![]() |
தம்பிக்கலை அய்யன் சித்தர் |
தம்பணக்கலை
தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார்.தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் (arul migu neelagandeswarar &annapurani) தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. மருத்துவம்,ஆன்மிகம்,போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாக சொல்லப்படுகிறது
நாகேஸ்வரியின் சன்னதி
நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு
பாம்பு விஷம் தீர்க்கும் கோவில்
நாகேஷ்வரியின் ஆலயம் பின் புறம் இங்கு தண்ணீர் மந்திரித்து கொடுக்கபடுகிறது இங்கு பாம்பு கடித்தவரை கொண்டுவந்து படுக்கவைத்து
மந்திரித்து தண்ணீர் கொடுத்தால் விஷம் இரங்குவது சிறப்பாகும்.இது பலமுறை நிருபிக்கபட்டுள்ளது. அதர்க்கும் ஒரு காரணம் இருக்கிறது
மிக அற்புதமான. மூலிகையான அமிர்த சஞ்சீவினி மூலிகை இங்கு உள்ளது இதை பற்றி விரிவாக இனி பார்ப்போம்
No comments:
Post a Comment