December 22, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசி மகிமை



விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.
“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் வைகுண்ட வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

ஏகாதசி


ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். 

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது


வைகுண்ட ஏகாதசி அன்று அனந்தசயனத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வது உத்தமம்.



சித்தமருத்துவத்தில் ஏகாதசி


பொதுவாக சித்தமருத்துவத்தில் கூட ஏகாதசி அன்று உணவு அருந்துதல் கூடாது என்பர் ஏன் என்றால் அன்று சாப்பிடும் உணவின் தன்மை அதிகப்படும்
அது விஷமானாலும் சரி அமிர்தமானாலும் சரி



No comments: