September 15, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -13

தமிழும் சமஸ்கிருதமும் ஓர் ஆய்வு – 2

சமஸ்கிருதம் யோக சாதனைக்கு கடினமான மொழி என்று கூறுவதை நாம் ஏற்றுகொண்டாலும் சமஸ்கிருதத்தில் உச்சரிப்பு மிக கவனமாக கையாண்டால் இந்த மொழியையும் சாதனைக்கு உட்படுத்தலாம்.
சமஸ்கிருத மொழி ஆரிய மொழி அல்ல என்று நிறைய சான்றுகள் உள்ளன. வடக்கே இருந்தவர்கள் அதிகம் இது பேசபட்டதால், பல இடங்களில் இது பரவி ஆரிய இனத்தவர் என சுட்டும் நபர்கள் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வந்ததாக ஆன்றோர் பெருமக்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் வருகைக்கு முன்பே சமஸ்கிருதம் தமிழர்கள் பேசியதாக கூறபடுகிறது.

ஆரியன் என்றால் சிவன் , தீப்பிளம், ஒப்பில்லாதவன் என்றும் நிறைய பொருள் கூறுகிறார்கள்.ஆரியன் என்ற வார்த்தை எங்குள்ளது என்றால் நிறைய இடம் காட்டமுடிகிறது

உதாரணம்

சூரியன் சந்நிதியிற் சுடு மாற்போல்
ஆரியன் தோற்ற முன் அற்ற மலங்களே
               
                  ----திருமந்திரம் முதல் தந்திரம் உபதேசம் பாடல்-5

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

           ----திருவாசகம் சிவபுராணம்

சூரிய காந்தக் கல்லினிடத்தே செய்ய
சுடர் தோன்றியிடச் சோதிதோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான் வந்தருளால் தோன்ற

                    -----சிவஞான சித்தியார்சாதனவியல்

ஆரியர் வழுத்திய வருணிலையனாதி காரியம்
விளக்குமோர் காரண விளக்கே

                  ------- அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடல்-1510

இப்படி அனைத்து இடங்களிலும் ஆரியன்,ஆரியம் என்ற வார்த்தை காணலாம்.
சமஸ்கிருதம் பற்றி ஆன்றோர்கள் கருத்து கீழே வருகிறது

பாரதிய கலாச்சாரப் பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சம்ஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம் என்பதை நான் உணர்கிறேன்.
                                                                                      காமராஜர்.
 வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி

          -----தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை  .

வடமொழியும் நமது நாட்டுமொழி, தென்மொழியும் நமது மொழி என்பது என் கருத்து’                              --- திரு.வி.க.

யாம் அறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் ஒன்றும் இல்லை என்கிறார் பாரதியார். (பாரதியார் பலமொழி கற்றவர் என நமக்கு தெரியும்)

இப்படி சமஸ்கிருதமும் தமிழும் இருந்த பூமியில், சமஸ்கிருதம் அழிந்ததற்க்கு காரணம் வெள்ளையர்கள்.ஏனெனில் ஆங்கிலம் உருவானது சமஸ்கிருதத்தில் இருந்து தான். அதனால் அதன் மூலமொழியான சமஸ்கிருதம் அழிய தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்க்கும் எது சிறந்தது என சண்டை  மூட்டபட்ட்து. அண்ணனை வைத்து அவன் தம்பியை கொன்றது போல் தமிழை வைத்து அதன் இருப்பிடத்தை அழித்தனர்.அதனால் அந்த மொழி அழிவுப்பாதையில் உள்ள மொழியாகும்.(இது பெரிய பதிவு சுருக்க பட்டுள்ளது)

இப்போது சமஸ்கிருதம் பேசும் இடம் இரண்டே இரண்டு கிராமம் தான்.ஒன்று ஒரிசா மாநிலத்தில் கந்தர்புரா மாவட்டம் சியாம்சுந்தர் பஞ்சாயத்துக்குட்பட்ட சசானா கிராமம்.மற்றொன்று கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் துங்கா நதிக்கரையில் உள்ளது மாத்தூர் கிராமம். இந்தியாவில் இரண்டு கிராமங்களில்தான் இன்று வரை சமஸ்கிருதம் பேச்சுமொழியாக உள்ளது. அதில் மாத்தூர் கிராமம் மிக முக்கியமானது.மொழியை அழியவிடமாட்டோம் என கொள்கையோடு இருக்கிறார்கள் கிராமம் என்பதால் இன்னும் உள்ளது.


நன்றாக நினைவில் கொள்ளவும் ஒரு இனம் அழிந்தால் அந்த இனத்தின் கலாச்சாரமும்,மொழியும் தானாக அழியும். நாம் இப்போது தமிழ் பேசுவது சரியான உச்சரிப்பு இல்லை என அனைவரும் அறிந்த ஒன்று. உருபடியாக பேசியது யார் என்றால் இலங்கை தமிழ் மக்கள் மட்டுமே, ஏன் 11 நாடுகள் உதவியின் மூலம் இலங்கை தமிழர்கள் கொல்லபட்டனர்,யாழ்பாண நூலகம் ஏன் அழிக்கபட்டது என ஆராய்ந்தால் ஒன்று மட்டுமே விளங்கும்.அதை சிந்திக்க!!!

நாங்கள்(போராளிகள்) எங்களுக்காக போராடவில்லை, எங்கள் இனத்திற்க்காக தான் போராடுகிறோம்.எங்கள் இனத்தின் ஒவ்வொரு நபருக்காகவும் போராடுகிறோம்”.   இந்த வரி  தமிழினத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுடையது.இதற்க்குள் என்ன என்ன உள்ளது என்று உங்களுக்கு புரியும் என நினைகிறேன்.


உலக செம்மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் என்றால் அடுத்து இருப்பது சமஸ்கிருதம் அதற்கடுத்து இருப்பது சீன மொழி ஆகும்.ஒரு மொழி செம்மொழி என அறிவிக்க 11 தகுதிகள் அந்த மொழிக்கு இருக்க வேண்டும்.ஆனால் குறைந்தது 7 தகுதி இருந்தால் அது செம்மொழி என ஏற்றுகொள்வர்.

தமிழ் மொழி முழுமையாக 11 தகுதிகளை கொண்டது அதற்கடுத்து இருப்பது சீன மொழி தான் 10 தகுதிகளை உடையது.சமஸ்கிருதம் 7 தகுதிதான் ஆனால் அது பற்றி கவலை இல்லை அது அழிக்கபட்டுவிட்டது. அப்படியானால் பார்வையெல்லாம் எதன் மீது இருக்கும்?சிந்திக்க

சீன மொழி செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 1948ல், ஆனால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கபட்ட ஆண்டு 2004 . பலபேர் திரு.கருணாநிதி அய்யா தான் செம்மொழி பட்டம் வாங்கி தந்தார் என நினைகிறார்கள் உண்மை எது தெரியுமா?

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து , இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த விடயத்தை ……………..

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது. (என்பதால் கருணாநிதி தான் அறிவிப்பு வாங்கினார் என நாம் நினைகிறோம்.)
                        ------- இந்த அரசியல் தகவல்கள் விக்கிபீடியா மூலம் எடுத்தது

அடுத்த பதிவில் தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி உபயோகம் மற்றும் மந்திரம் அவற்றின் சக்தி மற்றும் அதன் தன்மையை ஆராய்வோம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு
நன்றி

வாழ்க வளமுடன்No comments: