பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து
அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை
ஒரு உயரிய கலையாகும். அது பன்னிரெண்டு வருடம் சீடனாக இருந்தால் மட்டுமே கற்றுதருவார்கள்.
சித்தர்கலைகளில் வர்மகலை(மருத்துவம்), சரகலை, ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம் ஆகியவை மிகவும்
இரகசியமாக கற்று தரப்பட்டன. இவை அனைத்தும் ஆளையே காலி செய்துவிடும் கலைகள். இந்த பஞ்சபட்சிகலையின்
நன்மை கருதி சில தகவல்களை தருகிறேன்.
ஆந்தை |
காகம் |
கோழி |
வல்லூறு(கழுகு) |
மயில் |
பஞ்ச பட்சிகள்:
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்து பட்சிகள் சேர்ந்தது தான் பஞ்ச பட்சி ஆகும்.
பஞ்ச பட்சி என்பது அந்தந்த பட்சிக்கு ஏற்ற காலத்தில்
தொழில் செய்தால் அது சிறப்பாக முடியும் . இதை மனதில் வைத்து தான் இக்கலை கற்றுத்தர மறுக்கப்பட்டது. இதன்
முன்பு எதுவும் செல்லாது அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது.
ராமாயணத்திலும்,கந்தபுராணத்திலும் போரில் இன்று போய் நாளை
வா என்பார்கள். கதை படி அது பெருந்தன்மையாக இருக்கலாம் ஆனால் அந்த ஜாமம் முடிந்தவுடன்
பகைவரின் பட்சி அரசாலும் என்பதை முருகபிரானும்,ராமபிரானும் அறிந்திருந்தனர் . அதனால்
தான் நாளை வா என்றனர். பட்சி சாஸ்திரம் அவ்வளவு பயங்கரமானது.
பொதுவாக பட்சியில் எழுத்துபட்சி,ராசிபட்சி,நட்சத்திர
பட்சி ,மறைவு பட்சி,சூக்கும பட்சி என பிரிவுகள் உண்டு.
திருவள்ளுவர்
பஞ்சபட்சியின் திறமையை சரியாகவும் சூக்குமாகவும்
கூறியவர்களில் திருவள்ளுவரும் ஒருவர். அவர் கூறிய காலம் அறிதல் அதிகாரம் ஒரு சான்று, அதில் முழுவதும் பஞ்சபட்சி மகத்துவம் அடங்கியிருக்கும்.
"ஞாலம்
கருதினுங் கைகூடுங் காலம்
கருதி
இடத்தாற் செயின்."
இதன் விளக்கம் ஏற்ற காலத்தை அறிந்து,இடத்தோடு
பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுவதையும் தானே ஆள கருதுவானால் அது முடியும்.
நாம் எழுமையாக தெரிந்து கொள்ள நட்சத்திர
பட்சி ஒன்றே போதுமானது. அதை பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment