July 20, 2012

கோரக்கர் தத்துவமும் உரையாடும் சம்பவமும்


கோரக்கர்



கோரக்கர் மகானிடம் ஒரு வணிகர் சென்று, '' வாழ்க்கையின் நிலையை தாங்கள் எனக்கு தெளிவு படுத்தவேண்டும் என்றார்.அதற்கு மகான்,"சிறிது நேரம் இங்கு நடப்பதை பார் என்றார். அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்தார். வந்தவர் இவரை போலி சித்தர்  என காட்ட வேண்டும் என எண்ணி கையில் ஒரு பட்டுபூச்சி கொண்டுவந்து,'' இது உயிருடன் தான் உள்ளதா அல்லது இறந்து விட்டதா என கையை மூடிக்கொண்டு கேட்டார். பூச்சி உயிருடன் உள்ளது என்றால் அதை கசக்கி விடலாம் என்றும்  இறந்தது என்றால் அதை அப்படியே விட்டு விடலாம் என எண்ணினார் அந்த வாலிபர் .அதற்கு கோரக்கர் சிரித்து கொண்டே அது இறப்பதும் பிழைப்பதும் உன் கையில் தான் உள்ளது
என்றார் அதிர்ந்து போனார் அந்த இளைஞர் .பின் அந்த வணிகரை அழைத்து இது போலத்தான் வாழ்க்கையின் நிலை அதை இருகபிடித்தால் வலிக்கும் பொது நலமாக விட்டால் இனிக்கும் எல்லாம் உன் கையில் தான் உள்ளது என்றார்


 எது தண்டுகளற்ற மரம் எதுசிறகுகள் அற்ற கிளி? எது கரைகளற்ற அணை? யார் இறப்பற்று இறப்பவர்?

இதற்கு விடை நூலின்உள்ளே.......   
                       
  கோரக்க போதம்


இத்துடன் கோரக்க போதம்என்ற நூலை இணைத்துள்ளேன். இது கோரக்கரும் அவரது குருவான மச்சேந்திரரும் உரையாடும் சம்பவமாகும்

                

No comments: