February 26, 2013

திருமுக்கூடலூர் - பாகம்1

கோவில் வரலாறு
       
                ராம பிரான் தனது பாவத்தை போக்க ராமேஷ்வரத்தில் தனது கையால் லிங்கம் ஸ்தாபித்தது போல அகத்தியர் ராமருக்காக இங்கு ஒரு லிஙகம் உருவாக்கி வழிபட்டார் அந்த லிங்கம் பற்றி அறிந்த அனுமான் அந்த லிங்கத்தை எடுத்து விட்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதை அகத்தியர் மறுத்ததால் லிங்கத்தை பெயர்த்து எடுக்க முற்பட்டார் அப்போது தனது வாலால் லிங்கத்தை கட்டி இழுத்தார் இதை கண்ட அகத்தியர் உனது லிங்கம் தண்ணீருக்கடியில் போக என சாபம் கொடுத்தார். இதனால் கோபமுற்ற அனுமான் உங்களது லிங்கம் மணல் மேடாய் போகுக எனசாபம் கொடுத்தார் இதை பார்த்த சிவன் இருவரும்  சண்டையை விடுத்து அமைதி பெறுங்கள் என்றார்.
அகத்தீஸ்வரர்

அகத்தியர் லிங்கம் அனுமன்



அஞ்சனாக்‌ஷி அம்மன்
கருவறைக்கு முன் உள்ள இடிந்த நிலை

மேலும்அகத்தியரால் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர் என்றும் அனுமனால் வழிபட்ட லிஙகம் வாலீஸ்வரர் என்றும் அழைக்கபடும்.மேலும் அவரவர் விட்ட சாபம் கலியுகத்தின் ஆரம்பத்தில் பலிதமாகும் என்றும் கூறி மறைந்தார்.

(வாலீஸ்வரர் என்ற லிங்கம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஷ்வரர் கோவிலில்  தென்மேற்க்கு மூலையில் தனியாக அமைந்திருக்கும்)

அக்கோயில் பின் வந்த சோழ மன்னனால் பராமரிக்கபட்டது.

இப்போது கலையிழந்து கிடக்கிறது யாரேனும் உதவி செய்தால் அக்கோயில் மலரும்

கோவில் இருப்பிடம்

கரூர் அருகே உள்ள நெரூர் பக்கத்தில் உள்ளது திருமுக்கூடலூர்
பஸ் எண் 4,4a

இக்கோவிலுக்கும் சதாசிவ பிரம்மேந்திரக்கும் ஒரு பெரிய தொடர்பு உள்ளது அது அடுத்த பதிவில்

No comments: