கொல்லிமலையில் வாழ்ந்த சித்தர்களில் முக்கியமாகக் கருதப்படுபவர் கோரக்கர். சாம்பலில் அவதரித்த சித்தர் என்றே இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
கொல்லிமலையில் பல்லாயிரம்
ஆண்டுகளாக வாழ்ந்துவந்த கோரக்கர் உயிர் மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான்
ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி
ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் "கோரக்கர்
குண்டம்" என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார் என்பர்.அது கொல்லிமலையில் உள்ள ஒரு பூந்தோட்டத்தில் உள்ளது. அங்கு
எட்டுக் கை காளியம்மன்கோயில் உள்ளது. இந்தக் காளியம்மன் சித்தர்களால்
உருவாக்கப்பட்ட காவல் தெய்வம்.
கோரக்கர் குண்டத்தில் காடை
சம்பா அரிசி,
கருங்குருவை அரிசியில் நெய் பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்துப் படைத்து பக்தியோடு யாகம் செய்து பிறகு
சிறிது தூரத்தில் உள்ள கூட்டாற்று மூலையில் தங்கினால் இன்றும் அன்று இரவு
சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
கொல்லிமலையில் கோரக்கர் வாழ்ந்த அடையாள இடங்கள் உள்ளன.
கோரக்கர் குகை
கோரக்கர் யாக குண்டம்
No comments:
Post a Comment