August 25, 2012

வர்ம மூலிகைவர்மத்தில் அடிபட்டவரை வர்ம மூலிகை கசாயம் வைத்து குணப்படுத்த வேண்டும். வர்ம அடங்கல் செய்தபின் ஆள் கண் விழிக்கவில்லை என்றால் சுக்கை வாயில் மென்று காதிலும் ,மூக்கிலும் ஊதவேண்டும் பின் அன்னபால் என்கின்ற அரிசி கஞ்சி குடிக்கவைக்கவேண்டும் பின் வர்ம மூலிகை கசாயம் கொடுக்கவேண்டும். இதில்  வர்ம மூலிகை என்று சித்தர்கள் கூறும் மூலிகை இதில்  இருக்கவேண்டும் அவை 
நத்தை சூரி :
                        நத்தை சூரி என்ற மூலிகை பற்றி புலிப்பாணியின்  வர்ம கண்ணாடி நூல் கூறுகிறது      
வேலிபருத்தி:
                       வேலிபருத்தி என்ற மூலிகை பற்றி தன்வந்திரி சித்தர் வர்ம சஞ்சீவி என்ற நூலில் கூறுகிறார் மேலும் இதை பற்றி போகரும் பெருமையாக கூறுகிறார் 
வல்லாரை :
                     வல்லாரை என்ற மூலிகை பற்றி போகர் தனது வர்ம சூத்திரம் நூலில் கூறுகிறார்

அகத்தியர் வர்ம சூத்திரம்

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.


வர்மத்தின் அளவுகோல்கள் 

பஞ்சபூதம் ,முக்குற்றம் ,நாடி நிலை ,விரலளவு ,கைபாகம் ,செய்பாகம், மூலிகைமருந்து
இதில் கைபாகம் செய்பாகம் என்பது முக்கியமானவை 
          செய்பகம் அறிய வேணும் புனிதமுடன் 
                     கைப்பாகம் தலங்கள் வேணும் 
      ஓம் என்ற மாத்திரையும் விபரம் வேணும் 
                   உத்தமனே பாதைகள் ஓர்மை வேணும் 
                                                               - வர்ம சூட்சா சூட்சம்
வர்ம தளம் என்பது வர்மத்தின் புள்ளிகளை குறிக்கும் .மாத்திரை என்பது அவ்விடத்தில் கொடுக்க வேண்டிய அழுத்தத்தின் அளவுகளை குறிக்கும்.கைபாகம் என்பது விரல்,விரல்கள் பாதிக்கும் முறை அதாவது குத்தும் முறை என்றும் சொல்லலாம் செய்பாகம் என்பது மூன்றையும் செயல் படுத்தும் முறையாகும் 

வர்மத்தின் அடங்கல்கள் 
இந்த அடங்கல்கள் பொதுவாக யாரும் வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர் ஏன் என்றால் இதில் தாக்கி விட்டால் அந்த பகுதி செயல் இழந்து விடும் இந்த அடங்கல்கள் மொத்தம் 16 உள்ளன அவைகளில் அகத்தியர் வர்ம சூத்திரத்தின் படி முக்கியமான மூன்று அடங்கல் உள்ளன மேல் அடங்கல் ,நடு அடங்கல்,கீழ் அடங்கல் இவை பொதுவானவை 
இந்த மூன்றை வைத்து தலை வலி ,(பேக்  பெயின்)முதுகு வலி ,அடிபட்டு ரத்தம் வருவதை நிறுத்தலாம் இங்கு தொடர்ந்து ஐந்து நிமிடம் பிடித்தால் வலி குணமாகி விடும் அவை படங்களுடன்  மேலே கொடுத்துள்ளேன். இதை தவறாக பயன்படுத்தவேண்டாம் 

August 20, 2012

அகத்தியர் வர்ம நூல்கள்
வர்மக்கலை நூல்கள் என்றால் அதிகம் கிடைப்பது அகத்தியர் வர்மநூல்கள் தான்.அவர்தான் வர்ம நூல்கள் பல எழுதி உள்ளார் 
இதில் சில நூல்கள் ஒரு சிலரிடமே இருகிறது.


அவைகளில் சில
 • வர்ம சூத்திரம்  
 • வர்ம பீரங்கி 
 • நாலு  மாத்திரை 
 • நரம்பரை 
 • நரம்பு  சூத்ரம் 100
 • நரம்பு சூத்ரம் 400
 • வர்மா ஒடிவு  முறிவு  சாரா சூத்திரம்  1500
 • பஞ்சகர்ணபின்னல் 
 • அளவுநூல்  பிரமாணம் 
 • வர்மா ஒடிவு முறிவு கண்டசாரி  300
 • வர்மா தூண்டாமணி 
 • அக்சக்குரல்  வெண்பா  300


அவர் வர்ம சூத்திரத்தில் 108 வர்மங்களை பின்வருமாறு கூறுகிறார் 

“தானன  தலை  நடுவில்  கொண்டைகொல்லி 
சநேன்றதுகுங்  கீழ்  சீருங்கோல்லி 
ஊனன  இதற்கு  நலன்குலத்தின்  கீழே 
உற்றதொரு  பிடரி  வர்மமாகும்  பரு 
என்ன  உச்சியிலே  இருந்து  எட்டு  விரல்  கீழ் 
சரிதி  வர்மமேனவே  சொல்வர் 
வாணன்  இதற்கு இரு  விரலின்  கீழே 
மகிமையுள்ள  போர்சை  என்ற  காலமே ”

“காலமாம்  அதுக்கும்  ஒரு  இறைக்கும்  கீழ் 
கனமான  குதி என்ற காலமாகும் 
மூலமாம்  காதில்  சிருதண்டருகில்  தானே 
முறையன்  செவிகுதி  கலமேன்பர் 
காலமாம்  இதில்  இரண்டிரைக்கும்  மேலே 
குணமான  பொய்கை  என்ற காலமாகும் 
தூலமம்  கடைகண்ணில்  இறைக்குள்ளே  தன 
துலங்குகின்ற  நட்சத்திர  களமென்னே ”

“என்னவே  இதுக்கும்  இரண்டிரைக்கும் கீழே 
இதமான  கம்பூதறி  காலமாகும் 
துள்ளவே  அதற்கு  மேல்  வளம்  இறை  மூன்றில்  தன 
சுருக்கான  மூர்த்தி  என்ற கலமேன்பர் 
முன்னமே  சொன்னதின்  கீழ் அரை  இறைக்குள்ளே 
முறையான  திலர்தமென்ற  காலமாகும் 
இன்னுமே  அரை இறையின்  கீழ்   மின்வெட்டி  வர்மம் 
இசைந்த  கருவிழியருகில்  மந்திரகலமே ”
“மந்திரமாம்  கலதொடக  வர்மம் 
வலுவாக  இருபுரமுமேனவே  சொல்வர் 
அந்தரமம்  மச்சி  நாடு  நேர்  வர்மமாகும் 
அதுக்கும்  அரை இறையின் கீழ் பசி  வர்மம் 
சுந்தரமாம்  நாசி  மதி  கண்ணாடி  காலம் 
துல்லியமாய்  கண்ட  நாடு பல  வர்மமாகும் 
மந்திரமாம் அதனருகில்  சுண்டிகை  காலம் 
சொல்லு  வர்மத்தின்  அருகில்  கோண  வர்மமே ”

“குரியன  செவியின்  கீழ் அங்குலமே  நாளில் 
குறுகிற  உதிரகலமது  ஆகும்  ஆகும் 
நெறியான  கீழ் நாடி  ஒட்டு  வர்மம் 
நின்றவை  அருகுரண்டும்  உரக்க  காலம் 
அறிவான  குரல்  வலையில்  சங்கு  திரி  காலம் 
அதுக்குங்  கீழ் அங்குலம் நாளில் சிமை  வர்மாந்தன் 
பொறியான  பொறியது  தன கழுத்தின்  மேலே 
                                                 பூண்ட  உச்சி  தணிக்கும்  கீழ் புகல்தவரே    

வர்ம புள்ளியில் சாதாரணமாக கை பட்டால் பாதிப்பு ஏற்படாது.அதில்  சில முத்திரைகள் உள்ளன அதை பயன்படுத்தி அழுத்தினால் போதும் ஆள் மயங்கிவிடுவர்

August 11, 2012

இடது பாகம் - பெண்ணின் பெருமை
இறைவன் படைத்ததில் மிக உயர்ந்த படைப்பு பெண். இதை சான்றோர்களும் ஏற்றுகொள்கின்றனர். ஏன் மும்மூர்த்திகளும் நிருபித்துயிருகின்றனர்.பிரம்மா தனது நாவிலும் விஷ்ணு தனது இருதய கமலத்திலும் சிவன் தனது உடம்பில் சரி பாதி இடது பாகத்தையும் கொடுத்துயிருக்கிறார் .இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிவன் ஏன் இடது பாகத்தை தந்தார், இதில் தான் மிக பெரிய தத்துவமே அடங்கி உள்ளது அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் 

பெண் தான் பொறுமையின் சிகரம் கோபத்தால் அடிக்க கை ஓங்குவோம் என்றால் வலது கைதான் முதலில் வேகமாக வரும் இடது கை பொறுமையாக தான் வரும் .    

பெண் தான் சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவள். பல அருவெறுப்பான செயலையும் முகம் கோணாமல் செய்யும் தாயாகவும் மனைவியாகவும் ஆணிடம் இருக்கிறாள். உதாரணம் மலம் கழித்த பின் இடது கை தான் வேலை செய்யும் வலது கை நீர் மட்டும் தான் ஊற்றும்  

பெண் தான் மிக பெரிய சுமைதாங்கி. அனைத்து பழிகளையும் செயல்களையும் தன் மேல் போட்டுகொள்வாள் உதாரணம் குழந்தை பேறு, தூங்கும்போது இடது பக்கமாக படுத்தால்  வலது பக்கத்தை தாங்குதல் 

பெண் எப்போதும் இனிமையானவள் இடது மூக்கு துவாரத்தில் வரும் காற்று குளிரானது வலது மூக்கு துவாரத்தில் வரும் காற்று வெப்பமானது 

உலகம் பெண்ணிடம் இருந்து தான் தோன்றியது. முதலில் படைக்க பெற்ற மனித இனம்  பெண். மேலும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றாலும் இடது பக்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம்.கோவில்களில் நந்தி (மாடு )வலது காலை மடக்கி இடது காலால் தான் ஊன்றி நிற்கும் இதுவும் ஒரு உதாரணம் முனிவர்கள் இடது கையில் தான் தண்டம் வைத்து கொண்டியிருப்பார்கள் 

விநாயகர் மகாபாரதம் எழுதும் போது எழுத்தானிக்காக இடது தந்தத்தை உடைக்க வில்லை வலது தந்தத்தைதான் உடைத்தார் ஏன்  இடது தந்தத்தை உடைக்கவில்லை இடது (மனைவி ) போனால் சகலமும் போகும் என்பது பழமொழி 

கர்பிணி பெண்கள் இடது கை ஊன்றி எழுந்தால் அது பெண் குழந்தை வலது கை ஊன்றி எழுந்தால் அது ஆண் குழந்தை என்பதை அறியலாம் 

கொடுத்து சிவந்தது கர்ணனின் கை அந்த கை இடது கை, அவனது வலது கை கொடுத்தது குறைவுதான். வலது கையில் இருந்தால் பொருள் போவது தெரியும் இடது கையில் அது தெரியாது 

கால்மீது கால் போட்டு அமர்ந்தால் இடது கால் வலது காலை தாங்கி கொண்டு தான் இருக்கும் .

இழிவான செயலான   யாசகம் பெற்றாலும் இடது கையில் தான் பாத்திரம்யிருக்கும் வலது கை வாழ்த்தும் 

பெண்ணால் தான் ஆவதும் அழிவதும் இதைக்காட்ட  விஷ்ணு தனது இடது கையில் தான் அங்கு வைத்தியிருப்பார் இதை ஊதி போரை ஆரம்பிக்கவும் செய்யலாம் முடிக்கவும் செய்யலாம்.

தாங்குவதில் பெண் போல தான் இடது கையும் ஆஞ்சநேயனின் இடது கையில் மலை இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அதனால் பெண்மையை மதித்து வாழ்த்தி பயன் பெறுங்கள்