Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

September 6, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 11

பிற உயிரினங்களும் தமிழ் மொழியும் பகுதி -2

 (கருத்து புரிய திரும்ப திரும்ப படிக்கவும்)

இப்படி அனைத்து உயிரினங்களுடனும் பேசும் மொழியே தமிழ் மொழியாகும். சில இடங்களில் தமிழ் சொற்கள் முழுமையாக வராது அதனுடைய ஒலியன்கள்(phonetic)மட்டும் வரும் அதை பல உயிரினங்கள் உபயோகபடுத்துகின்றன.


சங்க கால இலக்கியத்தில் மரத்தை தோழியாக நினைத்து மற்றும் தங்கையாக நினைத்து அதனுடன் நல்உறவை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது மரத்தின் உணர்வுகளை அப்படியே புரிந்துகொள்ளும் தன்மை இருந்து இருக்கிறது.


அதேபோல் குறுந்தொகை இலக்கியத்தில் சிவபெருமானின், கவிதை ஒன்று வரும். அது தருமிக்கு பொற்கிளி கொடுக்கவும், நக்கீரருடன் வாதம் செய்யும் இடம் . அந்த கவிதையில் வண்டுடன் பேசுவதாக அமையும் அதாவது தும்பி இனத்தை சேர்ந்த வண்டே நீ கூறு என்கிறார் சிவபெருமான் வண்டு பேசும் என குறிப்பிடுகிறார்(ஆதாரம்: குறுந்தொகை பாடல் எண் -2)


அதே போல் திருதக்கதேவர் எழுதிய காப்பியமான சீவகசிந்தாமணியில் சீவகன் பிற உயிரினங்கள் பேச்சுமொழியை அறிந்திருந்தான் என ஆசிரியர் கூறுகிறார் உதாரணம்: எறும்பு,வண்டு(ஆதாரம்:சீவகசிந்தாமணி பாடல் எண்-892-893,1331)

பாண்டவர்களில் நகுலன் விலங்குகள் பேச்சு மொழி (பரி பாஷையை)அறிந்திருந்தான் என கதை வரும். மற்ற உயிரனங்களை காட்டிலும் குதிரையுடன் பேசும் மொழியில் வல்லவன் என வியாசர் கூறுகிறார்(ஆதாரம் மகாபாரதம்--விராட பர்வம்)


இங்கு கவனிக்க அது என்ன குதிரை பேச்சு அதுதான் அய்யா, பரி(குதிரை)….பாஷை(பேச்சு) அதை சொல்லவே இந்த பதிவு.

 இது மறைக்கபட்ட தமிழ்ர் கலைகளில் ஒன்று.

இந்த கலையில் வல்லவர்கள் பாண்டியர்கள் தான், ஆரம்பத்தில் இது அனைத்து இடங்களிலும் இருந்தது ஆனால் பின்னால் மறைந்துவிட்டது.

இதை சுருக்கமாக தெரிந்துகொள்வோம். பரிபாஷை இரண்டு வகைபடும். ஒன்று 1.ஒலியலைகள் மூலம் கொடுப்பது,இன்னொன்று 2.கண் பார்வையால் பேசுவது அல்லது கொடுப்பது.

குதிரைக்கும்,நாய்க்கும் இந்த இரண்டு பேச்சும் இப்பவும் தெரியும். இதை அதிகமாக உபயோக படுத்துவது குதிரை மட்டுமே என்பதால் பரிபாஷை என்கிறார்கள்.

பரிபாஷை கூறும் பழமொழி : ஆறு பொருள்,பதினெட்டு சந்தம் வைத்து பேசாதே!!!!
(இந்த பழமொழி இப்பவும் மதுரையில் பயன்படுகிறது சந்தம் என்பது சந்து என இப்போது கூறுகிறார்கள்)

இந்த கலையை புலவர்கள், சித்தர்கள் அதிகமாக பயன்படித்தினார்கள். தாம் சொல்ல வந்த கருத்தை மறைப்பாக கண்மூலமாகவோ அல்லது ஒலியலைகள் மூலமாகவோ கூறுவார்கள் இதை பக்குவபட்டவன் அடையாளம் கண்டுகொள்வான்.

அதனால் தான் குரு சிஷ்ய உறவு மிக முக்கியம் என்பார்கள். சீடனுக்கு அப்போது புரியவில்லை என்றாலும் குரு பார்வை தக்க சமயத்தில் ஞாபகத்தில் தோன்றி அர்த்தம் கிடைக்கும்.

இதை அறியாமல் சிலர் பரிபாஷை என்பதை அகராதியில் தேடுவார்கள். சித்தர்கள் பரிபாஷை புத்தகம், நிகண்டு புத்தகம் என்பதெல்லாம் மருத்துவம், மூலிகை,ஜோதிடம் பற்றி அறியவே.

பிரம்ம வித்தைகள் மற்றும் சில யோக சாதனைகள் அனைத்தும் பரிபாஷை(குதிரைபேச்சு கண்) மூலமே கொடுக்கபடுகிறது.

இரண்டாவது பரிபாஷை  ஒலியலைகள், குறிப்பிட்ட சப்தம் மூலம் சில வார்த்தைகள் மாணவன் சொல்லும்போது அது அவன் உடம்பில் அதிர்வுகளாக இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இது எப்படி என்றால் நன்றாக நினைவில் கொள்ளவும் மனித தேகம்  72 சதவீதம் நீரால் ஆனது.நீருக்கு சப்தத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. (ஆதாரம்: நீரை பற்றிய ஆய்வுகளில் இங்கிலாந்து கூறியுள்ளது)

அப்படியானல் இப்போது புரியும் மந்திர எழுத்து ஒலியை இந்த உடல் எப்படி வாங்குகிறது என்று, இந்த ஒலி அலைகள் மூலம் என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைக்க அந்த வரியை உருவாக்குவார்கள்.

அப்படியானால் இந்த கந்த சஷ்டி வரிகள், என்ன பரிபாஷை வகை என புரியும்.

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
           
உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி

வாழ்க வளமுடன்

October 28, 2013

கருவூரார்

சித்தர்களின் SUPERSTAR போகரின் இளைய தளபதி தான் கருவூரார்

கருவூரார் போகரின் சீடர்களில் ஒருவர்.போகருக்கு 63 சீடர்கள்,அதில் தலைமை பொறுப்பு கொண்டவர்கள் ஏழு பேர் ,அவர்கள்
போகரின் பிரதான ஏழு சீடர்கள்
புலிப்பாணி,கருவூரார்,கோரக்கர்,கொங்கணவர்,யாகோபு,ரோமரிஷி,பாபாஜி நாகராஜ். இவர்களின் தலைமை குரு வேறொருவராக இருந்தாலும் போகரின் கீழ் அந்தந்த தலைமை குருவின் அறிவுறுத்துதலின் பேரில் போகரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.நவபாஷாண சிலை செய்வதில் பெரும் பங்கு கொண்டவர்கள் இந்த ஏழு பேர்,இதில் கருவூராரும் ஒருவர், இவரை பற்றி பல கதைகள் உண்டு.
கருவூரார் மூல மந்திரம்
இரண்டு கதைகளுக்கு சான்று உள்ளது.ஒன்று தஞ்சை பெரியகோவிலின் சிலை நிறுவியவர் மற்றொன்று, சிதம்பரம் நடராஜர் சிலையை செய்தவர்.இரண்டும் போகரின் வழிகாட்டுதலால் செய்தார்
கருவூரார் நூல்

இவர் அட்டமாசித்திகளை மக்களுக்கு எளிதில் போதிக்க எந்திர முறையை கையாண்டார்.அனைத்து சித்தர்களின் கோபத்திற்க்கு உள்ளாகி பிறகு போகர் தடுத்தாட்கொண்டு சில ஏடுகளை மட்டும் தந்தார்.அதை தான் நாம் இப்போது கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து என்ற நூலாக படிக்கிறோம்.
போகரும் 63 சீடர்களும்

இந்த நூலை மூடர்களுக்கு கொடுக்காதே என்று இந்நூலில்லேயே கூறுகிறார் .சித்தர்கள் வலைதளங்களை பார்வையிடுபவர்கள் மூடர்கள் அல்ல மேலும் அவர்கள் ஆசியால் தான் இவ்வலை தளங்களை பார்வையிடுகிறோம். கருவூரார் அருளிய  கருவூரார் மாந்திரீக அட்டமா சித்து  என்ற நூலை பகிர்கின்றேன்




 நூலுக்கு மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

முந்தைய பதிவில் காக புஜண்டர் அருளிய மந்திரம் எது என கேட்ட நண்பர்களுக்கு,  அது நற்பவி என்பது தான் மந்திரம் என கூறிக்கொள்கிறேன்.. இது மிகவும் பிரசித்தி பெற்றது


                                                    ஓம் கருவூர்தேவாய நம!!!






October 11, 2013

மந்திரம்-காகபுஜண்டர்(பாகம் -1)

காகபுஜண்டர் தோற்றம்:
பல ஆயிரம் சூரியர்களை ஒன்றடக்கிய அருளொளி கொண்டு; காதில் கவச குண்டலம் தரித்துக் கொண்டு; கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து கொண்டு; தன் வலப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும் கீழ் நோக்கியவாறு நான்கு கைகளும், அவ்வாறாகவே தன் இடப்பாகத்தில் மேல் நோக்கியவாறு நான்கு கைகளும், கீழ் நோக்கியவாறு நான்கு கைகளுமாக கொண்டு; தன்னுடைய பதினாறு திருக்கங்களிலும் சிரஞ்சீவி காப்புகள் அணிந்து கொண்டு, பொற்றாமரை மலர் மீதமர்ந்து கொண்டு, நெற்றிக் கண்ணுடன் கலைவாணியின் மடியின் மீது காகபுஜண்டராகிய நான் அவதரித்தேன்.
கோரக்கரின் குரு காகபுஜண்டர்
மும்மூர்த்திகளும் பொன்மலர் பொழிந்து ஆசிர்வதித்து, உலகத்த்தின் ஆதிகுருவாகிய காகபுஜண்டரென்னும் ஞானக்குழந்தையாகிய எம்மை வணங்கினார்கள். என்னுடைய உடலின் வலபாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சூலாயுதம், எழுத்தாணி, ஞான ஒளி, அபயம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் வலபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் காமதேனு, வீணை, காகம், அஞ்சனம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடப்பாகத்தில் மேல்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் வேலாயுதம், தண்டாயுதம், வரதம், செந்நாகம் போன்றவைகள் அமைந்திருந்தது. என்னுடைய உடலின் இடபாகத்தில் கீழ்நோக்கியவாறு அமைந்த நான்கு கரங்களில் சுருதிநூல் (ஓலைச்சுவடி), புண்ணிய கலசம், அட்டசித்தி முத்திரை, யோகத்தண்டு போன்றவைகள் அமைந்திருந்தது.

காகபுஜண்டர் அருளிய அற்புத மந்திரம்

                                               "நற்பவி "   (மந்திரம்)

     இது தான் அந்த மந்திரம் இதை எப்பவேண்டுமானாலும் சொல்லலாம் ,கணக்கு கிடையாது .ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்  
மூலிகைமணியில் 1990ல் வந்த பக்கம்
                        "

இந்த மந்திரம் பிரணவத்திற்க்கு இணையானது இதை பலரும் கார் ,வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்றிருக்கின்றனர். மேலும் இது பற்றி மேலுள்ள மூலிகை மணி புத்தகம் கூறுவதை கவனியுங்கள்.இதை தேடிசிரமபட்டு இப்பக்கத்தை கொடுத்துள்ளேன். இது நிச்சயம் பயன்கொடுத்தது, முயற்சி செய்து பாருங்கள்.



July 22, 2013

சாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)




 நத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு


நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது)
கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார் 

நத்தை சூரி (மிக எளிதாக கிடைப்பது ஜாலங்கள் மருத்துவங்களில் பயன்படுவது)
  
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
  சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு

  ………………………………………

  ………………………………………
    
உலகத்தில் அநேக மூலிகைக்கு சாபம் உண்டு. இந்த        நத்தைசூரிக்கு சாபம் இல்லை என்கிறார்,
இதையும் பறித்து அப்படியே பயன்படுத்தலாம்.


துளசி,வில்வம் - மூலிகை ரத்தின சிந்தாமணி


மூலிகை ரத்தின சிந்தாமணி என்னும் நூல் சாபம் இல்லா மூலிகை இரண்டு கூறுகிறது அவை பின்வருமாறு
துளசி


ஒன்று துளசி மற்றொன்று வில்வம் இவை இரண்டுக்கும் சாபம் இல்லை என்றும் இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பூஜைக்கு திரும்ப திரும்ப பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.மேலும் இதன் மருத்துவ பயன்கள் அளவிடற்கரியது
மஹா வில்வம்




வில்வம் (சாதாரணமாக கிடைப்பது )




மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அய்யா குப்புசாமி அவர்கள் நிறைய கூறியுள்ளார். அவருடைய வலைதளத்திற்க்கு சென்று பல மூலிகையின் பயன்களை அறியுமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் தெரிவிக்கிறேன்

அய்யா குப்புசாமி அவர்கள் 
        
                  http://mooligaivazam-kuppusamy.blogspot.in/









January 25, 2013

மூலிகை சாபநிவர்த்தி - தைப்பூசம்

தைப்பூசம்

தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப் படுகிறது.


முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன்  ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கினார் அன்று அவ்வேலுக்கு பூஜை செய்தார் அதுவே தைபூசம் என்றாயிற்று 

.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார்

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்  தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். (உண்மை பூசம் நட்சத்திரம் தான் )

மூலிகை சாபநிவர்த்தி தேவையில்லாத ஒரு நாள்


மூலிகை உயிர் கொடுக்கும் விதம்  

        தைபூசத்தில் பூசம் நட்சத்திரத்தில் 6 மணிக்குள் சூரியன் மறைவதற்க்குள் ஒரு செடிக்கு காப்பு கட்டி உயிர் கொடுத்து வாங்கினால் போதும் சாப நிவர்த்தி செய்ய தேவையில்லை அன்று ஒரு நாள் மட்டும் இது பொருந்தும். மூலிகையின் குறிப்பிட்ட நட்சத்திரம் தேவையில்லை 


 காப்பு கட்டி பலி கொடுத்தவுடன்  கீழ் காணும் மந்திரம் கூற வேண்டும்

ஓம் ஈஷ்வர சாபம் நசி ந்சி
ஓம் பார்வதி சாபம் நசி நசி
ஓம் தேவர்கள் சாபம் நசி நசி
ஓம் பதினெட்டு சித்தர்கள் சாபம் நசி நசி மசி நசி 

இதை மூன்று முறை கூறவும்.

பின் 

"ஓம் மூலி சர்வ மூலி ஆகச மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாகா "

இதை மூன்று முறை கூறவும்.

இதை பாவிகளுக்கு கூற வேண்டாம் என அகத்தியர் கூறுகிறார். அகத்தியரை வணங்கி கொண்டு செய்வது உத்தமம்

கையின் கடைசி விரலான சுட்டு விரல் மூலிகையில் பட கூடாது இது மிகவும் முக்கியம் 

பறிப்பவர் தந்த சுத்தி , நேத்திர சுத்தி செய்து சூரியனை வணங்கி பின் உயிர் கொடுத்து பறிக்க வேண்டும் இது மிக மிக முக்கியம் 

இதை குற்றமில்லாமல் செய்தால் கண்டிப்பாக அனைத்து அஷ்ட கர்ம மூலிகையும் வேலை செய்யும் இது அனுபவமாக கண்ட உண்மை 




(இன்று பூசம் நட்சத்திரம் 27-1-13 பகல் 5.20 ஆரம்பித்ததால் ,  திங்கள் கிழமை காலை  சூரிய உதயத்தில் மூலிகை பிடுங்குவது உத்தமம் அதுவும் 6.00 யிருந்து 7.00குள்) 






January 3, 2013

மறுபிறவி - 1

மறுபிறவி பற்றி நான் அறிந்த வரையில் மிக எளிமையான விளக்கத்தில் கூறியது வள்ளலார் மட்டும் தான். பல மதங்கள் மறு ஜென்மம் என்பதை மறுக்கிறது. ஆனால் இந்து மதம் மட்டும் அது உண்மை என்று திட்டவட்டமாக கூறுகிறது

கீதையில் கண்ணனே கூறியுள்ளார், மானிட ஆன்மா என்பது அழியாது அது மீண்டும் பிறக்கும் என்றும் மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டவன் என்றான் இங்கு கர்மம் என்பது புண்ணிய பாவ கணக்கு

சுலுமுனை சித்தர் கூற்று




மனித பிறவிக்கு அடுத்து தேவ,தெய்வ பிறப்பு தான்
இது எப்படி சாத்தியம் என்றால் ,ஒரு மனிதன் 1,2,3 வகுப்பு படிக்கிறான் என்றால் நிறைய மதிப்பெண் வாங்கினால் அடுத்த வகுப்பிற்க்கு செல்கிறான் 
அது போலவே பிறப்பு என்பது செடி,கொடி,மரம்,பறவை,விலங்கு,மனிதன்,தேவர்கள், தெய்வம் என்ற வகுப்புகளாக பிறிந்து வருகிறது. இதில் பாவம் செய்தால் அந்த வகுப்பிலேயே
மீண்டும் விழுகிறோம். கவனிக்க மீண்டும் 1 ம் வகுப்பு செல்வதில்லை 

வள்ளலார் என்கிற ஞான சித்தர் கூற்று


மறுபிறவி


இப்போது வள்ளலார் கூறுவதை கேட்போம் ஒருவன் ஒரு வீட்டை விட்டு காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால் அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விட வேண்டாம். அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேரு ஒரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது.அவன் செய்த நன்மை பொறுத்து (நிறைய செல்வத்தை) வீடு என்கிற உடம்பு அமைகிறது

கர்ம வினை


இதில் கர்ம வினை என்பது அவன் செய்த பாவ மூட்டை அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது எப்படி என்றால் முன்பு கூறியதை போல வேறு ஒரு வீட்டிற்க்கு போன மனிதனின் தீய நண்பன் அந்த வீட்டுக்கும் போவான்.மீண்டும் அவ்வீட்டை கெடுப்பான் அது போல தான் கர்மா என்கிற பாவமும் ஆன்மாவுடன் போகும் மீண்டும் தவறு செய்ய வைத்து மனித வகுப்பிலே படிக்க செய்கிறது. அதனால் முடிந்தவரையில் பாவம் செய்யாமல் தீய நட்பு கொள்ளாமல் நன்மை செய்து வாழ்வோம்   

புண்ணியத்தின் பலன்


அப்போது நாம் செய்த நன்மையின் பலன் என்பது எங்கே என்றால் நாம் செய்த பாவத்திற்க்கு போகும் . இதை விளக்கமாக சொன்னால் நன்மை என்பது நாம் சம்பாதித்து வாங்கும் பணம் போல, பாவம் என்பது செலவு செய்வதற்க்கு வாங்கி கடன் போல, கடன் நிறைய வாங்கி வைத்து பணம் சம்பாதித்தால் அது கடனுக்கு தான் போகும் சொத்தில் சேராது அதாவது புண்ணியத்தில் சேராது 


இன்னும் இது பற்றி பின்வரும் பதிவுகளில் காண்போம் பின் மூலிகை மர்மம் செல்வோம்





December 18, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-2

மலையின் ஆண் வடிவம் இது மலையின் முன் பகுதி

சித்தர்கள்

சதுரகிரி,பொதிகை,கொல்லிமலை,போன்றே இந்த மலையிலும் பல சித்தர்கள் தங்கி தவம் புரிந்துள்ளனர்.மேலும் இந்த மலையில் பல குகைகள், சஞீவினி மூலிகைகள் உள்ளன. இந்த மலையில் மூலிகை காவல் தெய்வமாக அனுமன் உள்ளார். நான் சில மூலிகைகள் தேடுகின்ற போது பல தடவை முக்கியமான மூலிகை உள்ள யிடத்தில ஒரு குரங்கு கூட யில்லை ஆனால் நான் மூலிகையின் அருகில் சென்றால் பல குரங்குகள் வந்துவிடுகின்றன. அதே போலத்தான் இங்கு ஒரு குகை ஒன்று உள்ளது அங்கு சென்றால் உதகஞ்செயநீர்(அகத்தியர் பரிபூரணம்1200) என்ற ஒரு நீர் உள்ளது அதை காட்ட என் குரு என்னை அழைத்து சென்ற போது அனுமன் படைகளால் நாங்கள் சூழ பட்டோம் பின் என் குரு அனுமத் கவசம் செய்து விலகி செல்லுமாறு செய்தார் பின் தான் அங்கு சென்றோம்.
மலையின் பெண் வடிவம் இது மலையின் பின் பகுதி


இங்கு அல்லி சுனை ஒன்று உள்ளது அதன் அருகில் தான் சித்தர் பீடம் உள்ளது.  ஒரு சித்தர் தினம் அங்கு வந்து வழிபடுவதாக என் குரு பலமுறை கூறியிருக்கிறார். மேலும் இந்த மலையில் ஆரா சுவாமி என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் இந்த மலையில் ஜீவ சமாதியாகி உள்ளார் என்றும் பல மூலிகைகள்,சித்துகள் அவருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார் .மேலும் போகர் கூறிய மலைதாங்கி(வர்மகலையில் நோக்கு வர்மத்திற்க்கு பயன்படும் மூலிகை அது)  என்ற மூலிகை இருப்பிடம் ஒரு சித்தர் இங்கு தான் காட்டினார் என்று என் குரு கூறியதுண்டு 

இந்த மலையில் நடந்த அனுபவம் நிறைய உண்டு அதை பின் ஒரு பதிவில் கூறுகிறேன்.

பதிவின் நோக்கம் பாகம் -3 நாளை


October 2, 2012

தம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-2


சஞ்சீவினி மூலிகை மொத்தம் 21 உள்ளது .அதில் இங்கு உள்ளதுஅமிர்த சஞ்சீவினி மூலிகை இது தம்பிக்கலை அய்யன் தவத்தால் இங்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது

அமிர்த சஞ்சீவினி இருப்பிடம்


தம்பிக்கலை அய்யனின் வடமேற்க்கு மூலையில் விநாயகர் கோவில் உள்ளது அதன் பக்கமாக மூலிகை வனம் ஒன்று உள்ளது இந்த வனத்தில் தான் அமிர்த சஞ்சீவினி மூலிகை உள்ளது இது சற்றே ஆகாய தாமரையும் ரோஜா மலரும் போன்றே பச்சை கலரில் இருக்கும்.

அமிர்த சஞ்சீவினி பெருமை


இதன் அருமை பற்றி இங்கு கூறியே ஆக வேண்டும் ரமாயணத்தில் லக்‌ஷ்மனுக்கு அடிபட்டபோது அனுமன் சஞ்சீவி மூலிகை எடுக்க சென்றார் அல்லவா? அதில் ஒன்றுதான் இது. அவருக்கு மிர்திவ சஞ்சீவினி,அமிர்த சஞ்சீவினி என்ற இரு மூலிகை தேவைபட்டது. ஒன்று காயத்தை சரி செய்ய மிர்த்திவ சஞ்சீவினி,மூக்கில் நசியமிட அமிர்த சஞ்சீவினி. அந்த மூலிகை தான் இது. பாம்பு கடித்தவரை இங்கு படுக்கவைக்கும் போது அமிர்த சஞ்சீவினி  காற்று உள்ளே செல்கிறது இது தான் காரணம் மேலும் பக்தியும் மிக அவசியம்

அய்யன் இருப்பிடம்

  தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் ஈரோடுமாவட்டம்(erode district) பெருந்துறை வட்டத்தில்அமைந்துள்ள இராகு கேது பரிகார ஸ்தலமாகும். ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 19 வது கி.மீட்டரில் ரெட்டை வாய்க்கால் உள்ளது.அங்கிருந்து 2 கி.மீட்டர் தெற்கு நோக்கி உள்ளது.சித்தோட்டில் இருந்து 10கி.மீட்டர் கவுந்தப்பாடியில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது


தம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-1

தம்பிக்கலை அய்யன் சித்தர்

தம்பணக்கலை


தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார்.தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் (arul migu neelagandeswarar &annapurani) தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. மருத்துவம்,ஆன்மிகம்,போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாக சொல்லப்படுகிறது


இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும் ,நாகதோஷம்,கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும் 


நாகேஸ்வரியின் சன்னதி


நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு 


பாம்பு விஷம் தீர்க்கும் கோவில்


நாகேஷ்வரியின் ஆலயம் பின் புறம் இங்கு தண்ணீர் மந்திரித்து கொடுக்கபடுகிறது இங்கு பாம்பு கடித்தவரை கொண்டுவந்து படுக்கவைத்து
மந்திரித்து தண்ணீர் கொடுத்தால் விஷம் இரங்குவது சிறப்பாகும்.இது பலமுறை நிருபிக்கபட்டுள்ளது. அதர்க்கும் ஒரு காரணம் இருக்கிறது
மிக அற்புதமான. மூலிகையான அமிர்த சஞ்சீவினி மூலிகை இங்கு உள்ளது இதை பற்றி விரிவாக இனி பார்ப்போம்

September 25, 2012

ஷிர்ரடி சாயி பாபா - வரலாறு

சாயி பாபா 
சீரடி சாய்பாபா  அக்டோபர் 15, 1918மராட்டி மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. இவருடைய வரலாறு கூறும் புத்தகம் கீழே கொடுத்துள்ளேன் 

September 6, 2012

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள் அனைத்தும் mp3 வடிவில் மின் இறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்                                                                                      

சித்தர் வந்தனம்
அகபேய் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
கொங்கணவர்

August 11, 2012

இடது பாகம் - பெண்ணின் பெருமை




இறைவன் படைத்ததில் மிக உயர்ந்த படைப்பு பெண். இதை சான்றோர்களும் ஏற்றுகொள்கின்றனர். ஏன் மும்மூர்த்திகளும் நிருபித்துயிருகின்றனர்.பிரம்மா தனது நாவிலும் விஷ்ணு தனது இருதய கமலத்திலும் சிவன் தனது உடம்பில் சரி பாதி இடது பாகத்தையும் கொடுத்துயிருக்கிறார் .இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிவன் ஏன் இடது பாகத்தை தந்தார், இதில் தான் மிக பெரிய தத்துவமே அடங்கி உள்ளது அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் 

பெண் தான் பொறுமையின் சிகரம் கோபத்தால் அடிக்க கை ஓங்குவோம் என்றால் வலது கைதான் முதலில் வேகமாக வரும் இடது கை பொறுமையாக தான் வரும் .    

பெண் தான் சகிப்புத்தன்மை அதிகம் கொண்டவள். பல அருவெறுப்பான செயலையும் முகம் கோணாமல் செய்யும் தாயாகவும் மனைவியாகவும் ஆணிடம் இருக்கிறாள். உதாரணம் மலம் கழித்த பின் இடது கை தான் வேலை செய்யும் வலது கை நீர் மட்டும் தான் ஊற்றும்  

பெண் தான் மிக பெரிய சுமைதாங்கி. அனைத்து பழிகளையும் செயல்களையும் தன் மேல் போட்டுகொள்வாள் உதாரணம் குழந்தை பேறு, தூங்கும்போது இடது பக்கமாக படுத்தால்  வலது பக்கத்தை தாங்குதல் 

பெண் எப்போதும் இனிமையானவள் இடது மூக்கு துவாரத்தில் வரும் காற்று குளிரானது வலது மூக்கு துவாரத்தில் வரும் காற்று வெப்பமானது 

உலகம் பெண்ணிடம் இருந்து தான் தோன்றியது. முதலில் படைக்க பெற்ற மனித இனம்  பெண். மேலும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றாலும் இடது பக்கத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம்.



கோவில்களில் நந்தி (மாடு )வலது காலை மடக்கி இடது காலால் தான் ஊன்றி நிற்கும் இதுவும் ஒரு உதாரணம் முனிவர்கள் இடது கையில் தான் தண்டம் வைத்து கொண்டியிருப்பார்கள் 

விநாயகர் மகாபாரதம் எழுதும் போது எழுத்தானிக்காக இடது தந்தத்தை உடைக்க வில்லை வலது தந்தத்தைதான் உடைத்தார் ஏன்  இடது தந்தத்தை உடைக்கவில்லை இடது (மனைவி ) போனால் சகலமும் போகும் என்பது பழமொழி 

கர்பிணி பெண்கள் இடது கை ஊன்றி எழுந்தால் அது பெண் குழந்தை வலது கை ஊன்றி எழுந்தால் அது ஆண் குழந்தை என்பதை அறியலாம் 

கொடுத்து சிவந்தது கர்ணனின் கை அந்த கை இடது கை, அவனது வலது கை கொடுத்தது குறைவுதான். வலது கையில் இருந்தால் பொருள் போவது தெரியும் இடது கையில் அது தெரியாது 

கால்மீது கால் போட்டு அமர்ந்தால் இடது கால் வலது காலை தாங்கி கொண்டு தான் இருக்கும் .

இழிவான செயலான   யாசகம் பெற்றாலும் இடது கையில் தான் பாத்திரம்யிருக்கும் வலது கை வாழ்த்தும் 

பெண்ணால் தான் ஆவதும் அழிவதும் இதைக்காட்ட  விஷ்ணு தனது இடது கையில் தான் அங்கு வைத்தியிருப்பார் இதை ஊதி போரை ஆரம்பிக்கவும் செய்யலாம் முடிக்கவும் செய்யலாம்.

தாங்குவதில் பெண் போல தான் இடது கையும் ஆஞ்சநேயனின் இடது கையில் மலை 



இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அதனால் பெண்மையை மதித்து வாழ்த்தி பயன் பெறுங்கள்     

July 30, 2012

நாரதர் புராணம்







உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி வெற்றியடையச் செய்வதில் இவர் கைதேர்ந்தவர். பரம்பொருளான நாராயணனின் நாபிக்கமலத்தில் (தொப்புள்) பிரம்மா அவதாரம் செய்தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா,நீங்கள் எல்லாரும் ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விஸ்தரியுங்கள், என்று கட்டளையிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியை அடைவதே தங்கள் குறிக்கோள் என்ற அவர்கள், இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர். எனவே பிரம்மா, மீண்டும் உலக சிருஷ்டியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றில் இருந்தும் புலஸ்தியர், புலஹர், அத்ரி, கிருது, மரீசி, ஆங்கிரஸ், பிருகு, தட்சன், கர்தமர், வசிஷ்டர் என்று ரிஷிவர்க்கத்தைப் படைத்தார். இவர்களில் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறந்தார் நாரதர்பிரபஞ்சத்தில் பலகோடி மக்களை உருவாக்கும்படி படைப்புக்கடவுள் அந்த ரிஷிகளுக்கு கட்டளையிட்டார். இவர்களில் நாரதரைத் தவிர மற்றவர்கள், தந்தையின் கட்டளையை ஏற்று, இவ்வுலகை விஸ்தரிக்கும்பணியில் முழுமூச்சாய் ஈடுபடத் தொடங்கினர். நாரதருக்கு இதில் உடன்பாடில்லை. தந்தையின் சொல்லை புறக்கணித்தார். அதோடு மட்டுமல்லாமல், பிரம்மாவுக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.

அப்பா! நீங்கள் தீயவழியில் செல்லும்படி என்னைத் தூண்டுகிறீர்கள். சத்விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லித் தரவேண்டியது தான் ஒரு தந்தையின் கடமை. அதைவிடுத்து இவ்வாறு தவறுக்கு வழிவகுப்பது நல்லதல்ல. நான் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை அன்றி மற்றொன்றைச் சிந்திக்காதவன். உலக சுகங்களை மறந்த என்போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது தான் உங்கள் கடமை,என்று புத்திமதி சொன்னார்.பிரம்மதேவருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. தன் பிள்ளை நாரதரைச் சபித்தே விட்டார்.
நாரதா! உன் அறிவு அழிந்து போகக் கடவது. நீ பெண் பித்தனாக வாழ்வாய். பருவமங்கையர் ஐம்பது பேரை மணம் செய்து கொண்டு காமாந்தகாரனாகத் திரிவாய். சங்கீதம், வீணையில் பாண்டித்யம், குரல்வளம் என்று குதூகலத்தோடு சிற்றின்பத்தில் மூழ்கிப் போவாய். உன் அழகையும், இளமையையும் கண்டு பெண்கள் மயங்கித் திரிவார்கள். பார்ப்பவர் கண்ணுக்கு கந்தர்வனைப் போல வாலிபனாகத் தெரிவாய், என்று சாபமிட்டார். மேலும், நீ தேவகூட்டத்தில் உபபர்ஹணன் என்று பெயரில் பிறந்து, இரண்டு லட்சம் ஆண்டுகள் சுகபோகங்களில் திளைப்பாய். அப்பிறவி முடிந்ததும், மறுபடியும் ஒரு தாசியின் வயிற்றில் பிறப்பாய். அப்போது உத்தம சிரேஷ்டர்களின் சகவாசம் உண்டாகும். அவர்கள் சாப்பிட்ட எச்சிலை உண்ட புண்ணியத்தால் ஸ்ரீகிருஷ்ணரின் அருள் கிடைக்கும். மீண்டும் என் மகனாகப் பிறவி எடுப்பாய். அப்போது தான் ஞானம் உண்டாகும், என்று சாபமிட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டார்நாரதர் பிரம்மாவின் சாபத்தை கேட்டு கதறி ஓலமிட்டார். அப்பா! இது தான் ஒரு தந்தைக்கு அழகா! நான் பல நீசப்பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு என்ன பெருமை உண்டாகப்போகிறது. இருந்தாலும் உங்களுக்காக இப்பிறவிகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், என் சிறுவிண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்பிறவி எடுத்தாலும், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பாதாரவிந்தங்களை மறக்காத பாக்கியத்தை மட்டும் தாருங்கள்,என்று வேண்டிக் கொண்டார். நாராயணா, நாராயணா என்று சொல்லிக்கொண்டே திரிந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் புஷ்கரம் என்னும் க்ஷத்திரத்தில் கந்தர்வன் ஒருவன் நீண்டகாலமாக பிள்ளையில்லாமல் வருந்திக் கொண்டிருந்தான். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். கந்தர்வனின் தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி பிள்ளை வரம் தந்தார். பிரம்மசாபத்தின் பயனாக, நாரதர் கந்தர்வனின் மகனாக உபபர்ஹணன் என்ற பெயரில் பிறந்தார். சித்திரரதன் என்ற மன்னனின் மகள்களான ஐம்பது பெண்களையும் மணந்து சிற்றின்பத்தில் திளைத்தார். ஆனால், வீணாகானமும், ஸ்படிகமாலையும் கொண்டு ஹரிபக்தி கொண்டவனாகவும் வாழ்ந்தார். கந்தர்வனாக இருக்கவேண்டிய காலம் முடிவடைந்ததும் உயிர்நீத்தார். கான்யகுப்ஜ தேசத்தில் திரமிளன் என்ற அரசன் இருந்தான். அவனது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த சந்தர்ப்பத்தில் திரமிளனின் மனைவி கலாவதி கருவுற்று ஒரு ஆண்குழந்தையை ஈன்றாள். திரமிளனுக்கு குழந்தை வந்த நேரம், நாட்டில் மழை பெய்து நீர்வளம் நிறைந்தது. அதனால் நீர் என்ற பொருளில் நாரதன் என்று குழந்தைக்கு பெயரிட்டனர். (நாரம் என்றால் தண்ணீர். கடலில் மிதப்பவர் என்பதால் தான் திருமாலுக்கே நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது) ஒருநாள் நாரதரின் சகோதரர்களான சனகாதி முனிவர் நால்வரும் அதிதிகளாக கலாவதியிடம் வந்து உணவு பெற்றனர். சிறுவன் நாரதன் அவர்கள் சாப்பிட்ட மீதி உணவை வாங்கி சாப்பிட்டான். பணிவோடு நடந்து கொண்ட அந்தச் சிறுவன் மீது அன்பு கொண்டு அதிதிகள், அவனுக்கு ஸ்ரீகிருஷ்ணமந்திரத்தை உபதேசித்தனர். அன்று முதல் சிறுவன் நாரதன் கிருஷ்ணதாசனாக மாறிவிட்டான். சதா  கிருஷ்ண தியானத்தில் இருந்த நாரதருக்கு கிருஷ்ணரும் குழந்தை வடிவில் காட்சி தந்து மறைந்தார். மீண்டும் கிருஷ்ண தரிசனம் வேண்டி அழுதார் நாரதர். அப்போது, வானில் அசரீரி ஒலித்தது. நாரதா! பிரம்மாவின் சாபம் இன்றோடு உனக்கு நீங்கியது. மீண்டும் அவர் உடம்பிலேயே ஐக்கியமாகி விடுவாய் என்றது. பின்னர் மீண்டும் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறவி எடுத்து திரிலோகசஞ்சாரியாக மாறிவிட்டார். ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர் நாரதரே. பக்தபிரகலாதனுக்கு தாயின் கருவில் இருக்கும்போதே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அவனை நாராயண பக்தனாக்கினார். சின்னஞ்சிறு குழந்தை துருவனுக்கு விஷ்ணுமந்திரத்தை உபதேசித்து அவனை நட்சத்திர மண்டலத்தில் ஒளிவிடச் செய்தார். கலகப்பிரியராக இருந்து பல கலகங்களையும் ஏற்படுத்தி நன்மை ஏற்படச் செய்தார்.