January 25, 2013

மூலிகை சாபநிவர்த்தி - தைப்பூசம்

தைப்பூசம்

தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப் படுகிறது.


முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன்  ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கினார் அன்று அவ்வேலுக்கு பூஜை செய்தார் அதுவே தைபூசம் என்றாயிற்று 

.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார்

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்  தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். (உண்மை பூசம் நட்சத்திரம் தான் )

மூலிகை சாபநிவர்த்தி தேவையில்லாத ஒரு நாள்


மூலிகை உயிர் கொடுக்கும் விதம்  

        தைபூசத்தில் பூசம் நட்சத்திரத்தில் 6 மணிக்குள் சூரியன் மறைவதற்க்குள் ஒரு செடிக்கு காப்பு கட்டி உயிர் கொடுத்து வாங்கினால் போதும் சாப நிவர்த்தி செய்ய தேவையில்லை அன்று ஒரு நாள் மட்டும் இது பொருந்தும். மூலிகையின் குறிப்பிட்ட நட்சத்திரம் தேவையில்லை 


 காப்பு கட்டி பலி கொடுத்தவுடன்  கீழ் காணும் மந்திரம் கூற வேண்டும்

ஓம் ஈஷ்வர சாபம் நசி ந்சி
ஓம் பார்வதி சாபம் நசி நசி
ஓம் தேவர்கள் சாபம் நசி நசி
ஓம் பதினெட்டு சித்தர்கள் சாபம் நசி நசி மசி நசி 

இதை மூன்று முறை கூறவும்.

பின் 

"ஓம் மூலி சர்வ மூலி ஆகச மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாகா "

இதை மூன்று முறை கூறவும்.

இதை பாவிகளுக்கு கூற வேண்டாம் என அகத்தியர் கூறுகிறார். அகத்தியரை வணங்கி கொண்டு செய்வது உத்தமம்

கையின் கடைசி விரலான சுட்டு விரல் மூலிகையில் பட கூடாது இது மிகவும் முக்கியம் 

பறிப்பவர் தந்த சுத்தி , நேத்திர சுத்தி செய்து சூரியனை வணங்கி பின் உயிர் கொடுத்து பறிக்க வேண்டும் இது மிக மிக முக்கியம் 

இதை குற்றமில்லாமல் செய்தால் கண்டிப்பாக அனைத்து அஷ்ட கர்ம மூலிகையும் வேலை செய்யும் இது அனுபவமாக கண்ட உண்மை 




(இன்று பூசம் நட்சத்திரம் 27-1-13 பகல் 5.20 ஆரம்பித்ததால் ,  திங்கள் கிழமை காலை  சூரிய உதயத்தில் மூலிகை பிடுங்குவது உத்தமம் அதுவும் 6.00 யிருந்து 7.00குள்) 






No comments: