June 6, 2017

பழந்தமிழர் தொழில்நுட்ப அறிவியல் பாகம்-5

பழந்தமிழர்களின் தொழில்நுட்ப அறிவியலை கண்டுவரும் நாம் இன்று காண்பது வானியல் நுட்பம் (ASTRONOMY)

பலரும் சொல்ல தயங்கும் கேள்வி புலவர் எவ்வாறு இதை அறிந்தனர் என்ற கேள்வியோடு உள்ளே நுழைவோம்?

நட்சத்திரம் என்பது அப்போது விண்மீன் என அழைக்கப்பட்டது. அதாவது வானில் சுயமாக ஒளிவிடக்கூடிய நட்சத்திரத்தை நாண் மீன் என்றும். சூரியனிடமிருந்து ஒளிபெற்று ஒளிர்வன கோள்மீன்கள் என்றனர்


சூரியனின் ஒளியைக்கொண்டு ஒளிர்வன திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்பனவாகும். இராகு, கேது இராக் கோள்கள் அல்லது நிழற்கோள்கள் எனப்படும்.

மாக விசும்பின் வெண்டிங்கள் மூவைந்தாள் முறை முற்ற
                                  (புறநானூறு – 100)

எட்டாம் நாள் பிறை நிலவு எண்ணுட்டிங்கள்
                               (புறநானூறு-118)

உவவுத்தலை வந்த டிபருநாள் அமையத்து
இருசுடர் தம்முன் நோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
                                                (புறநானூறு-65)

அதாவது திங்களாகிய கோள்மீன், ஒவ்வொரு நாளும் நிற்கும் நிலையே அன்றைய நாண்மீன் ஆதிக்கம். அது ஞாயிற்றோடு சேர்வதும், பிரிந்து எதிர்ப்பக்கம் சேர்வதும் நிகழ்கையில் அதன் ஒளி நாளுக்கு நாள் வளர்ந்து முழு வட்டமாகும்.

சந்திரன் வளரும்போது பதினைந்து நாட்கள் அடைவது போலவே தேய்கையிலும் பதினைந்து நாட்கள் அடைகிறது.

முழுமதி நாளில் சூரியனும் திங்களும் எதிரெதிராக நிற்கும். திங்கள் தோன்றும் போது கதிர் மறையும்.அதாவது பூமியில் முழுநிலவு தோன்றும்_.


அதிதிநாள் கழை யாவணமேரி புனர்தங் கரும்பிவை புனர் 
பூசமாகும் என்பது பிங்கலந்தைச் சூத்திரமாகும்
                                       (புறநானூறு- 229)

விண்மீன்கள், கோள்களின் நிறம், வடிவம் பற்றித் சங்ககாலத் தமிழர்கள் நன்கு தெரிந்திருந்தனர். வெண்மை நிறமுடையதை வெள்ளியென்றும், செந்நிறமுடையதைச் செவ்வாய் என்றும் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அனுடத்தை முடப்பனை என்றும் புனர்பூசத்தைக் கயம்(குளம்) என்றும், கூடலூர்கிழார் குறித்துள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
               (பட்டினபாலை-66,67)

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் என்று இலக்கியத்தோடு விஞ்ஞானத்தையும் கூறியுள்ளார்.

இலங்கு கதிர்வெள்ளி தென்புலம் படரினும்
                             (புறநானூறு-35)

தென்திசை மருங்கில் வெள்ளியோடினும்....
                           (புறநானூறு-117)

வெள்ளி தென்புலத்துறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயனில் காலை...
                             (புறநானூறு-388)

வெள்ளிக்கோள் அதாவது வெண்பொன் என்றும் இது தென்திசை சென்றால் தீய நிமித்தம் மழை பெய்யாது வற்கடம் உண்டாகும் என்று அக்கால வானியற் கணிப்பு கூறுகின்றது.

மழைக்கோளாகிய வெள்ளி, தென்திசை செல்லின் வான் பொய்க்கும் அதுபோலவே ஏரி, குளமீன், தாள்மீன் போன்றன தோன்றலும் புகைதலும் உலக வறுமைக்கு எடுத்துக்காட்டாக கொள்ளப்பட்டன. இது தென்திசை சென்றால் மழையில்லை என்றறிந்தது போல வடதிசை சென்றால் மழைவரும் என்றும் அறிந்திருந்தனர்.

எல்லாம் சரி ஆனால் இவர்கள் எப்படி இதெல்லாம் கணித்தார்கள் என்ற கேள்வி வருகிறது அல்லவா?

சித்தர்கள் விண்ணை ஆராய தன் சூட்சம தேகத்தையும்இரசமணியையும்  மற்றும் ரசகுளிகையையும் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த ஒன்றே அவர்கள் பல கோள்களை இவ்வாறு கண்டனர்.

ஆனால் புலவர்கள் எப்படி கண்டிருப்பர் என்று கேட்டால் அவர்களுக்கு மூலிகை அறிவை கொண்டு இதை கண்டனர் என பதில் வருகிறது.

நந்தியாவட்டை பூவை ஒரு நாள் நீரில் ஊறவைத்து அந்த நீரை எடுத்து கண்களை நன்றாக கழுவி வில்வ இலையை அந்த நீரோடு சேர்த்து அரைத்து கண்கள் மேல் தடவி இரவு முழுவதும் குளிர விட்டு காலையில் எழுந்து கழுவி பின் கல்லில் வளரக்கூடிய கல்தாமரை என்ற செடியை கவனித்து அதன் மேல் உள்ளங்காலை வைத்து வானத்தை பார்க்க நட்சத்திரம் தெரியும்.

மேலும் இதோடு பொன்னாங்கண்ணி இலையை வாயில் இட்டு குதப்பி கடவாயில் வைத்து அந்தந்த கிரக ஓரையில் திசையறிந்து காண பொன் ஒளி வீசும் சூரியனும் நவகோள்களும் கண்ணுக்கு புலபடும்.

இவ்வாறு தான் புலவர் பெருமக்கள் வானியலை கண்டனர் என சில மூலிகை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நன்றி : ரசமணி சித்தர் அவர்களுக்கு

சிலர் இதில் சில மூலிகைகள் தேவையில்லை கல்தாமரை மட்டுமே போதும் என்கிறார்கள்.

ஆனால் இதன் உண்மை தன்மை பழந்தமிழர் அறிவர்

மேலுள்ளவை அனைத்தும் தகவல் பகிர்வு இதன் உண்மை தன்மை ஆய்வு செய்து அறியவேண்டியவை

உங்கள் சித்தர் அடிமை 
இரா.சங்கர்
ஈரோடு

வாழ்க தமிழ் ;வளர்க நம் கலைகள்


No comments: