March 28, 2013

மூலிகை மர்மம் - தொட்டால் சுருங்கி

மூலிகைகளில் ஓவ்வொரு மூலிகையும்  ஐந்து வகையாக பார்க்கலாம் அது போல சுருங்கும் இனத்தில் உள்ள மூலிகைகளில் முதல் வகையான தொட்டால் சுருங்கி பற்றி இன்று பார்ப்போம்

தொட்டால் சுருங்கி நீர்பாங்கான இடத்தில் அதிகம் வளரும்.தொட்டால் சுருங்கிக்கு காப்பு கட்டி பிடுங்கி வேரை தாயத்தில் அடைத்து பயன்படுத்தலாம் அல்லது வேரையும் சிறிது இலையையும் காயவைத்து கலந்து பொடிசெய்து வசியமாகும் நபர்க்கு கொடுக்கலாம்

வசிய மூலிகையில் இது முதலிடம் வகிக்கிறது.மாந்திரீகத்திலும் பயன்படுகிறது 

தொடர்ந்து 48 நாட்கள் பெண்உறவு,மச்ச, மாமிசம், பெண் தீட்டு (மாதவிலக்கான பெண்களிடம்யிருந்து ) இவற்றிலிருந்து விலகி  தொட்டால் சுருங்கி செடியை காலை மாலை
தொட்டால் சுருங்கி
 தொட்டு வந்தால் மனோசக்தி என்கிற காந்த சக்தி கிடைக்கும்

ஐந்து இனங்கள்

1.தொட்டால் சுருங்கி அல்லது தொட்டால் வாடி 

2.நின்றால் சுருங்கி அல்லது  நிழல் பட்டால் வாடி

3.நிலம் சுருங்கி அல்லது நிலம் புரண்டி

4.சந்திரன் சுருங்கி ( தாமரை) சந்திரன் வாடை பட்டதும்  சுருங்கி விடும்(அதாவது ஆணி வேர் மறைந்து விடும்)

5.சூரியன் சுருங்கி  (அல்லி)  சூரியன் வாடை பட்டது சுருங்கி விடும் (அதாவது ஆணி வேர் மறைந்து விடும்)




அடுத்து   மூலிகை மர்மத்தில் நின்றால் சுருங்கி அல்லது  நிழல் பட்டால் வாடி




1 comment:

testing said...

உங்களின் பதிவுகள் அணைத்தும் மிக சிறப்பாகவுள்ளது
நண்பரே எப்படி காப்புகட்டுவது?