October 28, 2013

கருவூரார்

சித்தர்களின் SUPERSTAR போகரின் இளைய தளபதி தான் கருவூரார்

கருவூரார் போகரின் சீடர்களில் ஒருவர்.போகருக்கு 63 சீடர்கள்,அதில் தலைமை பொறுப்பு கொண்டவர்கள் ஏழு பேர் ,அவர்கள்
போகரின் பிரதான ஏழு சீடர்கள்
புலிப்பாணி,கருவூரார்,கோரக்கர்,கொங்கணவர்,யாகோபு,ரோமரிஷி,பாபாஜி நாகராஜ். இவர்களின் தலைமை குரு வேறொருவராக இருந்தாலும் போகரின் கீழ் அந்தந்த தலைமை குருவின் அறிவுறுத்துதலின் பேரில் போகரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.நவபாஷாண சிலை செய்வதில் பெரும் பங்கு கொண்டவர்கள் இந்த ஏழு பேர்,இதில் கருவூராரும் ஒருவர், இவரை பற்றி பல கதைகள் உண்டு.
கருவூரார் மூல மந்திரம்
இரண்டு கதைகளுக்கு சான்று உள்ளது.ஒன்று தஞ்சை பெரியகோவிலின் சிலை நிறுவியவர் மற்றொன்று, சிதம்பரம் நடராஜர் சிலையை செய்தவர்.இரண்டும் போகரின் வழிகாட்டுதலால் செய்தார்
கருவூரார் நூல்

இவர் அட்டமாசித்திகளை மக்களுக்கு எளிதில் போதிக்க எந்திர முறையை கையாண்டார்.அனைத்து சித்தர்களின் கோபத்திற்க்கு உள்ளாகி பிறகு போகர் தடுத்தாட்கொண்டு சில ஏடுகளை மட்டும் தந்தார்.அதை தான் நாம் இப்போது கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து என்ற நூலாக படிக்கிறோம்.
போகரும் 63 சீடர்களும்

இந்த நூலை மூடர்களுக்கு கொடுக்காதே என்று இந்நூலில்லேயே கூறுகிறார் .சித்தர்கள் வலைதளங்களை பார்வையிடுபவர்கள் மூடர்கள் அல்ல மேலும் அவர்கள் ஆசியால் தான் இவ்வலை தளங்களை பார்வையிடுகிறோம். கருவூரார் அருளிய  கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து  என்ற நூலை பகிர்கின்றேன்
 நூலுக்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

முந்தைய பதிவில் காக புஜண்டர் அருளிய மந்திரம் எது என கேட்ட நண்பர்களுக்கு,  அது நற்பவி என்பது தான் மந்திரம் என கூறிக்கொள்கிறேன்.. இது மிகவும் பிரசித்தி பெற்றது


                                                    ஓம் கருவூர்தேவாய நம!!!


October 11, 2013

மந்திரம்-காகபுஜண்டர்(பாகம் -1)

காகபுஜண்டர் தோற்றம்:
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
கோரக்கரின் குரு காகபுஜண்டர்
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.

காகபுஜண்டர் அருளிய அற்புத மந்திரம்

                                               "நற்பவி "   (மந்திரம்)

     இது தான் அந்த மந்திரம் இதை எப்பவேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது .ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்  
மூலிகைமணியில் 1990ல் வந்த பக்கம்
                        "

இந்த மந்திரம் பிரணவத்திற்க்கு இணையானது இதை பலரும் கார் ,வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்றிருக்கின்றனர். மேலும் இது பற்றி மேலுள்ள மூலிகை மணி புத்தகம் கூறுவதை கவனியுங்கள்.இதை தேடிசிரமபட்டு இப்பக்கத்தை கொடுத்துள்ளேன். இது நிச்சயம் பயன்கொடுத்தது, முயற்சி செய்து பாருங்கள்.