June 27, 2012

ஔவையார்



 பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் ஏழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையைப் பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். 
பின் அவர்கள் அவ்விடம் விட்டு சென்றனர் பின் மழை பெய்து, வெள்ளம் வந்தது கூடையில் இருந்த குழந்தை ஆற்றில் சென்றது .அங்குள்ள ஒரு வணிகரால் எடுத்து வளர்க்கபட்டது. இளமை பருவம் வந்ததால் மணம் முடித்து வைக்க முடிவு செய்தனர் ஆனால் அவ்வைக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை பின் விநாயகரிடம் புலம்ப அவர் பிறப்பின் நோக்கத்தை கூறி அனைவருக்கும் தாயான வயதான தோற்றத்தை கொடுத்து தமிழ் தொண்டு செய்ய மதுரை அனுப்பிவைத்தார். பின் அவர்போகும் வழியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது 
முதலில் ஔவையார்  தகடூரை அடைந்தார். அங்கு பஞ்சம் நிலவியது, இதனால் அங்குள்ள சிற்றரசனான காரி ஆசான் என்கிற காரி மன்னன் தன்னிடம் இருந்த தானியங்களை எல்லாம் மக்களுக்காக கொடுத்துகொண்டிருந்தன் இதை பார்த்த அவ்வை இது மிகபெரிய செயலல்லவா நீ வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர். பின் இவரைதான் அதியமான் விளைச்சலில் பங்கு தராததால் கைது செய்தான். இவரை விடுதலை செய்து அந்த நாட்டில் தம்  கவிதிறத்தால் மழை பொழிய செய்தார் ஔவை.
தன் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதால் தன் நாட்டின் ஒரு பகுதியான கஞ்சமலையில் இருந்து கருநெல்லி என்ற ஒரு நெல்லிகனி கொண்டுவரப்பட்டது .இதை சாப்பிட்டால் நீண்டநாள் வாழலாம் என்று அதை அவ்வைக்கு கொடுத்தான் அதியமான். மிக அதிசிய கனியான நெல்லியை கொடுத்ததால் நீயும் வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
பின் அங்கிருந்து பறம்பு நாடு வழியாக சென்றார் அங்குதான் ஒரு அதிசயத்தை கண்டார் பாரி மன்னனும் அவன் மகள்கள் இருவரும் வழியில் உள்ள ஒரு முல்லை கொடியின் மீது இறக்கம் கொண்டு தன் தேரையே அங்கு நிறுத்தி அந்த கொடிகளை எடுத்து தன் தேர்மீது படர  விட்டனர் இதை கண்ட அன்னையின் உள்ளம் அளவற்ற மகிழ்ச்சி கொண்டது .பின் பாரியை பார்த்து  வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
அது சரி கடையேழு வள்ளல்கள் யார்யார் என்று தெரியுமா? அவர்களில்  மூன்று பேர் ஔவையால் வள்ளல் என்று பெயர் சூட்டபெற்றனர் 
பேகன் 
காட்டு மயில் அகவியதை கேட்டு அது குளிருக்காக நடுங்கியது என்று தன் பொன்னாடையை எடுத்து மயிலுக்கு போர்த்தி விட்டான் பேகன். சிறு உயிர்களிடத்தில் அன்பாக  கொடுத்ததால்  வள்ளல் என்று பெயர் எடுத்தான்  
பாரி 
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்தான், அதனால் செடி கொடிக்கு எல்லாம் மரியாதை செலுத்தியவன் என்ற பேரு பெற்று வள்ளல் என்ற பெயர் பெற்றான் 
காரி 
நல்ல சொற்களையும் உணவு தான்யங்களையும் வழங்கியதால் வள்ளல் என்ற பெயர் பெற்றான்    
ஆய்
நீலமணியும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலருக்கு கொடுத்தான் இதனால் இவன் இப்பெயர் பெற்றான் 
அதியமான் 
தமிழ் புலவரான ஔவைக்கு நெல்லிக்கனி (கரு நெல்லி )தந்தவன் 
நள்ளி
கர்ணனை போல(இரவலருக்கு ) வேண்டியவர்க்கெல்லாம் கேட்டதை கொடுத்தவன் நள்ளி 
ஓரி 
கூத்தாடுபவர்களுக்கும்,இரவலருக்கும் பல நாடுகளையும் ,செல்வங்களையும் பரிசாக வழங்கியவன் 
இதில் இவர்களின் கொடைத்திறம் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்கள், சூழ்ச்சி செய்து 
பாரி ,ஓரி,காரி,அதியமான் போன்ற வள்ளல்களை காலநேரம் பார்த்து ஒருவர் பின் ஒருவராக கொன்றனர்  
திருக்குறள் ஔவையின் மூலம் தான், மதுரை தமிழ் சங்கத்தில் பலத்தடைகளையும்  தாண்டி வெளியிடப்பட்டது. அதன் விளக்கம் நாளைய பதிவில் காண்போம்.


No comments: