பிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -2
(கருத்து புரிய திரும்ப திரும்ப படிக்கவும்)
இப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ்
மொழியாகும். சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic)மட்டும்
வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.
சங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து
மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை
அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.
அதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின்,
கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும்
இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே
நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை
பாடல் எண் -2)
அதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில்
சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார் உதாரணம்:
எறும்பு,வண்டு(ஆதாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,1331)
பாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி
பாஷையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும்
மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)
இங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா,
பரி(குதிரை)….பாஷை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.
இது மறைக்கபட்ட
தமிழ்ர் கலைகளில் ஒன்று.
இந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில்
இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.
இதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண்டு
வகைபடும். ஒன்று 1.ஒலியலைகள் மூலம் கொடுப்பது,இன்னொன்று 2.கண் பார்வையால் பேசுவது அல்லது
கொடுப்பது.
குதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும்
தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாஷை என்கிறார்கள்.
பரிபாஷை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம்
வைத்து பேசாதே!!!!
(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம்
என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)
இந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள்.
தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள்
இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.
அதனால் தான் குரு சிஷ்ய உறவு மிக முக்கியம் என்பார்கள்.
சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி
அர்த்தம் கிடைக்கும்.
இதை அறியாமல் சிலர் பரிபாஷை என்பதை அகராதியில் தேடுவார்கள்.
சித்தர்கள் பரிபாஷை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம்
பற்றி அறியவே.
பிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும்
பரிபாஷை(குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.
இரண்டாவது பரிபாஷை ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள்
மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித
தேகம் 72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை
ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)
அப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை
இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது
கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.
அப்படியானால் இந்த கந்த சஷ்டி வரிகள், என்ன பரிபாஷை
வகை என புரியும்.
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு
நன்றி
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment