Showing posts with label மூலிகை மர்மம். Show all posts
Showing posts with label மூலிகை மர்மம். Show all posts

March 7, 2014

மூலிகை மர்மம் -(சாகா மூலி) சீந்திற்கொடி

சிசேரியன்


சீந்திற்கொடி மரங்களில் தொற்றிப்படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

சித்த மருத்துவத்தில்
 சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். 
சீந்தில் கொடி

சீந்தில் கொடி காயுடன்

சாகா மூலி



9 மாத குழந்தை

பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது

குறிப்பு:

   ஒரு மனிதனால் 45 யூனிட் வலிதான்  பொறுக்க முடியும். ஆனால் தாயால் பிரசவத்தில் 57 யூனிட் வரை வலி ஏற்ப்படுகிறது. இது 20 எலும்புகள் ஒரே நோரத்தில் உடையும் வலிக்கு சமமானது. உண்மையில் தாய் தான் சிறந்த சுமைதாங்கி அவளுக்கு இதை கூட தாங்கும் வல்லமை உண்டு. ஆனால் தன் குழந்தை இறந்து விட்டது என்பதை தான் தாங்க முடியாது. அதனால் பிரசவத்தில் இந்த கொடியை காலில் கட்டிவிட வேண்டுகிறேன் இதனால் எந்த சைடு எபக்டும் இல்லை. இதை ஒரு தாயத்து போல நினைத்து கொள்ளுங்கள்.    


July 22, 2013

சாபம் இல்லா மூலிகை - (பாகம் 2)




 நத்தை சூரி - கருவூரார் பலதிரட்டு


நத்தை சூரி (மிக அரிதாக கிடைப்பது மாந்ரீகத்திற்க்கும் மருத்துவத்திற்க்கும் அதிகம் பயன்படுவது)
கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார் 

நத்தை சூரி (மிக எளிதாக கிடைப்பது ஜாலங்கள் மருத்துவங்களில் பயன்படுவது)
  
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் நத்தைச்சூரி
  தாரணிக்குள் சாபமில்லை பெரியோர் கொள்வார்
  சித்தியென்ற எட்டுமிதற் குள்ளேயாச்சு

  ………………………………………

  ………………………………………
    
உலகத்தில் அநேக மூலிகைக்கு சாபம் உண்டு. இந்த        நத்தைசூரிக்கு சாபம் இல்லை என்கிறார்,
இதையும் பறித்து அப்படியே பயன்படுத்தலாம்.


துளசி,வில்வம் - மூலிகை ரத்தின சிந்தாமணி


மூலிகை ரத்தின சிந்தாமணி என்னும் நூல் சாபம் இல்லா மூலிகை இரண்டு கூறுகிறது அவை பின்வருமாறு
துளசி


ஒன்று துளசி மற்றொன்று வில்வம் இவை இரண்டுக்கும் சாபம் இல்லை என்றும் இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பூஜைக்கு திரும்ப திரும்ப பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.மேலும் இதன் மருத்துவ பயன்கள் அளவிடற்கரியது
மஹா வில்வம்




வில்வம் (சாதாரணமாக கிடைப்பது )




மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி அய்யா குப்புசாமி அவர்கள் நிறைய கூறியுள்ளார். அவருடைய வலைதளத்திற்க்கு சென்று பல மூலிகையின் பயன்களை அறியுமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் தெரிவிக்கிறேன்

அய்யா குப்புசாமி அவர்கள் 
        
                  http://mooligaivazam-kuppusamy.blogspot.in/









July 18, 2013

சாபம் இல்லா மூலிகைகள் (பாகம் - 1)



திருநீற்று பச்சிலை - கோரக்கர்

குரு கோரக்கர்

கோரக்கர் சந்திர்ரேகை என்னும் நூலில் 144,145 பாடலில் சபநிவர்த்தி இல்லா மூலிகையை குறிப்பிடுகிறார்
…………………………………………………………
……………………………..
………………………………………………………………
………………………………………….
வேகமுற்ற குருமூலி பதினெண் பேர்க்கும்
  விளங்க வைத்த திது தனக்கு சாபம் இல்லை
பாகமுறப் பரிபாஷை யதனை நீத்துப்
  பட்சமுட னியம்பிடுவேன் மூலி தானே
 
திருநீற்று பச்சிலை
தானெற்ற திருநீற்று இலையு மாகும்
  தன்மையுடன் சரக்கெல்லாம் நிற்க்கும் பூடு
கோனென்ற கொள்கையுடன் பதினெண் பேரும்
   குவலயத்தில் மறைத்திட்டார் குணமாகத்தான்
……………………………………………………………
…………………………………………………………
………………………………………………………
……………………………………………………

அதாவது மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை குருமூலி என்றும் இதனால் மருந்து சரக்கெல்லாம் சுண்ணமாக மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர் குரு மூலிகையை தனது நூலில் மறைமுகமாக பதினெண் சித்தர்களும் கூறியுள்ளனர் என்றும், இந்த மூலிகைக்கு சாபம் இல்லை என்றும், அந்த மூலிகை திருநீற்று பச்சிலை தான் என்று மிகவும் வெளிப்படையாக கூறுகிறார்

 அருகம்புல் - மூலிகை ஜாலரத்தினம்






அருகம்புல்



மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் சாபநிவர்த்தி இல்லா மூலிகை பற்றி கூறுகிறது.

மூலிகையில் முதல் மூலிகையாம் இதற்க்கு சாபம் இல்லை
அநேகம்பேர் கண்டதுண்டு அதன்பேர் கணேசமூலிகையாகும்.

கணேசமூலிகை என்பது அருகம்புல்லேயாகும்


அருகம்புல் என்ற மூலிகைக்கு சாபம் இல்லை இதை பறித்து அப்படியே பயன்படுத்தலாம் 




May 31, 2013

அல்லி (சூரியன் சுருங்கி) - மூலிகை மர்மம்

அல்லி மலரில் முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பேயாழ்வார் தோன்றினார் என்பர்.இவர் தோன்றிய அல்லி மலரைச் செங்கழுநீர் என்றும், செவ்வல்லி என்றும் குறிப்பிடுகின்றனர்.
அல்லியின் பயன்கள்
சிவப்பு அல்லி 

அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.உடல் சூடு தணிய,நீரிழிவு பாதிப்பு நீங்க,சிறுநீர் எரிச்சல் குறைய,தாகம் தணிய,கண்ணோய்கள் நீங்க,இரத்தம் சுத்தமாக,அல்லியை அதிகம் பயன்படுத்துவர்.



சித்தர் நூல்கள்
              
                 அல்லி மலரை பற்றி அகத்தியர் குணபாடம் பின்வருமாறு கூறுகிறது.



                                                              மேகமறும் புண்ணாறும் விட்டேகும் 
                                                              நீரிழிவுதாகந் தணியும் தழலகலும் - வாகான
                                                              மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
                                                              அல்லி மலரால் அறி




நீல அல்லி ( குவளை)

                   செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்                                                                                                                    செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ 
                  டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
                  கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
                   புண்ணின் நோய் பன்னோயும் போம்

                                                                                -அகத்தியர் குணபாடம்.

அல்லி கிழங்கு 


அல்லி கிழங்கை வைத்து பஸ்பங்கள் நிறைய செய்யப்படுகின்றன . சித்தமருத்துவத்தில் அல்லி அல்லது ஆம்பல் கிழங்கின் பங்கு பெரிதும் பயன்படுகிறது.






May 30, 2013

தாமரை( சந்திரன் சுருங்கி) - மூலிகை மர்மம்


தாமரைமலர் மகத்துவம்


தாமரை மலரில் செந்தாமரை,வெள்ளைதாமரை என இரண்டு உண்டு இரண்டும் ஒரே பயனைத்தான் தருகிறது. தாமரைமலரின் மகத்துவம் பற்றிசொல்லவேண்டுமானால் நிறைய சொல்லலாம்.ஆனால் பதிவின் நீளம் கருதி முக்கியமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

யானை தாமரைக்கொண்டு பூஜித்தல்

தாமரையுடன் விநாயகர்

தாமரையுடன் குருவாயூரப்பன்


எப்போதும் தாமரையுடன் காட்சி தரும் விஷ்ணு பகவான்

பிரம்மா தாமரையுடன்


சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர் தாமரை தான், தாமரைமலர் கொண்டு சிவபெருமானை அர்ச்சனைசெய்தால் உடனே நினைத்தகாரியம் கைகூடும். உதாரனமாக:விஷ்ணுபகவான் ஆயிரம்தாமரைமலர் கொண்டு அர்ச்சித்துதான் சுதர்சனரை பெற்றார். ஆயிரத்தில் ஒன்றாக அவர்கண்ணும் அடங்கும். மேலும் பல தெய்வங்கள் தாமரைமலர் கொண்டு பெருமானை அர்ச்சனை செய்கின்றனர். பிரம்மா,விஷ்ணு,கணபதி,முருகன்,அன்னைபார்வதிதேவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
திருச்செந்தூர் முருகன் தாமரையுடன்

ஆகையால் பெருமானிடம் வேண்டுதல் வைப்பவர் வில்வத்திலும் மேலான தாமரையும் சேர்த்து கொண்டு அர்ச்சனை செய்யுங்கள் எடுத்தக்காரியம் தடையின்றி நிறைவேறும்.உதாரணம்: திருச்செந்தூர்முருகனைபோல,திருமால் எப்போதும் தாமரையை கையில் வைத்து கொண்டேயிருப்பார்.

ஆயிரம் தாமரையை கொண்டு திருமால் சுதர்சனம்  பெறுதல்
தாமரை சூரியபகவானுக்குரிய மலராகும், மேலும் அனைத்து உபதெய்வங்களும்(சிவபெருமானையும்,ஆதிசக்தியும் தவிர்த்து) தாமரைமலர் மீது நின்றவண்ணமே காட்சிதருகின்றனர். அனைவரும் ஆயிரத்தெட்டு இதழ்கமலத்தைகடந்தவர்கள். ஆதலால்தெய்வமாகினர்.

ஆதிமூலவரும்,ஆதிசக்தியும்தான் பரம்பொருளின் ஆசியுடன் மற்ற தெய்வங்களை படைத்தனர்.
  

தாமரைக்கிழங்கின் பயன்கள்


இக்கிழங்கால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும். இதயம், நுரையீரல் பாதிப்பால் ஏற்ப்பட்ட காசநோய், சளி போன்றவற்றை குணப்படுத்தும், கண்நோயிக்கு இதை சூரணம் செய்து சாப்பிடலாம், மேலும் இதிலிருந்து தைலம் தயாரித்து தலைக்கு தேய்த்து குளித்தால் கண்நன்றாக தெரியும்.


தாமரை பூ


நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும்.

தாமரை 


தாமரைத்தண்டை எடுத்து நூல் தயாரித்து ,காப்புகட்டுவதற்க்கும் பயன்படுத்துவர்.
தாமரையின்கிழங்கிற்க்கு கீழே ஆணிவேர் உண்டு அதையும் எடுத்து பயன்படுத்துவர், ஆணிவேர் நட்சத்திரம் பார்த்து எடுக்கவேண்டும்.

தாமரை ஜாலம்


தாமரை விதையை பொடிசெய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும்.இயற்க்கை நிறம் வருவதற்க்கு வெய்யிலில் வைத்தால் வந்துவிடும்.அன்னபறவையை போல நீரும் பாலையும் பிரித்துவிடும்


சிவபெருமானை பற்றி சில தகவல்கள் ஒரு பதிவில் தரப்படும்








May 6, 2013

மூலிகை மர்மம் - நிலம்புரண்டி

நிலம்புரண்டி என்பது மனிதர்கள் வாடை பட்டதும் நிலத்தை குடைந்து கொண்டு உள்ளே சென்று விடும் .இம்மூலிகை பெரும்பாலும் புதயலை கண்டுபிடிப்பதற்க்கு உபயோகபடுத்துகிறார்கள்

இந்த மூலிகை சாதாரணமாக பூமியில் மற்ற செடி கொடிகளுக்கு இடையில்முளைத்திருக்கும்இது மனிதர்களின் வாசனை பட்ட மாத்திரத்தில் மண்ணை கீறிக்கொண்டு உள்ளே  போய்விடும்அதனால்தான் இதற்கு நிலம் புரண்டி என்ற பெயரை நமது முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்இதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் சாதாரணமாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் தேத்தான்  கொட்டைகளை வாங்கி கையில் வைத்துக் கொண்டு நடந்தால் தேத்தான் கொட்டையினுடைய வீரியத்தால் நிலத்திற்குள் போகாமல் வெளியே நின்று விடும்,


மூலிகை இருக்கும் இடம் சென்றால் சல சல என சத்தம் வரும் அதை வைத்து அறியலம் .மேலும் தேத்தான் கொட்டைகள் கையில் இருந்து கீழே நழுவி விடும் . 


சாப நிவர்த்தி 


நிலம்புரண்டி மூலிகையை ஞாயிறு. செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சூர்ய உதயத்திற்கு முன் இடத்தை சுத்தம் செய்து அச்செடிக்கு சாப நிவர்த்தி செய்து மந்திரத்தால் உயிர் கொடுத்து காப்பு கட்டி தூப தீபங்கள் காட்டி பறித்து வந்துகுழித்தைலம் இறக்க வேண்டும்அந்த தைலத்தில் பச்சை கற்பூரம் ஜவ்வாது. கோரோசனை மூன்றும் சம எடையில் சேர்த்து குழைத்து அஞ்ஜனமாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்அந்த அஞ்ஜனத்தில் ஆஞ்சநேய மூல மந்திரம் மற்றும் அஞ்ஜனா தேவி மூல மந்திரம் முறையே 1008 முறை ஜபித்து உருஏற்ற வேண்டும்,தேவையான போது அந்த அஞ்ஜானத்தை சிறிது எடுத்து வெற்றிலையில் தடவி மேற்குறிப்பிடும் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்து வெற்றிலையில் பார்த்தால் தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவது போல் புதையல் இருக்கும் இடத்தை நமக்கு மிகதுல்லியமாக காட்டும்,    மேலும். இந்த மூலிகையின் வேரை கன்று போடாத பசுஞ்சானத்தோடு எரித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து மேற்குறிப்பிட்ட மூல மந்திரத்தை முறைப்படி ஜபித்து புதையல் இருப்பதாக நாம் கருதும் இடத்தில் இரவில் தெளித்து விடவேண்டும்,காலையில் சென்று பார்த்தால் அங்கு புதையல் இருக்கும் பட்சத்தில் பாளம் பாளமாக வெடித்து இருக்கும். புதையல் இல்லையென்றால் சாதாரணமாக இருக்கும்




April 17, 2013

நின்றால் சுருங்கி அல்லது நிழல் பட்டால் வாடி

நின்றால் சுருங்கி மூலிகை தொட்டால் சுருங்கியை போலே மாந்திரீக மூலிகையாக உள்ளது. குறிப்பாக பெண் வசியத்திற்க்கு அதிகம் பயன்படுத்தபடுகிறது. குறிப்பு மூலிகை குணவிளக்கம் காண்க

வெள்ளிகிழமைகளில் சுக்கிர ஓரையில் ஆயில்யம் நட்சதிரம் அன்று காப்பு கட்டி பிடுங்கினால் அதிக பலனை கொடுக்கும் 
நின்றால் சுருங்கி

வசிய மை தயாரிப்புகளில் அதிக அளவில் பயன்படுத்தபடுகிறது .

இந்த மூலிகை கிடைப்பது மிக மிக அரிது, நாங்கள் இந்த மூலிகை படம் பிடித்தது சதுரகிரி மலையில் பெரிய மகாலிங்கம் கோவில் அருகில் 

இது நம் வாடை பட்டது வாடி விடும் அது சுருங்கி இனம்தான் என்பதை கண்டுபிடிக்க அதை தொட்டால் சுருங்கி விடும். அதை கீழே கொடுத்துள்ள வீடியோ மூலம் காணுங்கள்







March 28, 2013

மூலிகை மர்மம் - தொட்டால் சுருங்கி

மூலிகைகளில் ஓவ்வொரு மூலிகையும்  ஐந்து வகையாக பார்க்கலாம் அது போல சுருங்கும் இனத்தில் உள்ள மூலிகைகளில் முதல் வகையான தொட்டால் சுருங்கி பற்றி இன்று பார்ப்போம்

தொட்டால் சுருங்கி நீர்பாங்கான இடத்தில் அதிகம் வளரும்.தொட்டால் சுருங்கிக்கு காப்பு கட்டி பிடுங்கி வேரை தாயத்தில் அடைத்து பயன்படுத்தலாம் அல்லது வேரையும் சிறிது இலையையும் காயவைத்து கலந்து பொடிசெய்து வசியமாகும் நபர்க்கு கொடுக்கலாம்

வசிய மூலிகையில் இது முதலிடம் வகிக்கிறது.மாந்திரீகத்திலும் பயன்படுகிறது 

தொடர்ந்து 48 நாட்கள் பெண்உறவு,மச்ச, மாமிசம், பெண் தீட்டு (மாதவிலக்கான பெண்களிடம்யிருந்து ) இவற்றிலிருந்து விலகி  தொட்டால் சுருங்கி செடியை காலை மாலை
தொட்டால் சுருங்கி
 தொட்டு வந்தால் மனோசக்தி என்கிற காந்த சக்தி கிடைக்கும்

ஐந்து இனங்கள்

1.தொட்டால் சுருங்கி அல்லது தொட்டால் வாடி 

2.நின்றால் சுருங்கி அல்லது  நிழல் பட்டால் வாடி

3.நிலம் சுருங்கி அல்லது நிலம் புரண்டி

4.சந்திரன் சுருங்கி ( தாமரை) சந்திரன் வாடை பட்டதும்  சுருங்கி விடும்(அதாவது ஆணி வேர் மறைந்து விடும்)

5.சூரியன் சுருங்கி  (அல்லி)  சூரியன் வாடை பட்டது சுருங்கி விடும் (அதாவது ஆணி வேர் மறைந்து விடும்)




அடுத்து   மூலிகை மர்மத்தில் நின்றால் சுருங்கி அல்லது  நிழல் பட்டால் வாடி




January 25, 2013

மூலிகை சாபநிவர்த்தி - தைப்பூசம்

தைப்பூசம்

தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப் படுகிறது.


முருகன் தமிழ்க்கடவுள்.ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன்  ஒரு போர்க்கடவுள் ஆவார். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கினார் அன்று அவ்வேலுக்கு பூஜை செய்தார் அதுவே தைபூசம் என்றாயிற்று 

.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார்

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்  தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். (உண்மை பூசம் நட்சத்திரம் தான் )

மூலிகை சாபநிவர்த்தி தேவையில்லாத ஒரு நாள்


மூலிகை உயிர் கொடுக்கும் விதம்  

        தைபூசத்தில் பூசம் நட்சத்திரத்தில் 6 மணிக்குள் சூரியன் மறைவதற்க்குள் ஒரு செடிக்கு காப்பு கட்டி உயிர் கொடுத்து வாங்கினால் போதும் சாப நிவர்த்தி செய்ய தேவையில்லை அன்று ஒரு நாள் மட்டும் இது பொருந்தும். மூலிகையின் குறிப்பிட்ட நட்சத்திரம் தேவையில்லை 


 காப்பு கட்டி பலி கொடுத்தவுடன்  கீழ் காணும் மந்திரம் கூற வேண்டும்

ஓம் ஈஷ்வர சாபம் நசி ந்சி
ஓம் பார்வதி சாபம் நசி நசி
ஓம் தேவர்கள் சாபம் நசி நசி
ஓம் பதினெட்டு சித்தர்கள் சாபம் நசி நசி மசி நசி 

இதை மூன்று முறை கூறவும்.

பின் 

"ஓம் மூலி சர்வ மூலி ஆகச மூலி உன் உயிர் உன் உடலில் நிற்க கடவ சுவாகா "

இதை மூன்று முறை கூறவும்.

இதை பாவிகளுக்கு கூற வேண்டாம் என அகத்தியர் கூறுகிறார். அகத்தியரை வணங்கி கொண்டு செய்வது உத்தமம்

கையின் கடைசி விரலான சுட்டு விரல் மூலிகையில் பட கூடாது இது மிகவும் முக்கியம் 

பறிப்பவர் தந்த சுத்தி , நேத்திர சுத்தி செய்து சூரியனை வணங்கி பின் உயிர் கொடுத்து பறிக்க வேண்டும் இது மிக மிக முக்கியம் 

இதை குற்றமில்லாமல் செய்தால் கண்டிப்பாக அனைத்து அஷ்ட கர்ம மூலிகையும் வேலை செய்யும் இது அனுபவமாக கண்ட உண்மை 




(இன்று பூசம் நட்சத்திரம் 27-1-13 பகல் 5.20 ஆரம்பித்ததால் ,  திங்கள் கிழமை காலை  சூரிய உதயத்தில் மூலிகை பிடுங்குவது உத்தமம் அதுவும் 6.00 யிருந்து 7.00குள்) 






October 31, 2012

மூலிகை மர்மம் - நாயுருவி

நாயுருவி இனம்


நாயுருவி (ஆண்)

செந்நாயுருவி (பெண்)

  நாயுருவியில் இரண்டு உண்டு அதில் ஆண்   நாயுருவி பச்சையாகவும் பெண் நாயுருவி சிவப்பாகவும் உள்ளது இதில் பெரும்பாலும் வசியத்திற்க்கு பெண் நாயுருவி பயன்படுத்தபடுகிறது இதை செந்நாயுருவி என்றும் கூறுவர் இதன் படங்களை மேலே கொடுத்துள்ளேன் இது தண்டுபகுதியில் சிவந்த நிறத்தில் இருக்கும் அதை வைத்து தான் கண்டுபிடிக்க வேண்டும் இது அட்டகர்ம மூலிகைகளில் ஒன்றாகும் பெரும்பாலும் மருத்துவத்தில் இதையே பயன்படுத்துகின்றனர் இது இல்லை என்றால் தான் அதை பயன்படுத்துகின்றனர் 

நாயுருவி மருத்துவப் பயன்கள் 
                          நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். 

மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்


நாயுருவி மர்மங்கள்

இதன் விதையை சோறு போல் சமைத்து உண்ண ஒரு வாரத்திற்க்கு பசி எடுக்காது தேவையானவை இதில் இருந்தே பெறப்படுகிறது. மீண்டும் பசி எடுக்க மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

இதன் இலையை மென்று விழுங்கி சிறிது தாடையில் அடக்கி கொண்டு கண்ணாடிகளை கடித்து துப்பலாம் வாய் அறுக்காது. குறிப்பு சாறு பல்லில் அனைத்து இடங்களிலும் பட வேண்டும் தவறாக செய்து வாய் கிழிந்து விடபோகிறது.கண்ணாடிகளை விழுங்கி விட கூடாது  குடல் கிழிந்து விடும் . மேலும் இது அனைத்தும் ஒரு தகவல் பகிர்வு தக்க குருவின் உதவியுடன் செய்து பார்க்கவேண்டும் என கேட்டுகொள்கிறேன்








October 2, 2012

தம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-2


சஞ்சீவினி மூலிகை மொத்தம் 21 உள்ளது .அதில் இங்கு உள்ளதுஅமிர்த சஞ்சீவினி மூலிகை இது தம்பிக்கலை அய்யன் தவத்தால் இங்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது

அமிர்த சஞ்சீவினி இருப்பிடம்


தம்பிக்கலை அய்யனின் வடமேற்க்கு மூலையில் விநாயகர் கோவில் உள்ளது அதன் பக்கமாக மூலிகை வனம் ஒன்று உள்ளது இந்த வனத்தில் தான் அமிர்த சஞ்சீவினி மூலிகை உள்ளது இது சற்றே ஆகாய தாமரையும் ரோஜா மலரும் போன்றே பச்சை கலரில் இருக்கும்.

அமிர்த சஞ்சீவினி பெருமை


இதன் அருமை பற்றி இங்கு கூறியே ஆக வேண்டும் ரமாயணத்தில் லக்‌ஷ்மனுக்கு அடிபட்டபோது அனுமன் சஞ்சீவி மூலிகை எடுக்க சென்றார் அல்லவா? அதில் ஒன்றுதான் இது. அவருக்கு மிர்திவ சஞ்சீவினி,அமிர்த சஞ்சீவினி என்ற இரு மூலிகை தேவைபட்டது. ஒன்று காயத்தை சரி செய்ய மிர்த்திவ சஞ்சீவினி,மூக்கில் நசியமிட அமிர்த சஞ்சீவினி. அந்த மூலிகை தான் இது. பாம்பு கடித்தவரை இங்கு படுக்கவைக்கும் போது அமிர்த சஞ்சீவினி  காற்று உள்ளே செல்கிறது இது தான் காரணம் மேலும் பக்தியும் மிக அவசியம்

அய்யன் இருப்பிடம்

  தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் ஈரோடுமாவட்டம்(erode district) பெருந்துறை வட்டத்தில்அமைந்துள்ள இராகு கேது பரிகார ஸ்தலமாகும். ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 19 வது கி.மீட்டரில் ரெட்டை வாய்க்கால் உள்ளது.அங்கிருந்து 2 கி.மீட்டர் தெற்கு நோக்கி உள்ளது.சித்தோட்டில் இருந்து 10கி.மீட்டர் கவுந்தப்பாடியில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது


September 25, 2012

மூலிகை மர்மம் -கரிசலாங்கண்ணி


அகத்தியர் பரிபூரணம் எனற நூலில் பின்வரும் வசியத்தை கூறுகிறார் 


பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று "யவசிவய' " என்று நீயும்
அப்பனே கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
கரிசலாங்கண்ணி
சுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
அனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.



பொற்பாவை என்னும் கரிசலாங்கண்ணியை சாப நிவர்த்தி செய்து சமுலம் எரித்த சாம்பலை கையில் வைத்து யவசிவய என்று உரு ஏற்றி சுழிமுனையில் மனதை வைத்து புருவ மத்தியில் இட்டால் எதிரிகள் வசியமாவர்

இதில் சபநிவர்த்தி செயிவித்தால் தான் மூலிகை வேலை செய்யும் பின் யவசிவய என்று 108 உரு கொடுத்தல் அவசியம்