மச்ச சாஸ்திரம்
மச்ச சாஸ்திரம் என்பது உடம்பில் உள்ள மச்சங்களை வைத்து அதற்கு தகுந்தார் போல் பலன் கூறுவது .மச்ச சாஸ்திரம் என்பது அங்க லட்சண சாஸ்திரம் என்றும் அழைக்கபடுகிறது
வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பதும் பெண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.
அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் . பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.
புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் – தனயோகம்
வலது புருவம் – மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் – நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல்
உதடுகளுக்கு மேல் – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் – வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் – அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு
பெண்களுக்கான மச்ச பலனகள்:
நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்
நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை – பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்
வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் – சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை
2 comments:
அந்த படத்தில இருக்கிற புள்ளைக்கு ராஜயோகம் அம்சம் கிடைக்குமான்னு பாக்க என்ன செய்யனும் தல
Good message iyya
Post a Comment