August 2, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம்- 2

முத்தமிழ் - ஆய்வு

தமிழ் மொழி ஆய்வில் பல அறிய விடயங்கள் கிடைத்தன.

தமிழ் மொழி மூன்று வகையாக உள்ளது
அவை முறையே

இயல் தமிழ்
இசை தமிழ்
கூத்து தமிழ்(நாடக தமிழ்)

இந்த மூன்று தமிழ் அறியாமல் படிக்காமல் யாரும் சித்தராக முடியாது

இந்த மூன்று தமிழை கற்றால் மனிதனை பற்றியும் இறைவனை பற்றியும் எளிதாக அறியமுடியும்.

எல்லா சித்தர்களும் ஏன் தென்னாட்டுக்கு வந்து தமிழ் கற்றனர் என ஆராய்க

தமிழ் மொழி உயிர்மொழி அந்த உயிரை வளர்க்க தமிழ் மிகவும் பயன்பட்டது

அதாவது அறிவு நிலையாக இயல் தமிழ் அமைந்துள்ளது,உணர்ச்சி நிலையே இசை தமிழாக உள்ளது,இவ்விரு நிலையில் இருந்து இயக்க நிலையாக கூத்து(நாடக) தமிழ் உள்ளது.

அதாவது

ஞான சக்தி
இச்சா சக்தி
கிரியா சக்தி


இந்த மூன்று சக்திகளையே வாலை, அன்னையாக இருந்து நம்மை செயல்பட தூண்டுகிறாள்.

நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ஞான பெறவேண்டுமானால் தமிழ் மொழி அறிந்திருக்கவேண்டும்.

அதாவது மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும்.

இவை எல்லமே தமிழ் மொழியில் மறைப்பாக மிகவும் கவனமாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும்.

பச்சை மரத்தை எறியவைக்க முடியும்

சூரியனை தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.

அந்த காலத்தில் அரசர்கள் முனிவரின் சாபத்திற்க்கு மட்டும் அல்ல புலவர்களின் சாபத்திற்க்கும் பயம் கொண்டனர். காரணம் புலவர்கள் தமிழ்மொழி நுணுக்கமாக அறிந்துள்ளதால்.

தமிழ்மொழியில் இலக்கணம், இசையில் இந்த இரண்டில் தான் மிகுந்த சூட்சமம் உள்ளது மூன்றாவதாக உள்ள கூத்து தமிழ் அழிக்கும் வேலை செய்யகூடியது அதற்கு மேற்கண்ட இரண்டும் துணை செய்கிறது.

சங்கத்தமிழ் மூன்றும்..... தா
       ---------அவ்வையார்

முத்தமிழ் அறிந்த முருகபெருமானே
             -------நக்கீரர்

முத்தமிழே கற்று இயங்கும் மெய்ஞானிக்குச்
சத்தங்கள் எதக்கடி குதம்பாய்?
சத்தங்கள் எதுக்கடி?
      ----குதம்பை சித்தர். பா10

"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "
           --------திருமூலர்
               --------திருமந்திரம்.

" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "
        ஞானவெட்டியான்
                 ----திருவள்ளுவர்

பண்னுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "

சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்

    -அகஸ்தியர் ஞானம் 100

இப்படி எல்லா சித்தர்களும் தமிழ்மொழி கற்று உணர்ந்தனர்.

இதில் வள்ளலார் ஒரு படி மேலே சென்று

தமிழ்மொழி உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வெளிப்படையாக கூறுகிறார்.

இப்பேர்பட்ட தமிழை இன்னும் விளக்கமாக அடுத்த பதிவில் எப்படி எல்லாம் மறைபொருள் கலையாக உள்ளது.

அதாவது மந்திர சக்தியாக எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்


தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் -1

தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்


ஓர் சுருக்கமான எனது பதிவு

தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247

உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216
ஆய்த எழுத்து 1

உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.

மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது.

உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும்.

ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க

நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது
சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது

சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது

முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார்.

ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார்.

இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம்

மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.

மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.

இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216

சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது

ஆக 216×100=21600

நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும்

தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு உருவாக்கபட்டவை

தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க

அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்

(இது குஜராத்தி மொழியில் மட்டுமே உள்ளது ஆனால் அதுவும் இப்போது வழக்கொழிந்து விட்டது)

அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.

மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார் என ஆராய்க


தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர்
அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது அது என்ன என கருத்தில் கொண்டு ஆராய்க.

குறிபிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை செயல் இழக்க செய்தனர் அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.

தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால் உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க.

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து -  னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-   ளீ,ங

இதையும் கருத்தில் கொள்க

இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு  உயிர் எழுத்து  உ + அ = (குவா)

இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.

தமிழை அதிகமாக பேசி சக்தி பெற்ற மன்னன் இராவணன் அந்த பெருமானாரின் கதை ஆராய்க

அதை விடுத்து அசுரன் என கூறி அவரை ஒதுக்கிவிடாதீர்கள் அவர் அசுரர் அல்ல அந்தணர் மற்றும் தமிழன் 


நன்றி

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு



April 11, 2016

தியானம் என்ற தவம்


தியானத்தின் முதிர்ச்சியே தவம். எனவே முதலில் தியானம் செய்யப் பழக வேண்டும். தியானம் என்கிற போது மன ஒருமைப்பாட்டிற்காகவும், மன அமைதிக்காகவும், புத்திக் கூர்மைக்காகவும் மட்டுமே என்றால், பெட்டிக் கடைகளில் கூட புத்தகங்கள் விற்கப்படுகின்றன.  

வாங்கிப் படித்த்து அதில் சொல்லியிருப்பது போல பயிற்சி செய்து வந்தால் ஒரு சில மாதங்களில் தியானம் கை கூடும். ஆனால், ஆன்மிக மேம்பாடு அடைய வேண்டி தியானம் செய்ய வேண்டும் என்றால், அதற்கான விதி முறைகளையும், வழிமுறைகளையும் கடைபித்து முறைப்படி படிப்படியாகவே முன்னேற வேண்டும். அப்போதுதான் தியானத்தில் நிலைத்து அடுத்த நிலைக்கு உயர முடியும். ஏனென்றால் மனதை உலகாய விஷயங்களில் இருந்து பிரித்தெடுத்து உள்முகமாகத் திருப்பினால் மட்டுமே அது ஓடுக்க நிலைக்கு வரும். 

இதற்கு முதற்கண் ஆன்மிக நோக்கும், நம்பிக்கையும் அவசியம். எனவே முதலில் ஆன்மிக விஷயங்களைக் கேட்பது, படிப்பது, அது சம்மந்தமான வேலைகளில் ஈடுபடுவது, அந்த எண்ணம் கொண்டு ஒழுகும் மக்களுடன் கூடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

இவ்வாறு செய்வதால் மனம் முதற்கண் உலகாய விஷயங்களில் இருந்து விலகி ஆன்மிக எண்ணங்களில் திளைக்கத் துவங்கும். அப்போது நீங்கள் ஓரளவு தீய எண்ணங்களின் பிடியிலிருந்து விலகி விடுவீர்கள். இனி நீங்கள் உங்கள் ஓய்வு நேரங்களில் முடிந்த அளவு சமுதாயத் தொண்டுகளைச் செய்து வர வேண்டும். துன்பப்படுபவர்களுக்கு உதவும் மனப் பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

 முதலில் தீய எண்ணங்களில் இருந்து விலகிய மனமானது இப்போது பேதமற்ற விரிந்த மனநிலைக்கு வந்து விடும். எல்லாம் இறை சொரூபமே என்ற பரந்த மனப்பான்மை வளரும். அடுத்த படியாக உடலை ஆன்மிக சக்தியைப் பெறுமளவிற்கும், அதற்கான பயிற்சிகளைத் தொய்வின்றி செய்யும் அளவிற்கும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை எல்லாமே புறப் பயிற்சிகளே. 

 இதில் ஓரளவே மனம் பரிபாகம் அடைந்திருக்கும். முற்றிலும் சலனமற்ற மனதைப் பெற வேண்டுமெனில் மூச்சைக் கவனித்து,அதைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதையும் தாண்டிய நிலையில் ஐம்புலன்களைப் பற்றி அறிந்து கொண்டு, அவற்றால் ஏற்படும் துன்பங்களை உணர்ந்து மனதை புலன் மயக்கத்தில் இருந்து விலக்கி உள்முகமாகத் திருப்ப வேண்டும்

அதாவது புலன்கள் மூலம் நடைபெறும் எல்லா செயல்களையும் உற்று கவனித்து அவற்றில், அளவும், ஒழுங்கு முறையையும் கடைபிடிக்கும் போது அவைகள் மனதின் கட்டுக்குள் வரும். இப்போது மனம் எளிதில் உள்முகமாகத் திரும்பி நிற்க்கும்.இனி நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், மனதை ஒரு குறிப்பிட்ட பொருளின் மீதோ, ஒளியின் மீதோ, உருவத்தின் மீதோ குவித்துப் பழகுவதே. இந்தப் பழக்கம் மேன்மையடையும் போது மனமானது இயல்பாகவே எதுவுமற்ற சூனியத்தில் குவியத் தயாராகி விடும். 

இதுவே தியானம். இப்படிப் படிப்படியாகப் பயிற்சியில் மேன்மையடையாதவர்கள் மனம் மீண்டும் கீழிறங்கி, புலன் வசப்பட்டு மயங்கி நிற்கும். பயிற்சி செய்யுமளவு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மனதில் சக்தி நிலைக்கும். மீண்டும் மனோ சக்தியைப் பெற தியானம் செய்ய வேண்டும். 

இதற்குக் காரணம் மனம் புலன் வழிப்போய் சக்தியை விரையம் செய்வதால் ஆகும். ஆன்மிக மேம்பாடு அடைந்தவர்கள் மனம் அவ்வாறான கீழ்நிலைக்கு எளிதில் வராது. ஏனென்றால் முறையான பயிற்சியின் காரணமாகப் பக்குவமடைந்து விடுகிறது. எனவே அங்கு சக்தியானது விரையம் ஆவதே இல்லை. 

 மேலும் மேலும் சேமிக்கப்பட்டு திணிவு அடைகிறது. இனி உங்கள் விடாமுயற்சியின் அளவுக்கு ஏற்ப பலன் விரைவாகக் கிடைக்கும். இதற்கு ஒரு குருவானவர் அவசியம் தேவை.

நன்றி
மௌனத்தின் குரல் 
அய்யா ராம் மனோகர்