November 7, 2012

விதி (மதியால் செய்யும் சதி)

விதி வலியது என்று ஒரு கதையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 
ஒரு நாள் வைகுண்டத்தில் கருடனும் அதன் நண்பனுமான குருவியும் பூலோகத்தில் ந்டந்தவைகளை பற்றி பேசி கொண்டிருந்தன அந்த சமயம் அங்கு மகா விஷ்ணுவை காண வந்த யமதர்மர் சிறிது நேரம் நின்று குருவியை பார்த்து முறைத்து விட்டு பின் உள்ளே சென்றார் இதை கண்ட கருடனுக்கு பயம் ஏற்பட்டு குருவியை யமதர்மர் வருவதற்க்குள் மறைவான இடத்தில் வைக்கவேண்டும் என்று எண்ணி உடனே அங்கிருந்து குருவியை தன் மேலே அமர செய்து கடலுக்கு அப்பால் உள்ள மலை குன்றில் ஒரு மரக்கிளையில் அமர செய்து விட்டு சற்று நேரத்தில் வந்து கூட்டி செல்வதாக சொல்லிவிட்டு அவசரமாக வைகுண்டம் வந்தார் .

வெளியே வந்த யமதர்மர் பதட்டதுடன் கருடனிடம் ," இங்கு இருந்த குருவி எங்கே சென்றது" என்றார்.அதற்க்கு அதை பத்திரமாக உங்கள் பார்வையில் இருந்து மறைத்து வைத்துள்ளேன் என்றார் கருடன்.

"அதன் உயிர் என் கையால் முடியவேண்டும் என்பது விதி ஆதலால் 
கருடதேவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.இங்கு உள்ள குருவி கடலுக்கு அப்பால் உள்ள ஒரு மலைக்கு குன்றில் உள்ள மரத்தில் உள்ள பாம்பால் சாக வேண்டும் என்பது விதி. சிறிய இறகுகளை வைத்துள்ள குருவி அவ்வளவு தூரம் 1 நாழிகைக்குள் எவ்வாறு செல்லமுடியும் என வருத்ததுடன் சென்றேன் என் மனக்கவலையை தாங்கள் போக்கி விட்டீர்கள் ",என்றார் யமதர்மராஜன்.

உடனே இதை கேட்ட கருடன் மிக வேகமாக அங்கு சென்றார்.கருடன் வருவதை பார்த்த குருவி கீச் கீச் என்று ஒலி எலுப்பியது சத்தம் கேட்ட பாம்பு மரப்பொந்தில் இருந்து வந்து குருவியை முலுங்கி சென்றது

உடனே அந்த இடத்தில் யமதர்மராஜன் தோன்றி கருடருக்கு மீண்டும் நன்றி என தெரிவித்தார். அப்போது தான் கருடருக்கு புரிந்தது குருவியின் உயிர் தன்னால் தான் பிரியவேண்டும் என்று விதி நிர்னையத்ததை.

விதியை மதி கொண்டு வெல்லலாம் என்பதை விட, விதி தான் அங்கு சதி செய்து மதியை கைப்பாவையாய் மாற்றி தன் வேலையை முடித்துக்கொள்கிறது

விதி வலியது