June 6, 2012

வர்மக்கலை

                                         

வர்மக்கலை ஓர் அறிமுகம் 


வர்மக்கலை பற்றி பலபேர் கூறுகிறார்கள்  நான் என்ன புதிதாக சொல்ல வேண்டும் என்று யோசிக்கும்போது இந்த உலகில் எதுவுமே புதிதில்லை பழையதை புது பெயருடன்  புகுத்துகின்றனர். அப்படி தான் நாமும் சொல்ல வேண்டும் இது கட்டாயம் அல்ல காலத்தின் நோக்கம்.  

வர்மக்கலை அப்படித்தான் பல பெயர்களில் உலவுகிறது குங்க்பூ,கராத்தே,அகிடோ,தாய்சி,சிலாத்,டிம் மாக்,கர் மகா, என பல பெயர்கள் ஆனால் அடிப்படை வர்மக்கலை தான் 

இதை முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் இறைவனிடம் தான், ஆம் வர்மத்தை பற்றி பார்வதியிடம் சிவன் தான் முதலில் கூறினார் .பின் பார்வதி தேவி அதை நந்திதேவரிடம் கூறுகிறார், பின் அது அங்கிருந்து அகத்தியரிடம் போய் சேருகிறது. வர்மக்கலை அங்கு தான் பகுத்தறியப்பட்டு அகத்தியர் அனைவருக்கும் கூறுகிறார் அவர் சாதாரணமாக கூறவில்லை உடலைவைத்து வர்மம் உள்ள இடத்தையும் அதன் முடிச்சையும் விளக்கமாக கூறுகிறார் யாரிடம், அந்த காலத்து மெடிக்கல் ஸ்டுடண்ட் போகர்,ராமதேவர்,புலிப்பாணி,தன்வந்திரி,பதஞ்சலி,குதம்பை சித்தர்,புலத்தியர்,தேரையர்   இதில் மிகவும்வர்மத்தை அற்புதமாக கற்று தேர்ந்தவர்கள்  போகர் ,ராமதேவர் ,புலிப்பாணி,தன்வந்திரி,தேரையர்.   

இவர்கள்  கற்றதை தனக்கென ஒரு பெயர் வைத்து கொண்டார்கள் ஆனால் வர்ம புள்ளி ஒன்றுதான் . அவர்கள் தனித்தனியாக நூல்கள் இயற்றினார்கள்

அவைகளில் எனக்கு தெரிந்த  சில நூல்கள்  : 



அகத்தியர் -வர்ம சூத்திரம் ,வர்ம திறவுகோல் ,ஒடிவு முறிவு சாரி,வாகட நிதானம்  

போகர் - வர்ம சூத்திரம் (மெய் தீண்ட காலம் )

பதஞ்சலி -வர்ம களஞ்சியம் 
குதம்பை சித்தர் -வர்ம பீரங்கி 
தன்வந்திரி சித்தர் - வர்ம சஞ்சீவி (மெய் தீண்ட காலம் )
புலிப்பாணி சித்தர் -வர்ம கண்ணாடி    

வர்ம சூச்சா சூச்சமம் ,வர்ம சூடி ,வர்ம தண்டூசி,வர்ம சூடி ,வில் விசை உட்சூத்திரம் ,லாட சூத்திரம் 300 இவைகள் யார் எழுதியது என்று தெரியாது ஆனால் வர்ம ஆராய்ச்சியில் நான் தேடியபோது இரண்டுயிரண்டு பாடல் வரிகள் கிடைத்தன. இதில் எனக்கு தெரிந்து நமக்கு கைக்கு கிடைக்க கூடிய நூல்கள்
    அகத்தியர் -ஒடிவு முறிவு சாரி,போகர் - வர்ம சூத்திரம் கடைகளில் கிடைகின்றன 
இக்கலையில்மூன்று பிரிவுகள் உள்ளன அவை 
படுவர்மம் 
தொடு வர்மம் 
நோக்கு வர்மம்
இந்த நோக்குவர்மத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன  
  1. தட்டு வர்மம் 
  2.சூண்டு வர்மம் 
  3.மெய் தீண்டா கால வர்மம்  
இதை பின்வரும் பதிவுகளில் காண்போம் .

4 comments:

VELU.G said...

ஒரே மர்மமா இருக்குங்க

Unknown said...

Iam very interested to know more details. And also to study.

Unknown said...

I want to know AND study Varma Kalai. Please indicate which location and address

Unknown said...

My name RAJAJI my contact number 98438 43073. Place KARUR. Irantha to study VARMA