September 12, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -12

தமிழும் சமஸ்கிருதமும் ஓர் ஆய்வு – 1


ஊக்கம் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி மேலும் பல ஆன்றோர்கள் வாழ்த்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.

இன்றைய பதிவில் நாம் காண்பது தமிழுக்கும் சமஸ்கிருதம் என்ன வேறுபாடு மற்றும் சமஸ்கிருதம் பற்றிய தகவல்கள், மேலும் அதன் அவசியம் மற்றும் சமஸ்கிருதத்தை காட்டிலும் தமிழ் மொழியில் உள்ள ஆற்றல் என்ன என்பது பற்றி ஆதார பாடல்கள் ஆங்காங்கே வரும் ஆதலால் பதிவு நீளமாக இருக்கும் நிதானமாக படித்து தமிழ்மொழியின் சக்தியை புரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களே சில பாடல்கள் எண் கொடுக்கபடும் பதிவின் நீளம் கருதி!
முதலில் தோன்றிய மொழி தமிழ் இது அனைவரும் அறிந்ததே அடுத்து தோன்றிய மொழி எது என்றால் சமஸ்கிருதம் தான். சமஸ்கிருதம் தமிழ்மொழியில் இருந்து சிவன் உருவாக்கியதாக சொல்கிறார்கள் ஆனால் அதுவும் முருகனால் உருவாக்கபட்ட்து என சில குறிப்புகள் மட்டும் உள்ளன. சரி ஆய்வின் உள்ளே செல்வோம்.

சமஸ்கிருதம் தமிழின் சகோதர மொழி என்றும் அது மந்திர பூட்டுக்களுக்காக உருவாக்கபட்டமொழி என்றும் கூறுகிறார்கள்.அதனால் மந்திர ஒலியலைகளை எழுப்ப முடியும் ஆனால் ஞான விளக்கங்களை சரியாக எடுத்துகாட்டமுடியாது என்கிறார்கள்.சமஸ்கிருதத்தால் கட்டியதை அவிழ்க்க தமிழ்மொழி ஒன்றால் தான் முடியும் என்கிறார்கள்.

வசிஷ்டமுனிவர் தமிழ்மொழி கற்றார் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன மேலும் ராமனுக்கு தமிழ்மொழியில் தான் ஞானத்தை வழங்கினார் என்றும் உள்ளன.தமிழ்மொழி ஞானத்தின் பிறப்பிடம் என்று நிறைய குறிப்புகள் வருகிறது.

எல்லா அறிஞர்களும் இந்த இரண்டு மொழியிலும் புலமை கொண்டு உள்ளதை அனேக இடங்கள் வெளிப்படுத்துகிறது.

பாசையென்ன சமஸ்கிருத வடமாம்பாசை
பரிச்சுழியைக் காட்டிடுமே முத்தியீமா
                                -----காகபுஜண்டார் பெருநூல் – 436

விரும்பாற் செய்தீரே நூலைத் தொட்டு
மேலானோ ரெதினாலே கிரந்தத்தாலோ
              -----காகபுஜண்டார் பெருநூல் – 439

இதை தொடர்ந்து

கிரந்தமென்ன அகத்தியன்சொற் பாசைதானே
                  -----காகபுஜண்டார் பெருநூல் – 440

இங்கு நிற்க  அதாவது கிரந்தம் வடமொழிக்கு கிரந்தம் என பெயர் உள்ளது அனைவரும் அறிவர் ஆதன் விளக்கம் யாதெனில் முடிச்சுவைக்கபட்டுள்ளது என்று அர்த்தம் அதாவது யோகத்தில் முக்கிரந்தி உள்ளது இந்த மூன்று கிரந்தியும் சமஸ்கிருத்த்தில் முடிச்சாக உள்ளது. அதை அகத்தியர் சொன்னார் அந்த யோகநூலையும் குறிப்பிடுகிறார். பின்னாலில் அந்த நூல் பூட்டை நீக்கி தமிழில் செய்ததாக அகத்தியரே கூறுகிறார் 
அதை கீழே காணவும்

திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ்சேர்ந்த பூரணமாம் அறிவில் ஏறி
பாடினேன் செளமிய சாகரத்தை மைந்தா
               -----செளமிய சாகரம்  பாடல் – 7

தேனான வட மொழியை தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்
                           ----செளமிய சாகரம்  பாடல் – 8

(இந்த பாடல் முருகன் கூறியதாக சொல்கிறார் முழு பாடல்கள் பதிவு செய்தால் பதிவு நீளும் என்பதால் பாடல் எண் கொடுத்துள்ளேன்)

(வடமொழி தேன் என்றால் தமிழ் மொழி அமிழ்தம் என்பார் ஒரு இடத்தில் முருகபெருமான்)

வடமாம் பாஷை என்றால் வடம் என்றால் தேர்பிடித்து இழுப்பார்கள் அல்லவா அந்த கயிறுக்குபேர் தான் வடம் என்பார்கள். அந்த கயிறு மிகவும் பலபிரிவுகளை பின்னி முறுக்கி உண்டாக்கிய பலம்வாய்ந்த சுலபமாக பிரிக்க முடியாத கயிற்றை குறிக்கும். அது போல நேரடியாக சொல்லாமல் பல முடிச்சுகளை கட்டி சொல்லும் பாசை ஆகும் என்கிறார் காகபுஜண்டர்

துய்ய தமிழ்ப்பண்டிதனாம் கவிவானாம்
             போகர் 7000ல் பாடல்-5835

போக முனிவர் வசிஷ்டர் தமிழ் பண்டிதர் என கூறுகிறார் கவனிக்க

நவிலுகிறேன் ரகுராமா நன்றாய்ப் பாரு
   வசிஷ்டர் வைத்திய சூத்திரம் – 206ல் முதல் காப்பு பாடல்

இந்நூல் தமிழ் நூல் இதுபோல பல தமிழ்நூல்கள் பல வசிஷ்டர் எழுதியுள்ளார்.

தமிழ் அந்த காலத்தில் அதிகம் அதை தவறாக உபயோகபடுத்தியதால் தான். சமஸ்கிருதம் உருவக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் தான் வேதத்தை சமஸ்கிருதத்தில் கூறினார்கள். அது வாய்மொழியாக தான் இருந்தது பின் தான் சமஸ்கிருதம் எழுத்துக்கு கொண்டுவரப்பட்டது.

பேசியோ,பாடியோ ஒருவரை கொல்லமுடியும் என்றால் அது தமிழில் தான் முழு வல்லமை உள்ளது. இன்னும் ஆதரத்துடன் சமஸ்கிருதம் தமிழ் உள்ள வேறுபாடு, சமஸ்கிருத நன்மைகள் மற்றும் தமிழில் உள்ள ரகசியங்கள் மற்றும் ஏன் மந்திரங்கள் தமிழில் கூறவில்லை என அறிவியலோடு ஆராய்வோம்.

உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி


வாழ்க வளமுடன்



September 6, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 11

பிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -2

 (கருத்து புரிய திரும்ப திரும்ப படிக்கவும்)

இப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ் மொழியாகும். சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic)மட்டும் வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.


சங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.


அதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின், கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும் இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை பாடல் எண் -2)


அதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில் சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார் உதாரணம்: எறும்பு,வண்டு(ஆதாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,1331)

பாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி பாஷையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும் மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)


இங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா, பரி(குதிரை)….பாஷை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.

 இது மறைக்கபட்ட தமிழ்ர் கலைகளில் ஒன்று.

இந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில் இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.

இதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண்டு வகைபடும். ஒன்று 1.ஒலியலைகள் மூலம் கொடுப்பது,இன்னொன்று 2.கண் பார்வையால் பேசுவது அல்லது கொடுப்பது.

குதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும் தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாஷை என்கிறார்கள்.

பரிபாஷை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம் வைத்து பேசாதே!!!!
(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம் என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)

இந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள். தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள் இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.

அதனால் தான் குரு சிஷ்ய உறவு மிக முக்கியம் என்பார்கள். சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி அர்த்தம் கிடைக்கும்.

இதை அறியாமல் சிலர் பரிபாஷை என்பதை அகராதியில் தேடுவார்கள். சித்தர்கள் பரிபாஷை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம் பற்றி அறியவே.

பிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும் பரிபாஷை(குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.

இரண்டாவது பரிபாஷை  ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள் மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித தேகம்  72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)

அப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.

அப்படியானால் இந்த கந்த சஷ்டி வரிகள், என்ன பரிபாஷை வகை என புரியும்.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
           
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

September 3, 2016

மறைக்கப்பட்ட தமிழர் கலைகள் பாகம் - 3

பதினைந்தாம் புலி - ஓர் ஆய்வு

பதினைந்தாம் புலி என்பது ஆடு புலி ஆட்டம் என்ற விளையாட்டே ஆகும்.


இந்த விளையாட்டை கண்டுபிடுத்தவர்கள் சோழரா,பாண்டியரா,கொங்குநாட்டை சேர்ந்தவரா என தெரியவில்லை.

ஆனால் நாம் இதில் உள்ள நுட்பம் பற்றி மட்டும் ஆராய்வோம்.

இதில் 3 புலிகள் 15 ஆடுகள் உள்ளது. மேலும் முக்கோணத்தின் மீது மூன்று பட்டை கோடுகள்.மொத்தம் 23 புள்ளிகள்.

ஆடுபுலி ஆட்டம் ஒரு போர்கலையை மையபடுத்தி மறைமுகமாக விளையாடும் அறிவுபூர்வமான விளையாட்டு.

மூன்று புலிகள் ஆணவம்,கன்மம்,மாயை மேலும் 15 ஆடுகள் என்பது பத்து தசேந்திரியங்கள்,5 பூதங்களால் ஆன உடலை குறிக்கும்.

இதில் காலியான ஐந்து புள்ளிகள் ஐந்து அவஸ்தைகளை குறிக்கும்.

மூன்று கோடுகள் ஆழ்மனம்,நடுமனம்,புறமனம் ஆகிய நிலைகளை குறிக்கும்.

இதில் புலிகளின் குகை எனபடுவது *ஆழ்மனம்* என்கிற மேல் அடுக்கை குறிக்கும்.

அங்கிருந்து தான் புலிகள் வந்து ஆடுகளை கவரும்

ஐந்து ஆடுகள்(உடலை இழந்தால்) வெட்டுபட்டால் மூன்று புலிகள்(ஆணவம்,கன்மம்,மாயை) வெற்றியடைந்தது.


இந்த புலிகளை வெல்ல நமக்கு கொடுத்தது தான் இந்த முக்கோணம்(அறிவு).

விளையாடுபவர் முக்கோணம் பார்த்து விளையாடுவதால் அறிவு விருத்தியாகும். மூளையின் செல்கள் அவரை அறியாமலே விழிப்புடன் இருக்கும்

இதை தான் இன்றை காலம் உபயோகபடுத்துகிறது.

180° பார்வையில் உங்கள் கண்ணில் முக்கோணம் பட்டால் உங்கள் மூளை உடனே விழிப்பு அடையும் நீங்களும் நிதானம் ஆவீர்கள். உதாரணம்:


போக்குவரத்து அறிவிப்புகள் அனைத்தும் முக்கோணத்திலேயே வைப்பார்கள்.வேகத்தடை,வலதுபக்கம்,இடதுபக்கம் குறியீடுகள்.

கோவிலுக்குள் செல்லும் முன் கலச தரிசனம் செய், என்பது கலசம் பார்ப்பது முக்கோணம் அமைப்பில் இருபதால் மனம் ஒரு நிலைபடும். அதன் பின் உள்ளே செல்வது

முக்கோணத்தின் கூர்மையான பகுதியை உற்று பார்ப்பதால் கவனம்(concentration)ஓர் நிலை படும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.


முருகனை வணங்கிணால் அறிவு வளரும் என்பது அவன் கையில் உள்ள வேல் முக்கோண அமைப்பு என்பதால் தான்.

நீங்கள் உங்கள் வீட்டில் முக்கோண படம் உங்கள் கண்ணில் படும்படி வைத்தால் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்பது சூட்சமம்



பூஜை அறையில் பிரமிடு இருந்தால் மூளை மனம் ஒருமுகமாக இருக்கும் என்பது அது முக்கோணம் ஆகும்

ஆக இந்த விளையாட்டை விளையாடினால் புலிகளை எப்படி அடைப்பது என்பதும் அறிவு வளர்ச்சி அதிகபடுத்தவும் என்பதும் புரியும்.

ஆன்மீக கருத்து ரீதியாக எந்த ஒரு ஆட்டையும் இழக்காமல் மும்மலங்களை வெல்வது எப்படி என்பது இந்த விளையாட்டில் நுட்பமாக உள்ளது.

கீழே படம் மூலம் விளக்கி ஒன்று அனுப்பியுள்ளேன் கவனிக்க


உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்