- அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
சிவப்பு அல்லி |
அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.உடல் சூடு தணிய,நீரிழிவு பாதிப்பு நீங்க,சிறுநீர் எரிச்சல் குறைய,தாகம் தணிய,கண்ணோய்கள் நீங்க,இரத்தம் சுத்தமாக,அல்லியை அதிகம் பயன்படுத்துவர்.
சித்தர் நூல்கள்
அல்லி மலரை பற்றி அகத்தியர் குணபாடம் பின்வருமாறு கூறுகிறது.
மேகமறும் புண்ணாறும் விட்டேகும்
நீரிழிவுதாகந் தணியும் தழலகலும் - வாகான
மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
அல்லி மலரால் அறி
நீல அல்லி ( குவளை) |
செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள் செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
புண்ணின் நோய் பன்னோயும் போம்
-அகத்தியர் குணபாடம்.
அல்லி கிழங்கு
அல்லி கிழங்கை வைத்து பஸ்பங்கள் நிறைய செய்யப்படுகின்றன . சித்தமருத்துவத்தில் அல்லி அல்லது ஆம்பல் கிழங்கின் பங்கு பெரிதும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment