September 2, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 10

 பிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -1


அந்த காலத்தில் எல்ல விலங்குகளும் பேசியிருக்கின்றன என பல மதங்களில் சான்று உள்ளன .


ராமயணத்தில் குரங்குகள்,கரடி,மரவகைகள்,பறவைகள்(ஜடாயு) அதேபோல் பைபிளில் பாம்பு,திமிங்கலம்,பன்றிகள். என்றும் இஸ்லாமியத்தில் நரிகள், மாடுகள் என விலங்குகள் பேசியதாக வருகிறது.

இது எல்லாம் உண்மையாக இருக்குமா என்றால் உண்மைதான். ஆனால் இக்காலத்தில் இது ஒரு சில இடத்தில் மட்டுமே இவை நடக்கிறது.

அவை சில சிம்பான்சி குரங்கு வகை,கிளிகள்,பேசுகிறது. மேலும் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள, ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசும் அதிசயம் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமேசான் ஆற்று பகுதியில் வாழும் சில காட்டுவாசிகள் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்க்கு தகவல் அனுப்ப குறிப்பிட்ட ஒரு மரத்தை பயன்படுத்துகின்றனர்.இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகளுக்கே இது இன்னும் விளங்கவில்லை.


இதை பற்றி அந்த காட்டுவாசியிடம் கேட்டதற்க்கு இந்த மரத்தோடு பேசும் வழக்கம் எங்களுக்கு உண்டு அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால், நான் அனுப்பும் செய்தியை இந்த மரம் கேட்டு அது அந்த கிராமத்தில் உள்ள அந்த மரத்திடம் கூறும், பின் அந்த மரம் அது கூறுவதை கேட்டு அங்குள்ள என் மனைவி, மக்கள் அறிவார்கள் என கூறினார். இதுவும் இன்னும் விஞ்ஞானிகளுக்கு விளங்கவில்லை.

சித்தர்கள் மூலிகை பறிக்கும் போது சில சடங்குகள் செய்து தான் மூலிகை பறிப்பர் அதில் சாப நிவர்த்தியும் ஒன்று சில மரங்களிடம் சபநிவர்த்திக்காக பேசியதாக குறிப்புகள் ஆங்காங்கே உள்ளன.

இப்படி எல்லாவகையிலும்  சில குறிப்பு பேச்சுகளை அனைத்து உயிரினங்களும் வெளிபடுத்துகின்றன.

அந்த குறிப்பு பேச்சு என்பது சில ஒலியலைகள் உள்ளடக்கியதாக உள்ளது. அது பல தமிழ் ஒலியலைகளை கொண்டதாக உள்ளது.

மதுரையில் வன்னிமரம் சாட்சி சொல்லியது, பசுமாடு சாட்சி சொல்லியது என்பதெல்லாம் இந்த ஒலியலைகளை வைத்து தான். இதை சித்தர்களும் பேசுகின்றனர் ஆனால் நம்மால் தான் அறிய முடியவில்லை.

ஒரு சிலர் மனிதனுக்கு மனம் உண்டு என்பது போல், பிற விலங்குகளுக்கும் மனம் உண்டு என கூறுகின்றனர்.

நமது யோகிகள்,சித்தர்கள்,முனிவர்கள் கூறிய கருத்து மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ளது என்றும் அதனால் தான் அவனை மனிதன்(மனுஷ்யன்) என்கிறோம். ஆனால் சிலர் இதை மறுத்து பேசுகின்றனர்.

தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் மரபியல் பிரிவில் கீழ்காணும் பாடலை கவனிக்க
“……………………………………..
ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
என்கிறார்.

இதை படித்தால் நன்கு விளங்கும். அவர் தான் கூறியதாக கூறாமல், நேரிதின் உணர்ந்தோர் நெறிசெய்தனர் என்கிறார். அதாவது இதை உணர்ந்தவர்கள் கூறினார் என்கிறார்.

இதை சில பேர் அறியாமல் அதை ஆராயாமல் உணராமல்  மனம் என்பது எல்லாருக்கும் உள்ளது என கூறுகின்றனர்.அதற்கு இந்த பாடல் குட்டு வைத்தது போல் உள்ளது

எல்லா சித்தர்களும் மனிதன் மனதை செம்மைபடுத்தினால் வெற்றி பெறலாம் என கூறினார்களே அன்றி, மரமோ , விலங்கோ மனதை செம்மைபடுத்த வேண்டும் என கூறவில்லை.

அடுத்தபதிவில் இன்னும் காண்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

No comments: