March 7, 2014

மூலிகை மர்மம் -(சாகா மூலி) சீந்திற்கொடி

சிசேரியன்


சீந்திற்கொடி மரங்களில் தொற்றிப்படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

சித்த மருத்துவத்தில்
 சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். 
சீந்தில் கொடி

சீந்தில் கொடி காயுடன்

சாகா மூலி



9 மாத குழந்தை

பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது

குறிப்பு:

   ஒரு மனிதனால் 45 யூனிட் வலிதான்  பொறுக்க முடியும். ஆனால் தாயால் பிரசவத்தில் 57 யூனிட் வரை வலி ஏற்ப்படுகிறது. இது 20 எலும்புகள் ஒரே நோரத்தில் உடையும் வலிக்கு சமமானது. உண்மையில் தாய் தான் சிறந்த சுமைதாங்கி அவளுக்கு இதை கூட தாங்கும் வல்லமை உண்டு. ஆனால் தன் குழந்தை இறந்து விட்டது என்பதை தான் தாங்க முடியாது. அதனால் பிரசவத்தில் இந்த கொடியை காலில் கட்டிவிட வேண்டுகிறேன் இதனால் எந்த சைடு எபக்டும் இல்லை. இதை ஒரு தாயத்து போல நினைத்து கொள்ளுங்கள்.