January 25, 2013

மூலிகை சாபநிவர்த்தி - தைப்பூசம்

தைப்பூசம்

தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப் படுகிறது.


முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன்  ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கினார் அன்று அவ்வேலுக்கு பூஜை செய்தார் அதுவே தைபூசம் என்றாயிற்று 

.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார்

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்  தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். (உண்மை பூசம் நட்சத்திரம் தான் )

மூலிகை சாபநிவர்த்தி தேவையில்லாத ஒரு நாள்


மூலிகை உயிர் கொடுக்கும் விதம்  

        தைபூசத்தில் பூசம் நட்சத்திரத்தில் 6 மணிக்குள் சூரியன் மறைவதற்க்குள் ஒரு செடிக்கு காப்பு கட்டி உயிர் கொடுத்து வாங்கினால் போதும் சாப நிவர்த்தி செய்ய தேவையில்லை அன்று ஒரு நாள் மட்டும் இது பொருந்தும். மூலிகையின் குறிப்பிட்ட நட்சத்திரம் தேவையில்லை 


 காப்பு கட்டி பலி கொடுத்தவுடன்  கீழ் காணும் மந்திரம் கூற வேண்டும்

ஓம் ஈஷ்வர சாபம் நசி ந்சி
ஓம் பார்வதி சாபம் நசி நசி
ஓம் தேவர்கள் சாபம் நசி நசி
ஓம் பதினெட்டு சித்தர்கள் சாபம் நசி நசி மசி நசி 

இதை மூன்று முறை கூறவும்.

பின் 

"ஓம் மூலி சர்வ மூலி ஆகச மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாகா "

இதை மூன்று முறை கூறவும்.

இதை பாவிகளுக்கு கூற வேண்டாம் என அகத்தியர் கூறுகிறார். அகத்தியரை வணங்கி கொண்டு செய்வது உத்தமம்

கையின் கடைசி விரலான சுட்டு விரல் மூலிகையில் பட கூடாது இது மிகவும் முக்கியம் 

பறிப்பவர் தந்த சுத்தி , நேத்திர சுத்தி செய்து சூரியனை வணங்கி பின் உயிர் கொடுத்து பறிக்க வேண்டும் இது மிக மிக முக்கியம் 

இதை குற்றமில்லாமல் செய்தால் கண்டிப்பாக அனைத்து அஷ்ட கர்ம மூலிகையும் வேலை செய்யும் இது அனுபவமாக கண்ட உண்மை 
(இன்று பூசம் நட்சத்திரம் 27-1-13 பகல் 5.20 ஆரம்பித்ததால் ,  திங்கள் கிழமை காலை  சூரிய உதயத்தில் மூலிகை பிடுங்குவது உத்தமம் அதுவும் 6.00 யிருந்து 7.00குள்) 


January 10, 2013

மறுபிறவி - 2

 மறுபிறப்பு 

மறுபிறப்பு என்பது அடுத்த உடலைத் தேடுவதாகும்.ஒரு உடல்  இறந்தவுடன் அந்த ஆன்மா  அடுத்த உடலை சென்றடைகிறது தாயின் வயிற்றில் கரு பந்து போல வந்தவுடன் அந்த கருவுக்கு உரு சேர்ப்பது போல ஆன்மா வருகிறது.
குழந்தை தாயின் கருவறை விட்டு வெளியே வரும் போது தனது பூர்வ ஜென்ம நிகழ்வுகளை மறந்து விடுகிறது.குழந்தை வெளியே வந்து இடது கையை விரித்தவுடன் அதன் புண்ணிய கணக்கு தொடங்குகிறது வலது  கையை விரித்தவுடன் அதன் பாவ கணக்கு தொடங்குகிறது.

பிறக்கும் குழுந்தையின் ஆயுட்காலம் என்பது ஆணின் விந்து ஐந்து விரற்கடை அளவு பாய்ந்தால் அதன் ஆயுட் காலம் நூறு வயது என்றும் அடுத்தடுத்த விரல் அளவு குறைவது போல் ஆயுள் மாறும். மேலும் இது பற்றி தெளிவாக தெறிய தாமரை நூலகம் வெளியிட்டுள்ள சித்தர்கள் உடல் தத்துவம் என்ற நூலை வாங்கி படியுங்கள்

பழைய ஜென்ம நினைவுகளை திரும்ப பெறவேண்டுமானால் மனதின் ஆழ்நிலைக்கு சென்றால்  திரும்ப பெறலாம் அது ஒரு ரொக்கார்டு செய்த டேப் போல திரும்ப கேட்கலாம் அனால் சுய நினைவு வந்தால் மறந்து விடும்
     உதாரணம்
               இது எப்படி என்றால் விஜய் டிவி யில் வரும் முன் ஜென்மம் நிகழ்ச்சி பார்த்தால் புரியும் அதில் மெஸ்மரிசம் என்ற கலையை உபயோகித்து வெளிக்கொண்டுவருவார்கள்

பிறப்பு

பலர் ஏழு பிறப்பை ஏழு ஜென்மம் என்று தவறாக புரிந்துவைத்துள்ளனர்.ஏழு பிறப்பு என்பது நமது உடலைப்போல ஏழு உடல் பூமியில் படைப்பார் பிரம்மா, மேலும் எழுகின்ற ஒவ்வொரு பிறப்பை தான் அதாவது எழு பிறப்பை தான் பின் வந்தவர்கள் ஏழு பிறப்பு,ஏழு ஜென்மம் என்று தவறாக கூறுகிறார்கள்.
உதாரணம்:
ரஜினியின் அதிசய பிறவி படம் , இப்போது தெலுங்குவில் வந்துள்ள டருவூ(Daruvu)படம் இதில் ஏழு உடலை காட்டுவார்கள். கதாநாயகன் ஆன்மாவை எதாவது ஒரு உடலில் சேர்த்தல் மாதிரி

இறப்பு

இறந்த நபரின் உடலை மீண்டும் எந்த ஆத்மா உள்ளே வராமல் இருக்க
அந்த உடலின் ஒன்பது மற்றும் பத்தாவது வாசலும் அடைக்கப்படும் இதில் முதல்மூன்று வாசல் வழியாகத்தான் ஆன்மா உள்ளே வரும் அவை

கண்
      இறந்தவுடன் இதை மூடிவிடுவர்

காது

   தலைக்கு பாகை போல காது ஓட்டையையும் சேர்த்து துணி கட்டுவர்

நெற்றி

புருவ பூட்டு என்று சித்தர்களால் அழைக்கபடும் நெற்றியில் நாணயம் வைத்து அடைத்துவிடுவர்(இதை சிலர் இந்த ஒரு ரூபாய் கூட எடுத்து போக முடியாது என்று காட்ட வைப்பதாக சொல்லுவார்கள் 
உதாரணம்: ரஜினியின் சிவாஜி படம்)

இது அனைத்தும் ஊர்வசி பஞ்சரத்தினம் 500 , திருமூலர் திருமந்திரம், திருமூலர் கருக்கிடை 600, மாணிக்கவாசகரின் திருவாசகம், சித்தர்கள் உடல்தத்துவம், யூகி முனி தத்துவம் 300 ஆகிய நூல்களில் இருந்து பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு பற்றி கூறியதை நான் மிக தெளிவாக புரியும்படி கூறினேன்.மேலும் பல திரைபடங்களில் உள்ள முக்கியமான சீனை  உதாரணத்துக்கொடுத்தேன்