April 10, 2014

சிவம் - ஒரு புனித பயணம் -1

பொதுவாக சிவபெருமானை நாம் தவறான கருத்துடனே பதிவு செய்து வருகிறோம் . அதனால் இந்த பதிவு ஒரு மிக ஆழமான உண்மை வெளிக்கொணரும் பதிவு என நம்புகிறோம்.இந்த பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் எனது குருவின் வழிகாட்டுதலால் அந்த சிவபரம்பொருள் அனுகிரகத்தால் பதிவிடுகிறன் .  இதில் தவறு இருப்பின் என்னை மன்னித்தருளவேண்டுகிறேன்.


சிவன்

முதலில் நாம் இங்கு சிவன் என்று கூறுவது சிவபரம்பொருள் அல்ல,அவர் ருத்திரன் ஆவார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர், அவர் மட்டுமல்ல விஷ்ணு ,பிரம்மாவும் சேர்த்து தான், முக்கிய குறிப்பு இவர்கள் மூவரும் மனிதர்களாகதான்  படைக்கப்பட்டனர், அவர்களுடைய ஜோடியையும் சேர்த்துதான். அவர்கள் மனிதர்களாக பிறந்துதான் தெய்வநிலையை அடைந்தார்கள் என அவ்வையார் தம் பாடலில் கூறுகிறார்.
ஆதி சக்தி



 அயனொடு மாலும், ஹரனும் பிறந்தது மானிடமே

இவர்களை  படைத்தது  ஆதிபராசக்தியும், ஆதிசிவனும் தான்.  இவர்களே எப்படி    மானுடம் வாழ வேண்டும் என்பதை காட்ட சிவன்(ருத்திரன்)  பார்வதி என்ற திருநாமத்துடன் அவதரித்தனர். இவர்களுக்கு ஐந்து ஆண்குழந்தைகள் ஒருபெண் குழந்தை  வீரபத்திரர், பைரவர் , முருகன், விநாயகர் ,ஐயப்பன், அசோகசுந்தரி
ருத்திரன் குடும்பத்துடன்
இப்பொழுது  சிவன் என்ற சொல்லுக்கு வருவோம் சிவன் என்பது ஆண்பால்,  சிவ    என்பது பெண்பால்சிவம் என்பது இரண்டும் சேர்ந்த நிலை. அனைவரும் சிவன்  என்பது ஜீவன் அல்லது உடல் என்பார்கள் சிவ என்பது சக்தியின்நிலை இங்கு தமிழ் வார்த்தை சற்று கவனமாக பார்ப்போம் .சிவன் என்பதில் ன் குறிப்பது ஆண்பால்    தா: சூரியன் சந்திரன்
சிவ என்பதில் சிவபிரியா ,அனுசுயா ஆவாக வருகிறது
மேலும் நம் கருத்தில் பார்த்தால் விஜயன், விஜயா என்போம்

இங்கு சிவத்தில் சி யின் மேலுள்ள கொம்பு போனால்  சவம் ஆகிவிடும் அதுபோல சக்தியின் உள்ளே உள்ள 'க் ' குக்கு மேலே உள்ள புள்ளி போனால் சகதி ஆகிவிடும்
மேலும் நாம் எங்கிருந்து வந்தோமானால் சிவத்திடம் இருந்து தான், அதனால் தான்நாம் மீண்டும் அங்கு செல்ல விரும்புகிறோம்,  அதுவே நமக்கு சிவலோகம் ஆகும்.அங்குதான் பிறப்பு அறுக்கபடுகிறது. அதற்க்கு மிகவும் துணைபுரிகிறவர்தான் (சிவன்) சிவபெருமான் வேறுயாரும் கிடையாது, யாரிடம் சென்றாலும் கடைசியில் இவரிடம் தான் வரவேண்டும் .


சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டு அங்குஆமாறு  ஒன்றில்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறுகாட்டும்
குருவை வழிபடின்  கூடலும் ஆமே
                           திருமந்திரம் – 2119  


சிவனுக்கும்  சக்திக்கும்  நிறைய பெயர்கள் அது பற்றி இங்கு விவாதிக்க தேவையில்லை . நம் கருத்து அவரை பற்றியதே அவரிடம் செல்வது குறித்துதான்.


சாந்தணுவும் கங்கையும்


அவருக்கு  இரு மனைவியர் என்கிறார்கள்  இது முற்றிலும் தவறான கருத்து அவரின் மனைவி பார்வதி மட்டுமே, ஒரு சிலர் இரண்டவது மனைவி கங்கை என்கிறார்கள். மகாபாரதத்தில் சாந்தணுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர் என்று வரும்.
தேவலோக நதியான கங்கையும் தேவர்களும் சத்திய லோகத்தில்பிரம்மனை தரிசிக்க சென்றனர். அப்பொழுது வருண தேவன் தன்னுடைய சக்தியினால் மெல்லிய காற்றினை வீசச் செய்தான், அக்காற்றில் கங்கையின் மேலாடை விலகியது. அதைக் கண்டு திகைத்த தேவர்கள் அதைக் காணாமல் கீழ் நோக்கினர். வருணன் இச்செயலினைக் கண்டு பிரம்மா கோபமடைந்தார். அதனால் வருணனை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும் படி சாபமிட்டார். அத்துடன் மேலாடைய சரி செய்யாத கங்கையையும் பூலோகத்தில் பெண்ணாக பிறக்கவும், மனிதனாக பிறக்கும் வருணனை திருமணம் செய்து கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்வாயெனவும் சாபமிட்டார்.
இதனால் வருந்திய கங்கை சாபவிமோசனம் கேட்டார். அதனால் மனமிறங்கிய பிரம்மா கணவனுக்கு பிடிக்காத செயல்களை செய்து வருபவளை எப்பொழுது மோகம் நீங்கிய மனிதன் அச்செயல்களுக்காக காரணம் கேட்கின்றானோ அப்பொழுது கங்கைக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்று கூறினார். பிரம்மாவின் சாபத்தின்படியே வருணன் சாந்தனு மகாராஜாவாக பிறந்தார்.கங்கை கண்ட சந்தனு அவளின் மீது காதல் கொண்டார், அவளை திருணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு கங்கை தன்னுடைய செயல்களை ஏன் என்று கேள்வி கேட்க கூடாதென ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். கங்கை மீதிருந்த காதலால் அந்நிபந்தனையை சாந்தனு வடிவிலிருந்த வருணன் ஏற்றார்.
இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது, கங்கை அக்குழந்தை எடுத்து சென்று ஆற்றில் மூழ்க செய்தாள். சந்தனு கங்கையுடைய நிபர்ந்தனையின் காரணமாக எதையும் கேட்காமல் இருந்தார். ஆனால் அடுத்தடுத்து பிறந்த அத்தனை குழந்தைகளும் கங்கை ஆற்றில் மூழ்கடித்தாள். ஏழாவது குழந்தை பிறந்தது அக்குழந்தையையும் ஆற்றில் மூழ்கடிக்க சென்ற பொழுது, அக்கொடுமை தாங்காமல் சந்தனு ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். கங்கையின் சாபம் விலகியது. அவள் பிரம்மதேவனின் சாபத்தினையும், அதன்பிறகு நிகழ்ந்தவைகளையும் விளக்கினார்.
கங்கையும் சிவபெருமானை பாதாள லோகத்திற்கு அடித்து சென்று அங்கு வாழ்வெதன்ற தீர்மானத்துடன் மிகவேகமாக பூலோகத்திற்கு வந்தாள். அவளுடைய அவேசத்தின் காரணமுணர்ந்த சிவபெருமான் தன்னுடைய சடாமுடியில் கங்கையை சிறைபிடித்தார்.
சிவபெருமானின் சடாமுடியிலேயே சுற்றி திரிந்த கங்கை மீண்டும் பூலோகத்திற்கு தர பகிரதன் தவமியற்றினான். அதனால் பூமிதாங்குமளவு மட்டும் கங்கையை சிவபெருமான் அனுமதித்தார். கங்கை பகீரதனின் முன்னோர் சாம்பலிருந்து அவர்களுக்கு மோட்சத்தினை அளித்தாள். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கையை பாகீரதி என்றும், கங்கை சடாமுடியில் தாங்கியமையால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்
கங்கை,சிவன்,பகீரதன்,பார்வதி


                                           

அங்கு எப்படி (மகாபாரதத்தில் ) சிவனின் மனைவி, மற்றொருவருக்கு  மனைவியாக முடியும் என்பதை மக்கள் யோசிக்கவேண்டும் .அனைத்து தேவாரபாடல்களிலும் ,திருவாசகத்திலும் கங்கையை அணிந்தார்,புணைந்தார் என்று தான் வருமே தவிர ,மணந்தார் என்றுவராது, சிவனை மணக்க முயன்றால் கங்கை, ஆனால் முடியவில்லை மேலும்   தன்  பிரவாகத்தை தாங்கும் வல்லமை சிவனின் முடிக்கு உண்டு என்பதை அறிந்துமுடியில் இடம்பெற்றாலே  தவிர  மணந்து  அல்ல

தொடரும்...


No comments: