன் நோக்கம்.இதில் பல விஞ்ஞான தத்துவங்கள் அடங்கியுள்ளன என்றுதான்

உதாரணம்:
இந்தபடத்தை பெரிதாக்கி பார்க்கவும்
முதல் பகுதியில் 92 பக்கங்கள் உள்ள கட்டுரை பகிர்ந்துள்ளேன். இது 213 பக்கம் உள்ள முழு கட்டுரை அதை அப்படியே கொடுத்துள்ளேன் இதில் நான் எதுவும் திருத்தம் செய்யவில்லை இதன் அனைத்து பதிப்பு உரிமையும் உயிர்மெய் பத்திரிக்கையே சார்ந்தது தகவல்களை பகிர்ந்து கொண்டதற்க்கு உயர்திரு ராஜ்சிவா அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த முழு கட்டுரை

http://www.ziddu.com/download/20596603/JudgementDayEndOfWorld2Completed.pdf.htmlOctober 10, 2012

உலக அழிவு 21-12-2012 PART-1

உலகம் அழிவு குறித்து பல பேர் கூறியிருக்கிறார்கள்.அதிலும் மாயன் காலண்டர் 21 டிசம்பர் 2012 உடன் முடிகிறது.பல பேர் அவர்களுடைய  காலண்டர் முடிகிறது என்கிறார்கள்.ஆனால் அவர்கள் ஏன் அதோடு நிறுத்தினார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் அவ்ர்கள் காட்டுவாசிகள் அல்ல என்றும் மேலும் வேதியியல், வான சாத்திரம், ரசவாதம்,கட்டிடகலை போன்றவற்றில் சிறந்து விளங்கினர் என்றும்,இவர்களுக்கு எப்படி இந்த சக்திகள் வந்தது என்றும் நாம் பல உண்மையான விபரங்களை கீழே கொடுத்துள்ள மின்னூலை படித்து தெரிந்துகொள்ளலாம். இது உயிர்மெய் பத்திரிக்கையில் வந்த தொடர் இணையத்தில் கண்ட இந்த நூலை உங்களுக்கு தொடர்பு படுத்துகிறேன்


சூரியபுயல்

இதன் முதல் பகுதி 93  (213) பக்கம்:

http://www.ziddu.com/download/20566468/2012JudgementDay.pdf.htmlOctober 9, 2012

இராமேஸ்வரம்

இங்கு உள்ள இராமநாதசுவாமி கோவில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் இராமேஸ்வரமும் ஒன்றாகும். இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.


தல வரலாறு: இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறதுதமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.


கோவில் அமைப்பு: இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும்.           இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.


கோவில் தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன