சிவம் பெரியதா சக்தி பெரியதா என்பார்கள் இந்த கேள்வி யார் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களல்லாம் அறிவிருந்தும் ஞானம் பெறாதவர்கள்
சிவசக்தி |
அவளை அறிய அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி உட்புகும் ஆறு அறியேனே
-திருமந்திரம் 1053
ஆதிபரசக்தியை வைத்து தான் அனைத்தும் நடைபெறுகிறது. இச்சக்தியே பெண்மையாய் நம் கூடவே வரும். முதலில் மேலேயுள்ள பாடலுக்கு முதல் விளக்கம் பார்ப்போம்,
முதல் வரி தாயை குறிக்கிறது
இரண்டாவது வரி மனைவி யை குறிக்கிறது மூன்றாவது வரி மனைவி காட்டும் இல்லறத்தில் குழந்தை பேறுவை குறிக்கிறது. அவள் அனுமதித்தால் தான் சுக்கிலம்சுரோணித்தோடு கலக்கும் , ஐம்புலனும் அங்கு சும்மா தான் இருக்கும். நான்காவது வரி அவள் தான் எளிமையாக கலவியின் போது ஆறு சக்கரங்களையும் விழிப்படையவைக்கிறாள்
சிவம் |
இனி இரண்டாவது அர்த்தம்
அன்னை பராசக்தியின் மகிமையை அறியாத தேவர்களும் இல்லை, அவளின் அருள் இல்லாமல் செய்யும் தியானம், தவம் இல்லை, அவளின் அருளின்றி ஐந்தொழில் புரியும் பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன் ,மகேஷ்வரன் ,சதாசிவம் இல்லைஅதாவது படைத்தல், காத்தல்,
அழித்தல், மறைத்தல், அருளல் என்னும்
ஐந்தொழில்கள் இல்லைஆதிசக்தியின் உதவியின்றி ஆறு சக்கரங்களையும் கடக்க முடியாது
ஆக இதில் கூறவருவது உடல் என்பது சக்தி, உயிர் என்பது சிவன் .
உயிர் இல்லாமல் உடலுண்டு .ஆனால் உடலில்லாமல் உயிர் இல்லை ஏனென்றால் உயிர் கண்ணுக்கு தெரியாது அதை அடைய உடல் கண்டிப்பாக உடல் தேவை
ஆதலால் அன்னையை வழிபட்டால்தான் உயிரை அடைய முடியும் அதாவது சிவத்தை அடைய முடியும் இங்கு நமது கடைசி நிலை என்ன என்பது தான் பெரிது. ஆக நான் சொல்வதைகாட்டிலும் இங்கு தங்களுக்கு தானாகவே புரியும். ஆனால் வெளிப்படையாக கூறுவது முட்டாள் தனம், அது இங்கு வெளிப்படையானால் அது தாந்தான் என்ற ஆணவத்தை குறிக்கும்.
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? அதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
உண்மையில் பெரியது என்னவென்று கீழே பாருங்கள்
அவ்வையரிடம் முருகன் கேட்டது பெரியது என்ன ?
அவ்வை பதில் சிறிதில் இருந்து பெரிதாக காட்டியது (உண்மையைகூறியது)
முருகன்: புவனம்(அண்டம்)
பெரிது
அவ்வை: இல்லை,அது நான்முகன் படைப்பு
முருகன்: நான்முகன் பெரிது
அவ்வை: இல்லை,அவன் விஷ்ணுவின் படைப்பு
முருகன்: விஷ்ணு(கரியமால்) பெரியது
அவ்வை: இல்லை ,
அவன் அலைகடலில் அடக்கம்
முருகன்: அலைகடல் பெரியது
அவ்வை: இல்லை, அலைகடல் குறுமுனியின் கையில் அடக்கம்
முருகன்: அகத்தியர்(குறுமுனி)
பெரியது
அவ்வை: இல்லை, குறுமுனி கலசத்தில் பிறந்தவர்,
முருகன்: கலசம் தான் பெரியது
அவ்வை: இல்லை, கலசமென்பது புவியின் சிறுமண்
முருகன்: புவி(பூமி) பெரிதா
அவ்வை: இல்லை ,
புவி ஆதிசேசனின் தலைபாரம்
முருகன்: அப்படினா,
ஆதிசேசனா?
அவ்வை: இல்லை, அது உமையவள் சிறு மோதிரம்
முருகன்: அப்படின்னா, அன்னை உமையவளா
அவ்வை: இல்லை, அவள் சிவனின் ஒரு பாதி
முருகன்: அப்படின்னா சிவன் தான் பெரியவரா
அவ்வை: அதுவும் இல்லை, ஏன் என்றால் அவர் அடியார் உள்ளத்துள் அடக்கம்
முருகன்: அப்படின்னா , அடியவர் தான் பெரியவரா
அவ்வை:
அதுவும் இல்லை ,அவரின் பெருமையை (வரலாறுகளை) சொல்லுவதே இதை
அத்தனைக்காட்டிலும் பெரிது
பெரிது
பெரிது
பெரிது