August 11, 2012

இடது பாகம் - பெண்ணின் பெருமை




இறைவன் படைத்ததில் மிக உயர்ந்த படைப்பு பெண். இதை சான்றோர்களும் ஏற்றுகொள்கின்றனர். ஏன் மும்மூர்த்திகளும் நிருபித்துயிருகின்றனர்.பிரம்மா தனது நாவிலும் விஷ்ணு தனது இருதய கமலத்திலும் சிவன் தனது உடம்பில் சரி பாதி இடது பாகத்தையும் கொடுத்துயிருக்கிறார் .இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிவன் ஏன் இடது பாகத்தை தந்தார், இதில் தான் மிக பெரிய தத்துவமே அடங்கி உள்ளது அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் 

பெண் தான் பொறுமையின் சிகரம் கோபத்தால் அடிக்க கை ஓங்குவோம் என்றால் வலது கைதான் முதலில் வேகமாக வரும் இடது கை பொறுமையாக தான் வரும் .    

பெண் தான் சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவள். பல அருவெறுப்பான செயலையும் முகம் கோணாமல் செய்யும் தாயாகவும் மனைவியாகவும் ஆணிடம் இருக்கிறாள். உதாரணம் மலம் கழித்த பின் இடது கை தான் வேலை செய்யும் வலது கை நீர் மட்டும் தான் ஊற்றும்  

பெண் தான் மிக பெரிய சுமைதாங்கி. அனைத்து பழிகளையும் செயல்களையும் தன் மேல் போட்டுகொள்வாள் உதாரணம் குழந்தை பேறு, தூங்கும்போது இடது பக்கமாக படுத்தால்  வலது பக்கத்தை தாங்குதல் 

பெண் எப்போதும் இனிமையானவள் இடது மூக்கு துவாரத்தில் வரும் காற்று குளிரானது வலது மூக்கு துவாரத்தில் வரும் காற்று வெப்பமானது 

உலகம் பெண்ணிடம் இருந்து தான் தோன்றியது. முதலில் படைக்க பெற்ற மனித இனம்  பெண். மேலும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றாலும் இடது பக்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம்.



கோவில்களில் நந்தி (மாடு )வலது காலை மடக்கி இடது காலால் தான் ஊன்றி நிற்கும் இதுவும் ஒரு உதாரணம் முனிவர்கள் இடது கையில் தான் தண்டம் வைத்து கொண்டியிருப்பார்கள் 

விநாயகர் மகாபாரதம் எழுதும் போது எழுத்தானிக்காக இடது தந்தத்தை உடைக்க வில்லை வலது தந்தத்தைதான் உடைத்தார் ஏன்  இடது தந்தத்தை உடைக்கவில்லை இடது (மனைவி ) போனால் சகலமும் போகும் என்பது பழமொழி 

கர்பிணி பெண்கள் இடது கை ஊன்றி எழுந்தால் அது பெண் குழந்தை வலது கை ஊன்றி எழுந்தால் அது ஆண் குழந்தை என்பதை அறியலாம் 

கொடுத்து சிவந்தது கர்ணனின் கை அந்த கை இடது கை, அவனது வலது கை கொடுத்தது குறைவுதான். வலது கையில் இருந்தால் பொருள் போவது தெரியும் இடது கையில் அது தெரியாது 

கால்மீது கால் போட்டு அமர்ந்தால் இடது கால் வலது காலை தாங்கி கொண்டு தான் இருக்கும் .

இழிவான செயலான   யாசகம் பெற்றாலும் இடது கையில் தான் பாத்திரம்யிருக்கும் வலது கை வாழ்த்தும் 

பெண்ணால் தான் ஆவதும் அழிவதும் இதைக்காட்ட  விஷ்ணு தனது இடது கையில் தான் அங்கு வைத்தியிருப்பார் இதை ஊதி போரை ஆரம்பிக்கவும் செய்யலாம் முடிக்கவும் செய்யலாம்.

தாங்குவதில் பெண் போல தான் இடது கையும் ஆஞ்சநேயனின் இடது கையில் மலை 



இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அதனால் பெண்மையை மதித்து வாழ்த்தி பயன் பெறுங்கள்     

No comments: