June 18, 2012

வர்மக்கலை நோக்கு வர்மம்




தனசெயன் நாடி 



வர்மக்கலை தெரிய முக்கிய கலையானஆயுதம் மூலம் தாக்கவேண்டும் என்றால் களரியும்பின் நோக்கு வர்மத்திர்க்கு   யோகாசனம், பிரணாயமம் இரண்டும் தெரியவேண்டும் 


வர்ம கலை வகைகள் 
படுவர்மம்-12
தொடுவர்மம் -96
ஆக மொத்தம் 108 ஆகும் இந்த வர்மங்களில் அடிபட்டலோ அல்லது அழுத்தம் கொடுத்தலோ அந்த பகுதி செயல் இழப்போ அல்லது வலியோ ஏற்படும் இது அமைந்துள்ள இடங்கள் 
கை, கால் -44
தலை -23
நெஞ்சு முதுகு-33
மூலம் -8
இதற்கெல்லாம் தலைவன் தனஞ்செயன் என்கிற வர்மம் 
வர்மம் சரிசெய்யும் முறை :
எந்த வர்மத்தில் அடிபட்டாலும் முதலில் கால்களை மடக்கி பத்மாசனமோ அல்லது சம்மணம் போட்டு உட்காரவைத்து தலையில் தனஞ்செயன் வர்மத்தில் மூன்றுமுறையும் முதுகில் மூன்றுமுறையும்  தட்ட வேண்டும். பின் சுக்கை வாயில் போட்டு அடிபட்டவரின் வாயில், காதில்,மூக்கு துவாரத்தில் ஊத வேண்டும் பின் அரிசி கஞ்சி சாதம் தான் மூன்று வேலை தரவேண்டும் அடிபட்டயிடத்தில் வீக்கம் அதிகமாக இருப்பின் நல்லெண்ணெய் விட்டு தடவி விடவேண்டும்.   
இந்த படு வர்மம் தொடுவர்மம் பற்றி பலபேர் கூரியுள்ள்ளனர்.
நோக்கு வர்மம் :
நோக்கு வர்மம் என்பது மூன்றுவகை படும்  
  1. தட்டு வர்மம் 
  2.சூண்டு வர்மம் 
  3.மெய் தீண்டா கால வர்மம்  

தட்டு வர்மம் 
கண்களால் பார்த்து எந்த பகுதியை செயலிழக்க வைக்கவேண்டுமோ அந்த பகுதியில்  பார்வையை செலுத்தி அழுத்தம் கொடுப்பது அல்லது  
தட்டியவுடன் அந்த நபர் மயங்கி கீழே விழுந்து விடுவார் . அவரை மேலே கூறிய முறையுடன் செய்தால் பிழைக்க வைக்கமுடியும் 
        உதாரணம் : 
          "கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படகூடாது " இதை பலபேர் கண் திருஷ்டி என்று தவறாக கூறுகிறார்கள்   
சூண்டுவர்மம் 
கண்களால் பார்த்து எந்த பகுதியை செயலிழக்க வைக்கவேண்டுமோ அந்த பகுதியில்  பார்வையை செலுத்தி சீண்டிவிடுதல் 
           உதாரணம் :
                   ஹர்ட் அட்டாக் , இது எப்படி வேலை செய்யும் என்று எளிமையாக சொன்னால் நமது கை முட்டியில் நுனி பகுதியை கையால் சீண்டி விட்டால் கரண்ட் ஷாக் அடித்தது போல் இருக்குமல்லவா அதுதான் வர்ம பகுதியில் கண்ணால் செய்வது 
மெய் தீண்டா கால வர்மம் 
            இருப்பதிலேயே இதுதான் மிக ஆபத்தான வர்மம் இந்த வர்மத்தில் இரண்டு பிரிவு உள்ளது ஒன்று மூலிகையுடன் செய்வது மற்றொன்று பிராண சக்தியின் மூலம் செய்வது. இதன் மூலம் யாரையும் எளிதில் வசியம் செய்து  , எதிராளியின் பிராணனை நிறுத்தலாம் இந்த மூலிகை மூலம் செய்வது மிக சுலபம் ஆனால் மூலிகை கிடைப்பது மிக கடினம் அந்த மூலிகை இரண்டு வகைப்படும் அது என்ன வென்று எனது குருவான மகான்  கோரக்கர் ஆசி கூர்ந்தால் உங்களுக்கு கூறுகிறேன் . ஒன்று மலைகளில் கிடைப்பது மற்றொன்று காடுகளில் கிடைப்பது .  பிராண சக்தியின் மூலம் செய்வதை 12 ஆண்டுகள் மாணவராக இருந்தால் மட்டுமே எந்த ஒரு குருவும் சொல்லித்தருவார்கள் 
         உதாரணம் :
              இந்த கலைக்கு உதாரணம் பல பேர் உள்ளனர் அதில் எனக்கு தெரிந்த சிலர் : 
வர்மக்கலை ஆசான் 
உயர்திரு ராஜேந்திரன் - மதுரை மாவட்டம் (zee tamil tv)
உயர்திரு பிரகாசம் குருக்கள் - திருவனந்தபுரம் (கேரளா )(vijay tv )
உயர்திரு டிராகன் டி ஜெயராஜ் -கோவை மாவட்டம் 
                                 மேற்கூறிய இருவர் தொலைக்காட்சியின் முலம் தெரிந்தவர்கள்

அடுத்த பதிவில் ஔவையார் பற்றி பல அறிய தகவல் காத்துகொண்டுயிருக்கிறது   

1 comment:

Unknown said...

Thodu varmam patri kooravum