October 28, 2013

கருவூரார்

சித்தர்களின் SUPERSTAR போகரின் இளைய தளபதி தான் கருவூரார்

கருவூரார் போகரின் சீடர்களில் ஒருவர்.போகருக்கு 63 சீடர்கள்,அதில் தலைமை பொறுப்பு கொண்டவர்கள் ஏழு பேர் ,அவர்கள்
போகரின் பிரதான ஏழு சீடர்கள்
புலிப்பாணி,கருவூரார்,கோரக்கர்,கொங்கணவர்,யாகோபு,ரோமரிஷி,பாபாஜி நாகராஜ். இவர்களின் தலைமை குரு வேறொருவராக இருந்தாலும் போகரின் கீழ் அந்தந்த தலைமை குருவின் அறிவுறுத்துதலின் பேரில் போகரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.நவபாஷாண சிலை செய்வதில் பெரும் பங்கு கொண்டவர்கள் இந்த ஏழு பேர்,இதில் கருவூராரும் ஒருவர், இவரை பற்றி பல கதைகள் உண்டு.
கருவூரார் மூல மந்திரம்
இரண்டு கதைகளுக்கு சான்று உள்ளது.ஒன்று தஞ்சை பெரியகோவிலின் சிலை நிறுவியவர் மற்றொன்று, சிதம்பரம் நடராஜர் சிலையை செய்தவர்.இரண்டும் போகரின் வழிகாட்டுதலால் செய்தார்
கருவூரார் நூல்

இவர் அட்டமாசித்திகளை மக்களுக்கு எளிதில் போதிக்க எந்திர முறையை கையாண்டார்.அனைத்து சித்தர்களின் கோபத்திற்க்கு உள்ளாகி பிறகு போகர் தடுத்தாட்கொண்டு சில ஏடுகளை மட்டும் தந்தார்.அதை தான் நாம் இப்போது கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து என்ற நூலாக படிக்கிறோம்.
போகரும் 63 சீடர்களும்

இந்த நூலை மூடர்களுக்கு கொடுக்காதே என்று இந்நூலில்லேயே கூறுகிறார் .சித்தர்கள் வலைதளங்களை பார்வையிடுபவர்கள் மூடர்கள் அல்ல மேலும் அவர்கள் ஆசியால் தான் இவ்வலை தளங்களை பார்வையிடுகிறோம். கருவூரார் அருளிய  கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து  என்ற நூலை பகிர்கின்றேன்
 நூலுக்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

முந்தைய பதிவில் காக புஜண்டர் அருளிய மந்திரம் எது என கேட்ட நண்பர்களுக்கு,  அது நற்பவி என்பது தான் மந்திரம் என கூறிக்கொள்கிறேன்.. இது மிகவும் பிரசித்தி பெற்றது


                                                    ஓம் கருவூர்தேவாய நம!!!


October 11, 2013

மந்திரம்-காகபுஜண்டர்(பாகம் -1)

காகபுஜண்டர் தோற்றம்:
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
கோரக்கரின் குரு காகபுஜண்டர்
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.

காகபுஜண்டர் அருளிய அற்புத மந்திரம்

                                               "நற்பவி "   (மந்திரம்)

     இது தான் அந்த மந்திரம் இதை எப்பவேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது .ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்  
மூலிகைமணியில் 1990ல் வந்த பக்கம்
                        "

இந்த மந்திரம் பிரணவத்திற்க்கு இணையானது இதை பலரும் கார் ,வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்றிருக்கின்றனர். மேலும் இது பற்றி மேலுள்ள மூலிகை மணி புத்தகம் கூறுவதை கவனியுங்கள்.இதை தேடிசிரமபட்டு இப்பக்கத்தை கொடுத்துள்ளேன். இது நிச்சயம் பயன்கொடுத்தது, முயற்சி செய்து பாருங்கள்.September 20, 2013

ஓம் என்பதன் அறிய விளக்கம்

ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து தோன்றினால் என்று வரலாறு கூறுகிறது.மேலும் பிரம்மா ஒம் காரத்தை வைத்து தான் உலக ஜீவன்களை படைக்கிறார் .

ஓம் என்பதற்க்கு பிரணவம் என்று பொருள், பிரணவம் என்றால் முடிவில்லாதது என்று கூறுவார்கள்.

இந்த ஓம் என்பதை வைத்து தான் மந்திரம் தொடங்கப்படுகிறது ஏனென்றால் இதுதான் பிரபஞ்ச த்தின் சாவி இதை உச்சரித்து கூறும்போது அந்த சொல் வலிமை அடைகிறது.

ஓம் என்பதை பிரித்தால் அ காரம் உ காரம் ம காரம்

அ காரம் என்பது சிவம்   எண் : 8 இடம் : வலதுகண்  சூரியன்

உ காரம் என்பது சக்தி (பார்வதி) எண் : 2 இடம் : இடதுகண் சந்திரன்

ம் காரம் என்பது இரண்டும் சேர்ந்தது  எண் : 0 இடம் : புருவமத்தி  சுலுமுனை

ஏதாவது வேலை தாய் கொடுத்தால் மகன் மறுத்தால் ரெண்டு எட்டு வைத்தால் முடுந்துவிடும் என்பார்கள். அதாவது ரெண்டும் எட்டும் வைத்து(ஓம் என்ற சொல்லை வைத்தோ, ஓம் என்பதை புருவ மத்தியில் தியானித்து)  தொடங்கினால் வேலை முடிந்தது. இதையே தான் சுலுமுனை சித்தரும் கூறினார்.இதன் கூறும் முறையை முந்தைய பதிவில் கண்டிருப்பீர்.  

ஓம் என்பது பிரணவம் இதற்கு அப்புறம் தான் தெய்வத்தின் பெயர் தோன்றும்.

ஓம் சரவணபவ

ஓம் கம் கணபதியே நம

ஓம் சக்தி ஓம்

ஓம் சிவசிவ ஓம்

ஓம் நமோ நாராயணா

ஓம் என்ற பிரணவத்தை அடுத்து பிரணவ பெயர் வரக்கூடாது இது கட்டாயம்.

ஓம் என்பதற்கு இணையான தெய்வ பெயரும் உள்ளது அதற்கு முன் ஓம் என்று போடக்கூடாது

நமசிவய

நமசிவய என்பது பஞ்சாட்சரம் இது 51 அட்சரங்களை கொண்டது அதனால் இதை தனியாகத்தான் கூறவேண்டும்.

ஓம் நமச்சிவாய என்பது ஒலி வேறு இதன் முன் ஓம் போடலாம்.  இது நமசிவய க்கு நிகரானது தான் ஆனால் இங்கு வ க்கு வா வருவது,ச் வருவது சுட்டிகாட்டவேண்டியது

ராம்

இது ராமபிராணுடைய பெயர் இது பிரணவத்திற்கு இணையானது அதனால் தான் ஓம் ராமா என்று கூறமறுக்கிறார்கள்.வைணவத்தில் இது பற்றி குறிப்பு உள்ளது

உமா

இதுவும் பிரணவத்திற்கு இணையானது உமா வை பிரித்தால்  உ + ம் + அ என்பதாம்.இங்கு ஓம் என்பது பின்நோக்கியுள்ளது
அதனால் தான் உமாமகேஷ்வரா என்பார்கள்.

முஸ்லீம் மதத்தினர் அல்லஉ அக்பர் என்பார்கள்
ல்லா என்பது பிரணவம் அதாவது அ உ

கிறிஸ்துவர்கள்  ஆமென்  என்பார்கள்  அதை எப்பொழுதும் கூறுவார்கள்.தொடக்கத்திலும் சரி பிரசங்க முடிவிலும் சரி

ஆமென்   என்பது முன்பு ஆங்கிலத்தில்  om en என்றது  இதை சேர்த்தால் சாத்தானுக்குரிய (omen)சொல்லாக மாறியது, அதனால் OAMen என்றார்கள். இதில் ஓம் என்பது மறைந்துள்ளதை கண்டிர்கள். அதாவது O+A = AU  ( Aum) இதை அப்போதே அவர்கள் கண்டதால் Amen என்ற எழுத்து வடிவம் கொடுத்தார்கள். ஆனால் சொல் ஓம் க்கு தான் சொந்தம்.
 O     சாத்தானுக்கு
 A     கடவுளுக்கு   என  வகுத்ததாக  தெரிகிறது.


இந்த பதிவு ஓம் என்பது பல இடங்களில் மறைந்துள்ளது என்பதை காட்டவே தவிர, தவறு இருப்பின் மன்னிக்கவேண்டுகிறேன்.

                                    ஓம் அகத்தீசாய நம!!
August 10, 2013

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க மந்திரம்


பொதுவாக ஒரு செயலை தொடங்கு முன் அந்த காரியம் வெற்றி பெற ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி பின் அந்த காரியத்தை தொடங்குவோம் சில சமயங்களில் அது தோல்வியில் முடியலாம் ஆனால் பின் வரும் மந்திரத்தை மூன்று முறை கூறி தொடங்கினால் நிச்சயம் 80 சதவீதம் வெற்றி கிடைக்கிறது.

இது நடைமுறையில் உள்ள ஒரு வித்தை .

குறிப்பு : செயல் நல்லதாக இருக்க வேண்டும் தீய செயலுக்கு பயன்படுத்த வேண்டாம்.மேலும் ரோமரிஷி அருளியுள்ள காப்பு பாடலையும் மூன்று முறை கட்டாயம் கூற வேண்டும், சத்தியமாக செயல் வெற்றியில் முடிந்திருக்கிறது.ஒரு சிலருக்கு மட்டுமே தோல்வியடைந்துள்ளது அதுவும் அன்று அவர்களுக்கு சந்திராஷ்டமம்,படுபட்சி நாளாக உள்ளதால் மட்டுமே,வாசகர்கள் அனைவரும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

ஓம் என்பதே பிரபஞ்ச பூட்டின் சாவி

மகா மந்திரம் இதை சுலுமுனை சித்தர் கூறினார்

                 ஓம் ஓம் ஓம்
                 ஓம் ஓம் ஓம்
                 ஓம் ஓம் ஓம் 

இதில் ஒன்பது ஓம் உள்ளது. இதை கூறும் முறை ரகசியமாக வைத்துள்ளனர்.அதை நாம் குருவின் அருளால் மறைக்காமல் கூறுகிறோம். மொத்தம் ஒன்பது ஓம்.ஓம் என்று ஆரபித்து ஓம் என்று முடிக்க வேண்டும்.முதலில் ஒம்ம்ம்ம்ம் என்று கூறி ம் மை அழுத்தி கூறி பின் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் என்று கூறி பின் கடைசி ஓம் மை ம்ம்ம்ம்ம் என்று ம் யில் முடிக்க வேண்டும். இதே போன்று மூன்று முறை கூற வேண்டும்

குறிப்பு: மந்திரம் மனதில் செபிக்க வேண்டும்,ஒரு விரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து செபிக்க வேண்டும்,புலால் உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும் 

ரோமரிஷி காப்பு பாடல் மூன்று முறை பாடவேண்டும் (இது கட்டாயம் மந்திரம் முடித்து கூற வேண்டும்)
சுலுமுனை சித்தர்

                             -மகான் ரோமரிஷிகீழ் காணும் காணெளியில் கோரக்கர்,பதஞ்சலி சித்தர் வரி விட்டுள்ளது இதை சேர்த்து படித்து கொள்ளவும்

                                    
ரோமரிஷி காப்பு பாடல்


   

July 22, 2013

சாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)
 நத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு


நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது)
கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார் 

நத்தை சூரி (மிக எளிதாக கிடைப்பது ஜாலங்கள் மருத்துவங்களில் பயன்படுவது)
  
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
  சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு

  ………………………………………

  ………………………………………
    
உலகத்தில் அநேக மூலிகைக்கு சாபம் உண்டு. இந்த        நத்தைசூரிக்கு சாபம் இல்லை என்கிறார்,
இதையும் பறித்து அப்படியே பயன்படுத்தலாம்.


துளசி,வில்வம் - மூலிகை ரத்தின சிந்தாமணி


மூலிகை ரத்தின சிந்தாமணி என்னும் நூல் சாபம் இல்லா மூலிகை இரண்டு கூறுகிறது அவை பின்வருமாறு
துளசி


ஒன்று துளசி மற்றொன்று வில்வம் இவை இரண்டுக்கும் சாபம் இல்லை என்றும் இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பூஜைக்கு திரும்ப திரும்ப பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.மேலும் இதன் மருத்துவ பயன்கள் அளவிடற்கரியது
மஹா வில்வம்
வில்வம் (சாதாரணமாக கிடைப்பது )
மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அய்யா குப்புசாமி அவர்கள் நிறைய கூறியுள்ளார். அவருடைய வலைதளத்திற்க்கு சென்று பல மூலிகையின் பயன்களை அறியுமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் தெரிவிக்கிறேன்

அய்யா குப்புசாமி அவர்கள் 
        
                  http://mooligaivazam-kuppusamy.blogspot.in/

July 18, 2013

சாபம் இல்லா மூலிகைகள் (பாகம் - 1)திருநீற்று பச்சிலை - கோரக்கர்

குரு கோரக்கர்

கோரக்கர் சந்திர்ரேகை என்னும் நூலில் 144,145 பாடலில் சபநிவர்த்தி இல்லா மூலிகையை குறிப்பிடுகிறார்
…………………………………………………………
……………………………..
………………………………………………………………
………………………………………….
வேகமுற்ற குருமூலி பதினெண் பேர்க்கும்
  விளங்க வைத்த திது தனக்கு சாபம் இல்லை
பாகமுறப் பரிபாஷை யதனை நீத்துப்
  பட்சமுட னியம்பிடுவேன் மூலி தானே
 
திருநீற்று பச்சிலை
தானெற்ற திருநீற்று இலையு மாகும்
  தன்மையுடன் சரக்கெல்லாம் நிற்க்கும் பூடு
கோனென்ற கொள்கையுடன் பதினெண் பேரும்
   குவலயத்தில் மறைத்திட்டார் குணமாகத்தான்
……………………………………………………………
…………………………………………………………
………………………………………………………
……………………………………………………

அதாவது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை குருமூலி என்றும் இதனால் மருந்து சரக்கெல்லாம் சுண்ணமாக மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர் குரு மூலிகையை தனது நூலில் மறைமுகமாக பதினெண் சித்தர்களும் கூறியுள்ளனர் என்றும், இந்த மூலிகைக்கு சாபம் இல்லை என்றும், அந்த மூலிகை திருநீற்று பச்சிலை தான் என்று மிகவும் வெளிப்படையாக கூறுகிறார்

 அருகம்புல் - மூலிகை ஜாலரத்தினம்


அருகம்புல்மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் சாபநிவர்த்தி இல்லா மூலிகை பற்றி கூறுகிறது.

மூலிகையில் முதல் மூலிகையாம் இதற்க்கு சாபம் இல்லை
அநேகம்பேர் கண்டதுண்டு அதன்பேர் கணேசமூலிகையாகும்.

கணேசமூலிகை என்பது அருகம்புல்லேயாகும்


அருகம்புல் என்ற மூலிகைக்கு சாபம் இல்லை இதை பறித்து அப்படியே பயன்படுத்தலாம் 
June 8, 2013

பஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)

பட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் வலிமை குறைந்தது.


பஞ்சபட்சி பற்றி சித்தர்களில் போகர், அகத்தியர், இராமதேவர், உரோமரிஷி, போன்றோர் நூல்கள் எழுதியுள்ளனர்.அவற்றில் அதிகம் பின்பற்றுவது அகத்தியர்,போகர் நூல்களையே.


அகத்தியர்,உரோமரிஷி நூல்கள் மின்நூல்களாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பட்சி உண்டு அவை பின்வருமாறு

வல்லூறு

அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்               

ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்                   

காகம்

உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்                                

கோழி

அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்                              

மயில்

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி   

படுபட்சி நாட்கள்:

   படுபட்சி என்பது அவருடைய பட்சி செயலிழந்து விடும் . இந்நாட்களில் எந்தவித சுபகாரியமும், பிரயாணமும், புதிய முயற்சிகளும் செய்யக்கூடாது .

வல்லூறு – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் - வியாழன் , சனி

தேய்பிறையில்  - செவ்வாய்

ஆந்தை– படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் – ஞாயிறு,வெள்ளி

தேய்பிறையில் – திங்கள்

காகம் – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் – திங்கள்

தேய்பிறையில் – ஞாயிறு

கோழி – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் -  செவ்வாய்

தேய்பிறையில்  -  வியாழன்,சனி

மயில் – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் - புதன்

தேய்பிறையில் – புதன்,வெள்ளி


பட்சியின் நட்சத்திற்க்குரியோர் உரிய காலத்தை அறிந்து செயலை துவங்க வேண்டும்.பட்சிக்குரிய செயல்கள் ஐந்து அவை 

அரசு,ஊண்,நடை,துயில்,சாவு

அரசு,ஊண் போன்ற நேரங்களில் செயல் செய்ய அது வெற்றி பெறும்

எந்தெந்த காலங்களில் என்ன செயல் நடக்கும் என்பதை கீழ்காணும் நூலின் வாயிலாக அறியலாம் இது சித்தன்.காம் என்ற வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நூலை பகிர்ந்த அய்யா ஞானவெட்டியான்அவர்களுக்கு நன்றி
                                                                                                                www.siththan.com
அய்யா ஞானவெட்டியான்உரோமரிஷி பஞ்சபட்சி சாஸ்திரம்


அகத்தியர் பஞ்ச பட்சி சாஸ்திரம்


நூலின் பெயரை கிளிக் செய்து நூலை பதிவறக்கம் செய்யலாம்

June 7, 2013

பஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒரு உயரிய கலையாகும். அது பன்னிரெண்டு வருடம் சீடனாக இருந்தால் மட்டுமே கற்றுதருவார்கள். 

சித்தர்கலைகளில் வர்மகலை(மருத்துவம்), சரகலை, ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம் ஆகியவை மிகவும் இரகசியமாக கற்று தரப்பட்டன. இவை அனைத்தும் ஆளையே காலி செய்துவிடும் கலைகள். இந்த பஞ்சபட்சிகலையின் நன்மை கருதி சில தகவல்களை தருகிறேன்.

ஆந்தை
காகம்
கோழிவல்லூறு(கழுகு)

மயில்


பஞ்ச பட்சிகள்:

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்து பட்சிகள் சேர்ந்தது தான் பஞ்ச பட்சி ஆகும்.

பஞ்ச பட்சி என்பது அந்தந்த பட்சிக்கு ஏற்ற காலத்தில் தொழில் செய்தால் அது சிறப்பாக முடியும் . இதை மனதில் வைத்து தான் இக்கலை கற்றுத்தர மறுக்கப்பட்டது. இதன் முன்பு எதுவும் செல்லாது அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது.

ராமாயணத்திலும்,கந்தபுராணத்திலும் போரில் இன்று போய் நாளை வா என்பார்கள். கதை படி அது பெருந்தன்மையாக இருக்கலாம் ஆனால் அந்த ஜாமம் முடிந்தவுடன் பகைவரின் பட்சி அரசாலும் என்பதை முருகபிரானும்,ராமபிரானும் அறிந்திருந்தனர் . அதனால் தான் நாளை வா என்றனர். பட்சி சாஸ்திரம் அவ்வளவு பயங்கரமானது.

பொதுவாக பட்சியில் எழுத்துபட்சி,ராசிபட்சி,நட்சத்திர பட்சி ,மறைவு பட்சி,சூக்கும பட்சி என பிரிவுகள் உண்டு.

திருவள்ளுவர்

பஞ்சபட்சியின் திறமையை சரியாகவும் சூக்குமாகவும் கூறியவர்களில் திருவள்ளுவரும் ஒருவர். அவர் கூறிய காலம் அறிதல் அதிகாரம் ஒரு சான்று, அதில் முழுவதும் பஞ்சபட்சி மகத்துவம் அடங்கியிருக்கும்.
       
      "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
        கருதி  இடத்தாற் செயின்."        

இதன் விளக்கம் ஏற்ற காலத்தை அறிந்து,இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுவதையும் தானே ஆள கருதுவானால் அது முடியும்.


நாம் எழுமையாக தெரிந்து கொள்ள நட்சத்திர பட்சி ஒன்றே போதுமானது. அதை பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்.May 31, 2013

அல்லி (சூரியன் சுருங்கி) - மூலிகை மர்மம்

அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
அல்லியின் பயன்கள்
சிவப்பு அல்லி 

அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.உடல் சூடு தணிய,நீரிழிவு பாதிப்பு நீங்க,சிறுநீர் எரிச்சல் குறைய,தாகம் தணிய,கண்ணோய்கள் நீங்க,இரத்தம் சுத்தமாக,அல்லியை அதிகம் பயன்படுத்துவர்.சித்தர் நூல்கள்
              
                 அல்லி மலரை பற்றி அகத்தியர் குணபாடம் பின்வருமாறு கூறுகிறது.                                                              மேகமறும் புண்ணாறும் விட்டேகும் 
                                                              நீரிழிவுதாகந் தணியும் தழலகலும் - வாகான
                                                              மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
                                                              அல்லி மலரால் அறி
நீல அல்லி ( குவளை)

                   செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்                                                                                                                    செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ 
                  டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
                  கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
                   புண்ணின் நோய் பன்னோயும் போம்

                                                                                -அகத்தியர் குணபாடம்.

அல்லி கிழங்கு 


அல்லி கிழங்கை வைத்து பஸ்பங்கள் நிறைய செய்யப்படுகின்றன . சித்தமருத்துவத்தில் அல்லி அல்லது ஆம்பல் கிழங்கின் பங்கு பெரிதும் பயன்படுகிறது.


May 30, 2013

தாமரை( சந்திரன் சுருங்கி) - மூலிகை மர்மம்


தாமரைமலர் மகத்துவம்


தாமரை மலரில் செந்தாமரை,வெள்ளைதாமரை என இரண்டு உண்டு இரண்டும் ஒரே பயனைத்தான் தருகிறது. தாமரைமலரின் மகத்துவம் பற்றிசொல்லவேண்டுமானால் நிறைய சொல்லலாம்.ஆனால் பதிவின் நீளம் கருதி முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

யானை தாமரைக்கொண்டு பூஜித்தல்

தாமரையுடன் விநாயகர்

தாமரையுடன் குருவாயூரப்பன்


எப்போதும் தாமரையுடன் காட்சி தரும் விஷ்ணு பகவான்

பிரம்மா தாமரையுடன்


சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர் தாமரை தான், தாமரைமலர் கொண்டு சிவபெருமானை அர்ச்சனைசெய்தால் உடனே நினைத்தகாரியம் கைகூடும். உதாரனமாக:விஷ்ணுபகவான் ஆயிரம்தாமரைமலர் கொண்டு அர்ச்சித்துதான் சுதர்சனரை பெற்றார். ஆயிரத்தில் ஒன்றாக அவர்கண்ணும் அடங்கும். மேலும் பல தெய்வங்கள் தாமரைமலர் கொண்டு பெருமானை அர்ச்சனை செய்கின்றனர். பிரம்மா,விஷ்ணு,கணபதி,முருகன்,அன்னைபார்வதிதேவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
திருச்செந்தூர் முருகன் தாமரையுடன்

ஆகையால் பெருமானிடம் வேண்டுதல் வைப்பவர் வில்வத்திலும் மேலான தாமரையும் சேர்த்து கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் எடுத்தக்காரியம் தடையின்றி நிறைவேறும்.உதாரணம்: திருச்செந்தூர்முருகனைபோல,திருமால் எப்போதும் தாமரையை கையில் வைத்து கொண்டேயிருப்பார்.

ஆயிரம் தாமரையை கொண்டு திருமால் சுதர்சனம்  பெறுதல்
தாமரை சூரியபகவானுக்குரிய மலராகும், மேலும் அனைத்து உபதெய்வங்களும்(சிவபெருமானையும்,ஆதிசக்தியும் தவிர்த்து) தாமரைமலர் மீது நின்றவண்ணமே காட்சிதருகின்றனர். அனைவரும் ஆயிரத்தெட்டு இதழ்கமலத்தைகடந்தவர்கள். ஆதலால்தெய்வமாகினர்.

ஆதிமூலவரும்,ஆதிசக்தியும்தான் பரம்பொருளின் ஆசியுடன் மற்ற தெய்வங்களை படைத்தனர்.
  

தாமரைக்கிழங்கின் பயன்கள்


இக்கிழங்கால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். இதயம், நுரையீரல் பாதிப்பால் ஏற்ப்பட்ட காசநோய், சளி போன்றவற்றை குணப்படுத்தும், கண்நோயிக்கு இதை சூரணம் செய்து சாப்பிடலாம், மேலும் இதிலிருந்து தைலம் தயாரித்து தலைக்கு தேய்த்து குளித்தால் கண்நன்றாக தெரியும்.


தாமரை பூ


நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும்.

தாமரை 


தாமரைத்தண்டை எடுத்து நூல் தயாரித்து ,காப்புகட்டுவதற்க்கும் பயன்படுத்துவர்.
தாமரையின்கிழங்கிற்க்கு கீழே ஆணிவேர் உண்டு அதையும் எடுத்து பயன்படுத்துவர், ஆணிவேர் நட்சத்திரம் பார்த்து எடுக்கவேண்டும்.

தாமரை ஜாலம்


தாமரை விதையை பொடிசெய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும்.இயற்க்கை நிறம் வருவதற்க்கு வெய்யிலில் வைத்தால் வந்துவிடும்.அன்னபறவையை போல நீரும் பாலையும் பிரித்துவிடும்


சிவபெருமானை பற்றி சில தகவல்கள் ஒரு பதிவில் தரப்படும்