July 18, 2013

சாபம் இல்லா மூலிகைகள் (பாகம் - 1)



திருநீற்று பச்சிலை - கோரக்கர்

குரு கோரக்கர்

கோரக்கர் சந்திர்ரேகை என்னும் நூலில் 144,145 பாடலில் சபநிவர்த்தி இல்லா மூலிகையை குறிப்பிடுகிறார்
…………………………………………………………
……………………………..
………………………………………………………………
………………………………………….
வேகமுற்ற குருமூலி பதினெண் பேர்க்கும்
  விளங்க வைத்த திது தனக்கு சாபம் இல்லை
பாகமுறப் பரிபாஷை யதனை நீத்துப்
  பட்சமுட னியம்பிடுவேன் மூலி தானே
 
திருநீற்று பச்சிலை
தானெற்ற திருநீற்று இலையு மாகும்
  தன்மையுடன் சரக்கெல்லாம் நிற்க்கும் பூடு
கோனென்ற கொள்கையுடன் பதினெண் பேரும்
   குவலயத்தில் மறைத்திட்டார் குணமாகத்தான்
……………………………………………………………
…………………………………………………………
………………………………………………………
……………………………………………………

அதாவது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை குருமூலி என்றும் இதனால் மருந்து சரக்கெல்லாம் சுண்ணமாக மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர் குரு மூலிகையை தனது நூலில் மறைமுகமாக பதினெண் சித்தர்களும் கூறியுள்ளனர் என்றும், இந்த மூலிகைக்கு சாபம் இல்லை என்றும், அந்த மூலிகை திருநீற்று பச்சிலை தான் என்று மிகவும் வெளிப்படையாக கூறுகிறார்

 அருகம்புல் - மூலிகை ஜாலரத்தினம்






அருகம்புல்



மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் சாபநிவர்த்தி இல்லா மூலிகை பற்றி கூறுகிறது.

மூலிகையில் முதல் மூலிகையாம் இதற்க்கு சாபம் இல்லை
அநேகம்பேர் கண்டதுண்டு அதன்பேர் கணேசமூலிகையாகும்.

கணேசமூலிகை என்பது அருகம்புல்லேயாகும்


அருகம்புல் என்ற மூலிகைக்கு சாபம் இல்லை இதை பறித்து அப்படியே பயன்படுத்தலாம் 




No comments: