நாயுருவி இனம்
நாயுருவி (ஆண்) |
செந்நாயுருவி (பெண்) |
நாயுருவியில் இரண்டு உண்டு அதில் ஆண் நாயுருவி பச்சையாகவும் பெண் நாயுருவி சிவப்பாகவும் உள்ளது இதில் பெரும்பாலும் வசியத்திற்க்கு பெண் நாயுருவி பயன்படுத்தபடுகிறது இதை செந்நாயுருவி என்றும் கூறுவர் இதன் படங்களை மேலே கொடுத்துள்ளேன் இது தண்டுபகுதியில் சிவந்த நிறத்தில் இருக்கும் அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும் இது அட்டகர்ம மூலிகைகளில் ஒன்றாகும் பெரும்பாலும் மருத்துவத்தில் இதையே பயன்படுத்துகின்றனர் இது இல்லை என்றால் தான் அதை பயன்படுத்துகின்றனர்
நாயுருவி மருத்துவப் பயன்கள்
நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.
இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.
இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும்.
மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்
நாயுருவி மர்மங்கள்
இதன் விதையை சோறு போல் சமைத்து உண்ண ஒரு வாரத்திற்க்கு பசி எடுக்காது தேவையானவை இதில் இருந்தே பெறப்படுகிறது. மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.
இதன் இலையை மென்று விழுங்கி சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது. குறிப்பு சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும் தவறாக செய்து வாய் கிழிந்து விடபோகிறது.கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது குடல் கிழிந்து விடும் . மேலும் இது அனைத்தும் ஒரு தகவல் பகிர்வு தக்க குருவின் உதவியுடன் செய்து பார்க்கவேண்டும் என கேட்டுகொள்கிறேன்