December 24, 2014

பிரம்மா ஓர் உண்மை விளக்கம்

பிரம்மா

                 பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர், படைப்பு தொழில் செய்யும் கர்த்தா,சரஸ்வதி கணவர் , விஷ்ணுவின் மகன் என்று பலர்
கூறுகிறார்கள் எல்லாம் சரிதான் ஆனால் விஷ்ணுவின் மகன் என்பது சற்று கவனிக்க வேண்டும் இதை சிலர் தவறாக கருதுகிறார்கள் 

பிரளயகாலத்தில் அதாவது யுக முடிவில் பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும் அழிக்க படுவார்கள் மீண்டும் நாரயணர் வந்து பிரம்மாவை படைப்பார் பிரம்மா மற்றவற்றை படைப்பார்.

சரி ப்ரம்மாவை எப்படி படைக்கிறார் என்றால் இறைவன் திருமால் சிறு பிள்ளையாக ஆலியிலை மீது அமர்ந்து உலகை வலம் வருகிறார் அனைத்தும் அழிந்ததை உறுதி செய்த பின்னர் விஷ்ணுவாக மாறுகிறார் ஆலியிலை ஆதிசேசனாக மாறுகிறது பின் விஷ்ணு தியானத்தின் மூலம்,  பிரம்மா உண்டாக என்று நினைத்தவுடன் பிரம்மா வருகிறார், எங்கிருந்து தொப்பூள் என்கிற நாபிகமலத்திலிருந்து, ஏன் நாபியிலிருந்து வரவேண்டும் காரணம் உண்டு
இறைவன் கொடுத்த சிலை ரங்கநாதர்

மனிதன் வடித்த சிலை

நமது எண்ணங்கள் அனைத்தும் நாபியிலிருந்ந்து தான் கிளம்புகிறது,அங்கு தான் காற்று தங்குகிறது நமது எண்ணத்திற்க்குதான் மனம் என்று சொல்லுவார்கள் அம்மனத்திற்க்கு உருவம் கிடையாது ஆனால் அது காற்றாக மாறி எண்ணமாக வெளிப்படும் அப்படி வெளிப்பட்டவர் தான் பிரம்மா

எண்ணம் என்கிற படைப்பின் மூலம் உருவானவர் தான் பிரம்மா.பிரம்மாவும் அவ்வாரே தியனித்து சிருஷ்டியை படைக்கிறார் இங்கு எண்ணம் என்பதற்க்கு ஆசை என்ற ஒரு பெயரும் உண்டு, இன்னும் சிலர் தியனத்தின் மூலம் அனைத்தையும் பெறலாம் என்பதற்க்கே விஷ்ணுவின்  தொப்பூள் மூலம் பிரம்மா வந்தார் என்று சிலை வடித்தனர் இதை கொண்டு குறைகூறும் ஒருஇனம் திருமாலை தவறாக கருதுகின்றனர்
திருச்சிராப்பள்ளி

அவர்களுக்கு ஒரு சான்று தருகிறேன்,விபிஷணன் விஷ்ணுவின் சயன கோலத்தை சிலையாக  வேண்ட,விஷ்ணுவே தந்த ஆத்ம லிங்கத்தில் பிரம்மா இல்லை என்பது திருச்சி ரங்கநாதர் திருமேனியில் காணலாம்
மற்ற சிலைகள் எல்லாம் மனிதனால் செய்யப்பட்டது
திருப்பட்டூர் பிரம்மா

மேலும் கடப்பை சச்சிதானந்தர் கூறுவதை கேளுங்கள்
புத்தகத்தில் பிரம்மா
கடப்பை யோகீஸ்வரர்

திருமாலின் கர்ப்பபையிலிருந்து எல்லாம் பிரம்மா வரவில்லை ஆண் கடவுளுக்கு கர்ப்பபை கிடையாது

பிரம்மாவை வணங்க அற்ப்புத தலங்கள் திருப்பட்டூர்,கொடுமுடி(திருபாண்டி கொடுமுடி) ஏன் இவை என்றால் இங்கு பிரம்மாவுக்கு தனிச் சன்நிதி உண்டு

December 19, 2014

சிவம் ஓர் புனித பயணம் - பாகம் 3 (ஐயப்பன் விளக்கம்)


ஐயப்பன் பிறப்பு விளக்கம்

பலர் ஐயப்பனின் வரலாற்றை கொச்சை படுத்தும் விதமாக கூறுகிறார்கள்,அதாவது சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்ததாக கூறுகிறார்கள் அது தவறு , ஏன் என்றால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே குழந்தை பிறக்கும் என்பது ஊர் அறிந்த ஒன்று,  அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்கள் அது தான் நாம் இங்கு தெரிந்து கொள்ளவேண்டியது

மகிசியின் கதையை முடிக்க கைலாயத்தில் இருந்த முனிவரான சாஸ்தாவை மணிகண்டனாக பிறக்க சிவன் ஆணையிட்டார், மகிசியானவள் பிரம்மாவை வேண்டி தவம்புரிந்து தன் மரணம் சிவனின் அம்சத்தாலும் திருமாலின் அம்சத்தாலும்  பிறக்கும் மகனால் தனக்கு மரணம் வேண்டும் என்று வரம் கேட்டால் இந்த வரியை நாம் கவனிக்க வேண்டும். மகிசி ஒரு தேவகண்ணிகை அரக்கியாகும் படி சபிக்கபட்டவள்
பிச்சுமணி (பிச்சாடனார்)

பிச்சாடனர் அவதாரம்

                 
தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவன் எடுத்த கோலமாகும். 

மோகினி அவதாரம் 

மோகினி ராகுவதத்தில்திருமால் பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும்,பிட்சாடனாருடன் இணைந்து தாருகா வன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும் சாஸ்தாவை படைக்கவும் மோகினி அவதாரம் எடுத்தார்.


ஐயப்பன் அவதாரம் மகிசி தேவகண்ணியாக மாறுதல்

  இந்த இரண்டு அவதாரங்களுக்கும் பிறந்ததே ஐயப்பன் ஆகும்.  இந்த இரண்டு அவதரமும், முனிவரின் ஆணவத்தை அழிக்க, மகிசியின் கதையை முடிக்க  எடுக்க பட்டதாகும். இவர்கள் இருவரும் கணவன் மனைவியர் ஆவார். மணிகண்டன் பிறந்ததும் இவ்வதாரத்தின் நேக்கம் முடிந்தது, அதுவரை இவர்கள் காட்டில் தான் வாழ்ந்தனர்.


இப்பொழுது விஷயத்திற்க்கு வருவோம் ஒரு அவதாரமாக தான், வந்து ஐயப்பனை தந்தார்களே தவிர நேரடையாக சிவன் மோகினியை புணர்ந்து ஐயப்பன் வரவில்லை


மேலும் சிவன் வேறு பிச்சாடனார் வேறு இது அவரின் அவதாரமாகும்


அவதாரம் என்பது அந்தந்த மூர்த்தில் இருந்து வெளிப்படுவதாகும்.அதாவது ஒரு நோக்கத்திற்க்காக வெளிப்படுவது,நோக்கம் முடிந்தவுடன் மீண்டும் அது அவருடைய பரபிரம்மத்தில் ஐக்கியமாகி விடும்.


எடுத்துக்காட்டாக சிவனில் இருந்து பல வடிவங்கள் 

பைரவர்,வீரபத்தரர்,முருகன்,தஷ்ணாமூர்த்தி,பிச்சாடனார்,அனுமான் இன்னும் பல


திருமால் அவதாரம் ஊர் அறிந்ததே 

மரியாதைக்குரிய கிருஷ்ணர்


பரசுராமர்

நீங்கள், இறைவன் தான் நேரடியாக அவதாரம் என்ற பெயரில் வருகிறார் என்றால், இறைவன், அதாவது விஷ்ணு அவதாரம் எடுக்கிறார், ராமனாக வருகிறார் என்றால் விஷ்ணு இருக்ககூடாது அல்லவா?


இப்பொழுது ராம அவதாரத்தில் விஷ்ணு இருக்கிறார் என்றால், வைகுண்டத்தில் யார் இருக்கிறார்,காக்கும் தொழில் செய்வது யார்,யோசித்துபாருங்கள் 


இதே அவதாரத்தில் திருமண மண்டபத்தில் பரசுராமர் வருவார்,


அதே போல் மகாபாரதத்தில் கிருஷ்ணணுக்கு சுதர்சனம் தருவார் பரசுராமர்,

மேலும் மோகினியை கிருஷ்ணர் அரவானுக்கு மணம் முடித்து தலையை பலி பெறுவார் 

இது எப்படி சாத்தியம் பரசுராமர் விஷ்ணு தானே!!!! 


இங்கு கவனிக்க வேண்டியது இருவரும் அவதாரங்கள் ( மனிதர்கள் ) அவர்கள் வந்த வேளை முடியவில்லை அதனால் ஒரு அவதாரம் மற்றவரை சந்திக்க நேரிடுகிறது ஆக இறைவன் என்கிற சிவனோ திருமாலோ நேரிடையாக வருவதில்லை அவதாரம் மூலம் தான் வருகிறார்.


அப்படி வந்து தந்ததே ஐயப்பன் என்கிற சாஸ்தா அதை விடுத்து ஹோமோ செக்ஸ் மூலம் ஐயப்பன் வந்தார் என்றும், சிவன், மோகினி மீது தீராத காமம் கொண்டு புணர்ந்தார் என்றும் விஷ்ணுவிற்க்கு மகன் பிறந்தார் என்றும் தவறாக இழிவாக கூறவேண்டாம் ஆணுக்கு கர்ப்பபையெல்லாம் கிடையாது அது கடவுளாக இருந்தாலும் சரி


மேலும் விஷ்ணுவின் தொப்புளில் பிரம்ம வருகிறாரே என்றால் அது தவறு, அதற்கு அடுத்த பதிவில் பதில் கூறுகிறேன்

தயவு செய்து இதை அனவருக்கும் பகிரவும் இது எனது குருவின் வேண்டுகோள்


ஐயப்பன் கலியுகம் முடியும்வரை இருப்பதாக வாக்கு கொடுத்துள்ளார்,அதே போல் அனுமான்,முருகன் அஷ்வத்தாமா,வியாசர்அனைவரும் தவத்தில் உள்ளனர்


August 26, 2014

ப்ராணாயாமம்

இது ஒரு பேஸ்புக் பதிவு
நாடி சுத்தி ப்ராணாயமம்

நாம் பிறந்தது முதல் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்றாலும் அதை ஒழுங்கு படுத்துவது (அ) மாற்றங்களை கடைபிடிப்பது அவசியமாக இருக்கிறது. அதை யோகியர்கள் கடைபிடித்து, தனக்குத் தானே ஆராய்ந்து தெளிவு பெற்று நமக்குச் சொன்னார்கள். மூச்சு என்றால் மூன்று விஷயங்கள் நினைவுக்கு வரும். உள்ளே இழுத்தல்(பூரகம்), வெளியே விடுதல்(ரோசகம்), உள்ளே நிறுத்தி வைப்பது(இதை நாம் கடை பிடிப்பது இல்லை). இழுத்து உடனே வெளியேற்றி விடுகிறோம். இதனால் மூச்சின் மூலமாக நமக்கு கிடைக்கும் ப்ராண சக்தி மிகக்குறைவாகவே கிடைக்கிறது. எனவே உள்ளே வைப்பதற்கான(கும்பகம்) பயிற்சியை நாம் தெரிந்து கொள்வது மிகமிக அவசியமான ஒன்று.
வெளியே காற்றை விட்ட பிறகு உள்ளே இழுக்காமலும் கும்பகம் செய்வார்கள். அதை கேவல கும்பகம் என்று சொல்வார்கள். பூரக, ரேசகங்களுடன் செய்யும் கும்பகத்தை சஹீத கும்பகம் என்பார்கள். சஹீத கும்பகத்தில் நல்ல பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கேவல கும்பகம் ஏற்படடும். அது அனுபவத்தினால் உண்டாகும். இந்த கேவல கும்பகத்தினால் மூலசக்தி எழும்பும்.முன்னேற்றமடைய அடைய சுக்ஷும்னா நாடியில் உள்ள தடைகள் நீங்கி, நோயற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும் ஏற்படும்.

ப்ரும்ம முகூர்த்தம், அதிகாலை, மாலை,முன் இரவு, பின் இரவு வேளைகளில் பயிற்சி மேற்க்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நாடி சுத்தி என்பது பயிற்சி மேற்கொள்வதற்கு முன் செய்யப்படுவது. இது அவசியமானதாகும். அதாவது வலது மூக்கின் வழியாக மெதுவாக மூச்சை இழுத்து சீராக மெதுவாக இடது மூக்கின் வழியாக விட வேண்டும். பிறகு இடது மூக்கின் வழியாக இழுத்து வலது மூக்கின் வழியாக விட வேண்டும் இது ஒரு சுற்று. இப்படி 10 நிமிடங்கள் செய்யலாம். இழுத்து விடும் காலளவு மாறாமல் இருக்க ஏதாவது மந்திரங்களை மனதுக்குள் சொல்லிப் பழகலாம். இதில் கும்பகம் கிடையாது. நன்றாக நிமிர்ந்து அமர்ந்து புருவ மத்தியில் மனதை வைத்துக் கொண்டு செய்வது நல்லது. இது நாடிகளின் அடைப்பை நீக்கும், இரத்தத்தை சுத்தப் படுத்தும். சுவாசம் சீராகும். உடல் லேசாக இருப்பது போல் தோன்றும், பளபளப்பாகவும்,மென்மையாகவும் மாறும்.

முக்கியமான 10 ப்ராணாயாமங்களை பாருங்கள்.


1 - சூர்ய பேதா - உங்களுக்கு சௌகர்யமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மூன்று விரல்களால் இடது மூக்கை அழுத்தி மூடிக் கொண்டு சிரமமில்லாத அளவுக்கு வலது மூக்கின் வழியாக காற்றை மெதுவாக, ஒரே சீராக இழுக்க வேண்டும். காற்றை உள்ளே சிரமமில்லாத அளவு நிரப்பிக் கொண்டு, முகவாய்கட்டை மார்பில் படும்படித் தலையைக் குனிந்து கொண்டு, மூச்சை உள்ளேயே வைத்திருக்கவும். வியர்வை அரும்பும் வரை வைத்திருந்து, வலது மூக்கை மூடிக் கொண்டு இடது மூக்கின் வழியே மெல்ல காற்றை வெளியே விடவும்.பழகப்பழக காற்றை உள்ளே நிறுத்தும் கால அளவை அதிகரிக்கலாம்.
இதனால் கபாலம் சுத்தமாகும், குடல் புழுக்கள் வெளியேறும், கபம் நீங்கும், நரம்புகள் பலம் பெறும், சைனஸ் குணமாகும். குண்டலினி கிளம்ப உதவும். 


இது உஷ்ணத்தை தருவதால் குளிர் காலத்தில் செய்வது நல்லது.

2- கபாலபதி - எதாவது சௌகர்யமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, முலங்கால்களில் கைகளை ஊன்றிக் கொண்டு, இடது பக்கம் மூடி வலது பக்கமாகவோ, வலது பக்கம் மூடி இடது பக்கமாகவோ, அல்லது இரண்டும் சேர்த்தோ சத்தத்துடன் மூச்சை இழுத்து துருத்தி போல புஸ் புஸ் என்று உதற வேண்டும். ஒரு முறை காற்றை இழுத்து பத்து முறை சத்தத்துடன் விரைந்து வெளியேற்ற வேண்டும். படிப்படியாக வெளியேற்றும் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும்.


இதனால் கபாலமான தலை தூய்மையடையும். சுவாச உறுப்புகள் சுத்தமாகும். நூரையீரலுக்கு அதிக காற்று கிடைக்கும்.

ப்ராணாயமம்

3 - உஜ்ஜயி
- சுகாசனத்தில் அமர்ந்து வாயை மூடிக் கொண்டு இரண்டு துவாரத்தினாலும் மூச்சை இழுத்து இதயத்திலிருந்து தொண்டை வரையுள்ள பகுதிகளில் ஓசையாக நிரப்பிக் கொண்டு, முடிந்தவரை வைத்திருந்து, வலதை அடைத்து இடது புறமாகவும், இடதை அடைத்து வலது புறமாகவும், மெதுவாக மாறி மாறி விட வேண்டும். மூச்சிழுக்கும் போது குரல்வளை ஒடுக்கி அடைக்கப் படுவதால் ஒருவிதமான ஓசை உண்டாகும். இந்த பயிற்சியை நடந்து கொண்டோ, நின்று கொண்டோ கூட செய்யலாம். தொண்டை பகுதியால் மூய்யை இழுக்க வேண்டும். இதனால் மண்டையில் சூடு குறையும், அழகு கூடும், ஜீரணசக்தி கூடும்,மூச்சுக் கோளாறுகள் நீங்கும், ஆஸ்த்துமா குணமாகும்.

4 - சீதளி - சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, இரண்டு உதடுகளுக்கும் மத்தியில் வெளிப்புறமாக நாக்கை குழல் போல உருட்டி வைத்துக் கொண்டு, ஸ்..... என்ற ஒலியுடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். முடிந்தவரை உள்ளே வைத்திருந்து மூக்கு வழியாக வெளியே விட வேண்டும். பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

இதனால் உஷ்ணம் குறையும். பித்தம் குறையும். இரத்த சத்தி ஏற்படும். நல்ல பசி எடுக்கும். அஜீரணம், மூலநோய்கள் குணமாகும். தோல் வியாதிகள் நீங்கும். இதைப் பழகுபவர்களை பாம்பு, தேள் போன்ற விஷக்கடிகள் பாதிப்பகதில்லை.


5 - சீத்காரி - அமர்ந்தபடி இரண்டு வரிசைப் பற்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு, நாக்கை மேலண்ணத்தில் மடித்து வைத்துக் கொண்டு,காற்றை ஸ்...... என்ற ஓசையுடன் சிரமமில்லாமல் உறிஞ்ச வேண்டும். முடிந்தவரை வைத்திருந்து பிறகு மெதுவாக மூக்கு வழியாக வெளியே விட வேண்டும்.


இதனால் முகம் வசீகரமாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்ல உதவும். தேகம் பலமுடையதாகும்.


6 - பஸ்திரிகா - மூச்சை இழுத்து மார்புப் பகுதியில் நிறைத்து, மார்பை துருத்தி போல் இயக்கி, மூக்கால் விரைந்து விரைந்து குறுகிய மூச்சாக விட்டு, இறுதியாக காற்றை உள்ளே இழுத்து முடிந்தவரை வைத்திருந்து,


மெதுவாக மூக்கு வழியாக விட வேண்டும். ஸ்... ,ஸ்... என்ற சத்தத்துடன் விட்டு பழக வேண்டும். இது ஒரு சுற்று. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை பயிற்சி மேற்கொள்ளலாம். ஒரு சுற்றுக்கும் அடுத்த சுற்றுக்கும் இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் இரண்டு துவாரங்கள் வழியாகவும் பழகியபின் வலதும், இடதும் மாறி மாறி(வலதில் இழுத்து இடதிலும், இடதில் இழுத்து வலதிலும்) பயிற்சி செய்யலாம்.


இதனால் மூச்சுப் பைக்குள் இருக்கும் சர்ப்ப நாடி ஒழுங்கு படுத்தப்பட்டு சுவாசம் சம்மந்தமான யோய்கள் வராது. ஆஸ்த்துமா, நுரையீரல் சம்மந்தமான நோய்கள் குணமாகும். கபத்தை துடைத்தெறியும்.சில யோகாதார முடிச்சுகளை அவிழ்த்து குண்டலினி எழும்ப உதவும். வாயு நீங்கும். குளர் காலத்தில் உடலுக்கு வெப்பமளிக்கும்.


7 - மூர்ச்சா - சுகாசனத்தில் அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். உள்ளே காற்றை நிறுத்தியபடி ஜலந்திர பந்தமும், மூலபந்தமும் போட வேண்டும். நினைவிழக்கும்வரை கும்பகம் செய்ய வேண்டும். பிறகு மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும்.


இதனால் உணர்வற்ற நிலையில் ஒரு சுகம் காணும். மூளை பலம் பெறும், தெளிவாகும்.


8 - பிரமரி - எதாவது வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு காற்றை உள் இழுத்து, கும்பகம் செய்து, வண்டு ரீங்காரம் செய்வது போன்று ம்....................................... என்ற சத்தத்துடன் மூச்சை விடவேண்டும். இடைவிடாது விட வேண்டும்.


இதனால் உச்சந்தலை அதிர்வடைந்து சகஸ்ராரம் தூண்டப்படும்.


9 - பிளவினி - காற்றை தண்ணீர் போல பாவித்து குடித்து வயிற்றை நிரப்ப வேண்டும். பானை போல வயிறு உப்பிவிடும். கும்பகம் செய்ய வேண்டும். உட்டியாணா பந்தத்தால் வயிற்றை இறுக்கி மெல்ல எல்லா காற்றையும் வெளியேற்ற வேண்டும். இது மிகக்கடினமான பயிற்சி. ஆசான் இல்லாமல் இது செய்யக் கூடாது. கற்றுக் கொள்வதே மிகக் கடினமாகும்.


உணவு இன்றி காற்றாலேயே நீண்ட நாட்கள் ஜீவிக்க உதவும். தண்ணீரில் மிதக்கலாம்.

10வதாக அந்தர்யாமம் இது கை தேர்ந்த யோகிகளால் செய்யக் கூடியது. இதனால் ஆறு ஆதாரங்களில் ஏதாவது ஒரு ஆதாரத்தினால் ப்ராணனை நேரடியாக இழுத்துக் கொள்ள முடியும்.

மீண்டும் சொல்கிறேன் குரு இல்லாமல் கும்பகம் செய்யவேண்டாம். நம்முடைய வாழ்க்கை முறைக்கு தகுதியான, தேவையான பயிற்சிகளை குரு மூலமாக கற்றுக் கொண்டு, ஆரோக்யமாகவும், அறிவு செறிந்தவர்களாகவும், நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்.

நன்றி

மௌனத்தின் நாதம்


ராம் மனோகர்


June 24, 2014

மின் நூல்கள்

நான் இணையத்தில் கண்ட  சித்தர்கள் நூல்களின் இணைப்பை, இங்கு கொடுப்பதை கடமையாக கொள்கிறேன். 

இந்த லிங்கை கிளிக் செய்து சேவ் செய்யவும்சித்தர்கள் தத்துவம்
அகத்தியர் - நாகமுனிவரின் நயனவிதி
அகத்தியமாமுனிவரின் அமுதகலைக் ஞானம் - 1200
அகத்தியமுனிவரின் பூரண சூத்திரம் 216
போகமுனிவரின் சரக்குவைப்பு எண்ணூறு
அகத்தியர் வாத சௌமியம் என்னும் சௌமிய சாகரம் - 1200
அகத்தியமாமுனிவர் பரிபூரணம் 400
நந்தீசர் கருக்கிடை 300 ஞானம் 100
அகத்தியர் கன்ம காண்டம் கெளமதி
போகர் ஜெனனசாகரம்நூலை படித்து பயன்பெறுங்கள்

                                              ஓம் கோரக்கதேவாய நம!!!


June 10, 2014

வர்ம முத்திரைகள்

வர்ம முத்திரை என்பது தாக்குதலுக்கு பயன்படுத்தும் கைகளின் நிலைகளாகும் இந்த முத்திரை கொண்டு தாக்கும் போது மிக எளிதாக வர்ம புள்ளியில் படும் மிகவும் ஆபத்தும் கூட தயவு செய்து தவறாக பயன்படுத்தவேண்டாம்.
முகவரி

இந்த முத்திரைகள் அனைத்தும் ஆதி சக்தி வர்மக்கலை பயிற்சி பள்ளியில் 
பயிற்றுவிக்கபடும் தேவையுள்ளோர் சென்று கற்றுகொள்ளலாம்.
 மிக்க நன்றி,
 ஆசான் கோபாலகிருஷ்ணன்
 அவர்களுக்கு,


 http://www.youtube.com/user/gktvarmam/videos


முடியாதவர்கள் அவரின் youtube channel ல் பார்த்து வர்மக்கலை பற்றி தெரிந்துகொள்ளலாம்.


பதிவுகள் இனி வழக்கம்போல் தொடரும்


April 23, 2014

சிவம் - ஒரு புனித பயணம் -2 (சிவமா?சக்தியா?)

சிவம் பெரியதா சக்தி பெரியதா என்பார்கள் இந்த கேள்வி யார் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களல்லாம் அறிவிருந்தும் ஞானம் பெறாதவர்கள்
சிவசக்தி

அவளை அறிய அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி உட்புகும் ஆறு அறியேனே
                                                                           -திருமந்திரம்  1053

ஆதிபரசக்தியை வைத்து தான் அனைத்தும் நடைபெறுகிறது. இச்சக்தியே பெண்மையாய் நம் கூடவே வரும். முதலில் மேலேயுள்ள பாடலுக்கு முதல் விளக்கம் பார்ப்போம்

முதல் வரி தாயை குறிக்கிறது
இரண்டாவது வரி மனைவி யை குறிக்கிறது மூன்றாவது வரி மனைவி காட்டும் இல்லறத்தில் குழந்தை பேறுவை குறிக்கிறது.  அவள் அனுமதித்தால் தான் சுக்கிலம்சுரோணித்தோடு கலக்கும் , ஐம்புலனும் அங்கு சும்மா தான் இருக்கும். நான்காவது  வரி அவள் தான் எளிமையாக கலவியின் போது ஆறு சக்கரங்களையும் விழிப்படையவைக்கிறாள்
சிவம்


இனி இரண்டாவது அர்த்தம்

அன்னை பராசக்தியின் மகிமையை அறியாத தேவர்களும் இல்லை, அவளின்  அருள் இல்லாமல் செய்யும் தியானம், தவம் இல்லை, அவளின் அருளின்றி  ஐந்தொழில் புரியும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ,மகேஷ்வரன் ,சதாசிவம் இல்லைஅதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும்
ஐந்தொழில்கள் இல்லைஆதிசக்தியின் உதவியின்றி ஆறு சக்கரங்களையும் கடக்க முடியாது

ஆக இதில் கூறவருவது உடல் என்பது சக்தி, உயிர் என்பது சிவன் . உயிர் இல்லாமல் உடலுண்டு .ஆனால் உடலில்லாமல் உயிர் இல்லை ஏனென்றால் உயிர் கண்ணுக்கு தெரியாது அதை அடைய உடல் கண்டிப்பாக உடல் தேவை 

ஆதலால் அன்னையை வழிபட்டால்தான் உயிரை அடைய முடியும் அதாவது சிவத்தை அடைய முடியும் இங்கு நமது கடைசி நிலை என்ன என்பது தான் பெரிது.  ஆக  நான் சொல்வதைகாட்டிலும் இங்கு தங்களுக்கு தானாகவே புரியும். ஆனால் வெளிப்படையாக கூறுவது முட்டாள் தனம், அது இங்கு வெளிப்படையானால் அது தாந்தான் என்ற ஆணவத்தை குறிக்கும்.ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? அதில் உயர்வென்றும் தாழ்வென்றும்  பிரிவாகுமா?உண்மையில் பெரியது என்னவென்று கீழே பாருங்கள்

அவ்வையரிடம் முருகன் கேட்டது பெரியது என்ன ?

அவ்வை பதில் சிறிதில் இருந்து பெரிதாக காட்டியது   (உண்மையைகூறியது)

முருகன்:     புவனம்(அண்டம்) பெரிது

அவ்வை:    இல்லை,அது நான்முகன் படைப்பு

முருகன்:   நான்முகன் பெரிது

அவ்வை:  இல்லை,அவன் விஷ்ணுவின் படைப்பு

முருகன்:  விஷ்ணு(கரியமால்)  பெரியது

அவ்வை:  இல்லை , அவன் அலைகடலில் அடக்கம்

முருகன்:   அலைகடல்  பெரியது

அவ்வை:    இல்லை, அலைகடல் குறுமுனியின் கையில் அடக்கம்

முருகன்:   அகத்தியர்(குறுமுனி) பெரியது

அவ்வை:   இல்லை, குறுமுனி கலசத்தில் பிறந்தவர்,

முருகன்:   கலசம் தான் பெரியது

அவ்வை:  இல்லை, கலசமென்பது புவியின் சிறுமண்

முருகன்:      புவி(பூமி)  பெரிதா

அவ்வை:      இல்லை , புவி ஆதிசேசனின் தலைபாரம்

முருகன்:      அப்படினா,   ஆதிசேசனா?

அவ்வை:       இல்லை,  அது உமையவள் சிறு மோதிரம்

முருகன்:     அப்படின்னா, அன்னை உமையவளா

அவ்வை:        இல்லை, அவள்  சிவனின் ஒரு பாதி

முருகன்:    அப்படின்னா சிவன் தான் பெரியவரா

அவ்வை:    அதுவும் இல்லை, ஏன் என்றால் அவர் அடியார் உள்ளத்துள் அடக்கம்

முருகன்:    அப்படின்னா ,   அடியவர்  தான் பெரியவரா

அவ்வை:

அதுவும் இல்லை ,அவரின் பெருமையை (வரலாறுகளை)  சொல்லுவதே  இதை

அத்தனைக்காட்டிலும்     பெரிது

பெரிது

பெரிது

பெரிது