December 25, 2012

ஐயப்பன் விரதம்

ஐயப்பன் கதை அனைவரும் அறிந்ததே அதனால் ஐயப்பன் விரதத்தை பற்றி பார்ப்போம். இதை பலரும் ஏன் மாலை அணிகிறோம் எதற்க்காக ப்ரம்மசரியம் செய்கிறோம் என்று பலர் தவறான கருத்தை தெரிந்து வைத்து கொண்டுள்ளார்கள்.  அதை பற்றி சரியான விளக்கத்தை இன்று பார்ப்போம்

ஐயப்பனின் தீவிர பக்தரான மாதவ நாயரை சனீஸ்வர பகவான் ஏழரை ஆண்டு பிடிக்க போகும்போது ஐயப்பன் இடையில் வந்து பிடிப்பின் நோக்கத்தை அறிந்தார்.பின் தன் பக்தர்களை பிடிக்க கூடாது எனவும் கேட்டார் அதற்கு சனீஸ்வர பகவான் சில கட்டளை விடுத்தார். அதை பின் பற்றினால்தான் அவர்களை, தான் பிடிக்கமாட்டேன் என்றார்.ஐயப்பனும் அந்த கட்டளைகளை கேட்டு தன் பக்தர்களுக்கு கூறினார். அவை பின் வருமாறு

ஐயப்ப பக்தன் தன் மனைவியை விட்டு (ஒரு மண்டலத்துக்கு)48 நாட்கள் பிரிந்து இருந்து(ஒரே வீட்டில் இருக்கலாம் ஆனால் உறவு வைத்து கொள்ளக்கூடாது), ஐயப்பனை சபரிமலை வந்து தரிசனம் செய்ய வேண்டும் 

சபரிமலை ஏறுதல் கால் வழி பயணமாக இருக்க வேண்டும் கல்லும் முல்லும் காலில் படவேண்டும் (காலணி இல்லாமல் 48 நாட்கள் இருக்க வேண்டும் )

பால்,பழம் உண்டு ,அறுசுவை உணவை தவிற்க வேண்டும்.

அதிகாலை,மாலை பொழுதில் குளித்து சூரிய தேவ(சனீஸ்வர பகவானின் தந்தை) , ஐய்யப பூஜை செய்ய வேண்டும் 

 ஐய்யப்ப பக்தர்கள் கருப்பு வஸ்த்திரத்தை (துணியை) தவிர வேறு நிற உடை அணியக்கூடாது (கருப்பு நிறம் சனீஸ்வரருக்கு பிடித்தது)(சிவப்பு நிறம் முருகனுக்கு உகந்தது)

 தரையில் மட்டுமே படுக்க வேண்டும் தலையணையும் தவிர்த்து உறங்கவேண்டும் .

மாலை அணிதல் என்பது தான் காம,கோபங்களுக்கு உடன்படாமல் கட்டுபட்டு விரதம் இருப்பதை காட்ட மாலை அணியவேண்டும் 

அனைவரையும் கடவுளாக பார்க்க அனைவரையும் சாமி என்று அழைக்க வேண்டும், என்பதையும் நினைவுபடுத்தி கொண்டேயிருக்க 48 நாட்கள் மாலையுடன் ஐயப்பன் கூடவே வர வேண்டும்.(ஐயப்ப டாலர் மாலையில் இருக்க வேண்டும் ஒரு சிலர் மாலை கிடைக்கவில்லை எனறால் முருக மாலைஅணிவார்கள் அது தவறு)

தான் செய்த பாவத்தை கழிக்க பம்பையில் நீராட வேண்டும் இது முக்கியம்

இந்த கடுமையான விரதத்தை யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களை தான் பிடிக்கமாட்டேன் என்று ஐயப்பனுக்கு சனீஸ்வரபகவான் வரம் அளித்துள்ளார் .அதனால் தான் ஐயப்பன் தன்னை வேண்டி வருபவர்க்கு இந்த விரதத்தை அளித்தார்

சனீஸ்வரர் ஒருவரை பிடித்தால் அவரை மனைவியுடன் பிரித்து காடு மேடுகளில் அலையவைத்து அங்குள்ள பழங்களை கொடுத்து கல்லிலும் முல்லிலும் நடக்க வைத்து தரையிலே படுக்கவைத்து கடுங் குளிரை ஏற்படுத்தி படாதபாடு படுத்துவார் உடுக்ககூட உடையில்லாமல் செய்து விடுவார்.ஆனால் அவரை விட்டு செல்லும் போது அவர் இருந்த நிலையை விட பண்மடங்கு செல்வத்தையும் சிறப்பையும் தருவார் 


ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

சில பொருள் விளக்கம் 


ஐயப்பன் 

         அய்யா அப்பா இதை மணிகண்டன் தாய் தந்தையரை பிரியும்போது அவர்கள் கூறியதால் அதையே தன் பெயராக கொண்டார்

சபரிமலை

             சபரிக்கு மோட்சம் தந்து அவர் இருந்தமலையிலேயே கோவில் கொண்டார் அதுவே சபரிமலை 

ஹரிஹரசுதன்

         ஹரி - திருமால் , ஹரன் - ஈஸ்வரன் , சுதன் - மகன் 

பம்பை நதி

        கங்கையில் இருந்து எடுத்த நீரை கொண்டு ஐயன் உண்டக்கிய நதி

ஒரு மண்டலம்
                   
               48 - நாட்கள் என்பது ஒரு மண்டலம் 

 48 - நாட்கள்                
              
                     12 ராசி 9 கிரகம் 27 நட்சதிரம் இவை மூன்றும் இந்த 48 -நாட்களில் வந்துவிடும்  
                                                         12+9+27 = 48



No comments: