தமிழும் சமஸ்கிருதமும் ஓர் ஆய்வு – 1
ஊக்கம் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும்
நன்றி மேலும் பல ஆன்றோர்கள் வாழ்த்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும்
நன்றி.
இன்றைய பதிவில் நாம் காண்பது தமிழுக்கும்
சமஸ்கிருதம் என்ன வேறுபாடு மற்றும் சமஸ்கிருதம் பற்றிய தகவல்கள்,
மேலும் அதன் அவசியம் மற்றும் சமஸ்கிருதத்தை காட்டிலும் தமிழ் மொழியில்
உள்ள ஆற்றல் என்ன என்பது பற்றி ஆதார பாடல்கள் ஆங்காங்கே வரும் ஆதலால் பதிவு நீளமாக
இருக்கும் நிதானமாக படித்து தமிழ்மொழியின் சக்தியை புரிந்துகொள்ளுங்கள்.
நண்பர்களே சில
பாடல்கள் எண் கொடுக்கபடும் பதிவின் நீளம் கருதி!
முதலில் தோன்றிய மொழி தமிழ் இது அனைவரும்
அறிந்ததே அடுத்து தோன்றிய மொழி எது என்றால் சமஸ்கிருதம் தான்.
சமஸ்கிருதம் தமிழ்மொழியில் இருந்து சிவன் உருவாக்கியதாக சொல்கிறார்கள்
ஆனால் அதுவும் முருகனால் உருவாக்கபட்ட்து என சில குறிப்புகள் மட்டும் உள்ளன.
சரி ஆய்வின் உள்ளே செல்வோம்.
சமஸ்கிருதம் தமிழின் சகோதர மொழி என்றும்
அது மந்திர பூட்டுக்களுக்காக உருவாக்கபட்டமொழி என்றும் கூறுகிறார்கள்.அதனால் மந்திர ஒலியலைகளை எழுப்ப முடியும் ஆனால் ஞான விளக்கங்களை சரியாக எடுத்துகாட்டமுடியாது
என்கிறார்கள்.சமஸ்கிருதத்தால் கட்டியதை அவிழ்க்க தமிழ்மொழி ஒன்றால்
தான் முடியும் என்கிறார்கள்.
வசிஷ்டமுனிவர் தமிழ்மொழி கற்றார் என்பதற்கு
நிறைய சான்றுகள் உள்ளன மேலும் ராமனுக்கு தமிழ்மொழியில் தான் ஞானத்தை வழங்கினார் என்றும்
உள்ளன.தமிழ்மொழி ஞானத்தின் பிறப்பிடம் என்று நிறைய குறிப்புகள் வருகிறது.
எல்லா அறிஞர்களும் இந்த இரண்டு மொழியிலும்
புலமை கொண்டு உள்ளதை அனேக இடங்கள் வெளிப்படுத்துகிறது.
“பாசையென்ன சமஸ்கிருத வடமாம்பாசை
பரிச்சுழியைக் காட்டிடுமே முத்தியீமா”
-----காகபுஜண்டார் பெருநூல்
– 436
விரும்பாற் செய்தீரே நூலைத் தொட்டு
மேலானோ ரெதினாலே கிரந்தத்தாலோ
-----காகபுஜண்டார் பெருநூல் – 439
இதை தொடர்ந்து
கிரந்தமென்ன அகத்தியன்சொற் பாசைதானே
-----காகபுஜண்டார்
பெருநூல் – 440
இங்கு நிற்க அதாவது கிரந்தம் வடமொழிக்கு கிரந்தம்
என பெயர் உள்ளது அனைவரும் அறிவர் ஆதன் விளக்கம் யாதெனில் முடிச்சுவைக்கபட்டுள்ளது என்று
அர்த்தம் அதாவது யோகத்தில் முக்கிரந்தி உள்ளது இந்த மூன்று கிரந்தியும் சமஸ்கிருத்த்தில்
முடிச்சாக உள்ளது. அதை அகத்தியர் சொன்னார் அந்த யோகநூலையும் குறிப்பிடுகிறார்.
பின்னாலில் அந்த நூல் பூட்டை நீக்கி தமிழில் செய்ததாக அகத்தியரே கூறுகிறார்
அதை கீழே காணவும்
திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ்சேர்ந்த பூரணமாம் அறிவில் ஏறி
பாடினேன் செளமிய சாகரத்தை மைந்தா
-----செளமிய சாகரம்
பாடல் – 7
தேனான வட மொழியை தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்
----செளமிய
சாகரம் பாடல்
– 8
(இந்த பாடல் முருகன் கூறியதாக சொல்கிறார்
முழு பாடல்கள் பதிவு செய்தால் பதிவு நீளும் என்பதால் பாடல் எண் கொடுத்துள்ளேன்)
(வடமொழி தேன் என்றால் தமிழ் மொழி அமிழ்தம்
என்பார் ஒரு இடத்தில் முருகபெருமான்)
வடமாம் பாஷை என்றால் வடம் என்றால் தேர்பிடித்து
இழுப்பார்கள் அல்லவா அந்த கயிறுக்குபேர் தான் வடம் என்பார்கள்.
அந்த கயிறு மிகவும் பலபிரிவுகளை பின்னி முறுக்கி உண்டாக்கிய பலம்வாய்ந்த
சுலபமாக பிரிக்க முடியாத கயிற்றை குறிக்கும். அது போல நேரடியாக
சொல்லாமல் பல முடிச்சுகளை கட்டி சொல்லும் பாசை ஆகும் என்கிறார் காகபுஜண்டர்
“துய்ய தமிழ்ப்பண்டிதனாம் கவிவானாம்”
போகர் 7000ல் பாடல்-5835
போக முனிவர் வசிஷ்டர் தமிழ் பண்டிதர்
என கூறுகிறார் கவனிக்க
“நவிலுகிறேன் ரகுராமா நன்றாய்ப் பாரு”
வசிஷ்டர் வைத்திய சூத்திரம் – 206ல் முதல் காப்பு பாடல்
இந்நூல் தமிழ் நூல் இதுபோல பல தமிழ்நூல்கள்
பல வசிஷ்டர் எழுதியுள்ளார்.
தமிழ் அந்த காலத்தில் அதிகம் அதை தவறாக உபயோகபடுத்தியதால் தான். சமஸ்கிருதம் உருவக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தான்
வேதத்தை சமஸ்கிருதத்தில் கூறினார்கள். அது வாய்மொழியாக தான் இருந்தது
பின் தான் சமஸ்கிருதம் எழுத்துக்கு கொண்டுவரப்பட்டது.
பேசியோ,பாடியோ ஒருவரை கொல்லமுடியும் என்றால் அது தமிழில் தான் முழு வல்லமை உள்ளது.
இன்னும் ஆதரத்துடன் சமஸ்கிருதம் தமிழ் உள்ள வேறுபாடு, சமஸ்கிருத நன்மைகள் மற்றும் தமிழில் உள்ள ரகசியங்கள் மற்றும் ஏன் மந்திரங்கள்
தமிழில் கூறவில்லை என அறிவியலோடு ஆராய்வோம்.
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு
நன்றி
வாழ்க வளமுடன்
1 comment:
பதிவுக்கு நன்றி..
அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ இகஙச
Post a Comment