கஞ்சமலை ஒரு அறிமுகம்
கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சப்த சித்தர்கள் வாழ்ந்த மலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை.
இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும்
இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவர்களான திருமூலர், காலங்கிநாதர்,அகத்தியர்,கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும்
மேலும் இது பல சிறப்புகளையுடையதாகும் அது பற்றி இனி நாம் பர்க்க போகிறோம். பலரும் கொல்லிமலை,கல்வராயன்மலை,பர்வதமலை,பொதிகைமலை,சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை அதனால் இதன் சிறப்புகள்,அமைவிடம்,வரலாறு,மூலிகைகள் ஆகியவற்றை பற்றி
கூறுகிறேன்
இதில் தவறு இருப்பின் தாங்கள் தாராலமாக சுட்டிகாட்டலாம் மேலும் சித்தர்கள் ஆசிர்வாதத்துடன் இதை பதிவு செய்கிறேன்
இதன் சிறப்புகள் பற்றி இன்று பார்ப்போம்
கஞ்சமலையின் சப்த சித்தர்கள் அகத்தியர், திருமூலர்,காலங்கிநாதர், மாலங்கநாதர், சுழுமுனை சித்தர்,கஞ்சமலைசித்தர்,கரடி சித்தர்,
மேலும் இம்மலையில் சடையாண்டி சித்தர்,கோரக்கர்,மாலங்க சித்தர் போன்றோரும் வாழ்ந்து வந்துள்ளனர்
காலங்கிநாதரின் குருபக்தியை
திருமூலர் கண்டது இந்தமலையில் தான்
அவ்வையாருக்கு அதியமான்
நெல்லிகனி கொடுத்ததும் இங்கு தான், அது விளைந்த இடமும் இங்கு தான்
அங்கவை,சங்கவை
திருமணம் நடந்ததும்,
அகத்தியர் இங்கிருந்து
பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போலாம் எனவும்அவரே குறிப்பிடுகிறார்
சிவனும்,பெருமாலும்
சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும்.
சுலுமுனை சித்தர் குகை,
அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது
சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள
ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது
இனி இதன் சிறப்புகள் விரிவாக அடுத்தடுத்த பதிவில் கண்போம்