Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

July 6, 2012

ஔவையார்-நிறைவு பகுதி





ஔவையார் தான் இயற்றிய நூல்களான ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை மதுரை தமிழ் சங்கத்தில் வெளியிட்டார். மேலும் அவ்வை குறள் ,விநாயகர் அகவல்,ஆசாரகோவை போன்றவையும் கொடுத்தார்.  


ஔவையார் மதுரையில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள பழமுதிர்சோலை சென்றார். இங்கு தான் முருக பெருமான் ஆடு மேயிக்கும் சிறுவன் வடிவில் வந்து ஆட்கொண்டு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடினார் பின் தன் உருவத்திற்கு வந்து தெரிந்தது,தெரியாதது ,புரிந்தது,புரியாதது ,அறிந்தது,அறியாதது என கேள்விகனைகளை தொடுத்தார்.பின் அவ்வைக்கு அங்கிருந்து கைலைக்குசெல்லும் மார்க்கத்தையும் கூறினார் .பின் அங்கிருந்து கைலாசம் சென்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசனம் செய்து முக்தி அடைந்தார்.   

ஔவையார் இயற்றிய நூல்களான ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன்,விநாயகர் அகவல் போன்றவை மின்னூலாக கீழே தரவிறக்கம் செய்யலாம் 

விநாயகர் அகவல்





ஆத்திசூடி ,நல்வழி ,மூதுரை,கொன்றைவேந்தன்





June 30, 2012

ஔவையாரும் திருவள்ளுவரும்




ஔவை மதுரை போகும் வழியில் ஒரு வீட்டில் உள்ள திண்ணையில் அமர்ந்து ஒய்வு எடுக்கிறார். அப்போது அந்த வீட்டுக்கு சொந்தக்கரர்  அங்கு தன் மனைவியை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார் . அதை கேட்ட அவ்வை நான் இன்று உங்கள் வீட்டில் தான் உணவு அருந்த வேண்டும், என்று கட்டாயபடுத்தி கூறுகிறார்.வீட்டுகாரரும் மிகுந்த வருத்தபட்டு வாருங்கள் அன்னையே என்று உள்ளே அழைத்து செல்கிறார் உள்ளே உள்ள அடங்க மனைவி கணவனை திட்டி தீர்த்து விட்டு அன்னைக்கு சிவந்த முகத்தோடு அன்னம் இடுகிறாள் இதை கண்ட அன்னை உன் உணவில் சினம் என்ற நஞ்சு உள்ளது இதை உண்டால் எனக்கும் அது வந்து விடும் என்கிறார். இதை   கண்ட அப்பெண் கணவனை திட்டுகிறாள்.இதை கண்ட அன்னை மனைவி மதிக்கவில்லை என்றால் உடனே துறவறம் மேற்கொள் என்கிறார்.இதை கண்ட மனைவி அதிச்சியுற்று, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள் .
பின் அங்கிருந்து வள்ளுவர் உள்ள பகுதிக்கு செல்கிறார் அங்கு அவர் தன் கவியை மாணாக்கர்களுக்கு போதித்து கொண்டிருக்கிறார் இதை கண்ட அவ்வை,மிகவும் ஆழமான கருத்துகள் இதை தாங்கள் தமிழ் சங்கத்தில் வெளியிட்டு விட்டீர்களா ? என்று வினம்பினார்.அதற்க்கு, இதை அவர்கள் பார்க்காமலேயே நிராகரித்துவிட்டார்கள் என்றார். இது தமிழுக்கு ஏற்ப்பட்ட அவமானம் வாருங்கள் இதை நான் கேட்கிறேன், என்றார் அவ்வை. உடனே இருவரும் குறளை எடுத்து கொண்டு முத்தமிழ் சங்கத்திடம் சென்றனர். அங்கு அவ்வைக்கு குறளோடு வந்ததால் வாயிற்கதவு மூடப்பட்டது தன் கவிதிறத்தல் அதை உடைத்து எறிந்து உள்ளே சென்றனர் .உடனே பாண்டியமன்னன் அங்கு வந்து நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு சங்கத்தை கூட்டினான்.அங்கு குறள் பாடப்பட்டது .அங்குள்ள புலவர்கள் வெண்பாவால் இருந்தால் நான்கடி வேண்டும் இது ஈரடி வெண்பா ஏற்க முடியாது என்றனர்.உடனே சினம் கொண்டு அவ்வை ,  'சங்கபலகையைகொண்டுவாருங்கள் பொற்றாமரை குளத்தில் வைப்போம், குறள் உலகத்திற்கு வேண்டுமா? வேண்டாமா?', என்று ஈசனே முடிவு கூறட்டும் என்றார். பின் குறளை ஈசன் ஏற்று கொண்டதின் அடையாளமாக சங்கபலகையின் மீது இருந்த ஓலைசுவடிகள் தங்கசுவடிகளாக மாறின பின் அனைவரும் ஏற்று கொண்டனர். பலத்தடைகளை தாண்டி குறள் வெளிவர காரணமாக இருந்தவர் அவ்வையே         
அவ்வை எழுதிய நூல்கள் 

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை 

ஔவை குறள், விநாயகர் அகவல்
இதில் விநாயகர் அகவல் என்ற நூலில்  குண்டலினியை விழிப்படைய செய்யும் முறையை மிக அழகாக கூறியிருக்கிறார் 
           

June 27, 2012

ஔவையார்



 பகவன் என்பவனுக்கும் ஆதி என்பவளுக்கும் ஏழாவது குழந்தையாக பாணரகத்தில் பிறந்ததாகவும், அங்கே பாணரோடு செய்த உடன்படிக்கையின்படி, குழந்தையை அங்கேயே விட்டுவருமாறு பகவன் கூற, பெற்ற குழந்தையைப் பிரிய விரும்பாத ஆதி அழுததாகவும், ஆதிக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு ஔவைக் குழந்தை வெண்பா கூறியதாகவும் கூறுவர். 
பின் அவர்கள் அவ்விடம் விட்டு சென்றனர் பின் மழை பெய்து, வெள்ளம் வந்தது கூடையில் இருந்த குழந்தை ஆற்றில் சென்றது .அங்குள்ள ஒரு வணிகரால் எடுத்து வளர்க்கபட்டது. இளமை பருவம் வந்ததால் மணம் முடித்து வைக்க முடிவு செய்தனர் ஆனால் அவ்வைக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை பின் விநாயகரிடம் புலம்ப அவர் பிறப்பின் நோக்கத்தை கூறி அனைவருக்கும் தாயான வயதான தோற்றத்தை கொடுத்து தமிழ் தொண்டு செய்ய மதுரை அனுப்பிவைத்தார். பின் அவர்போகும் வழியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது 
முதலில் ஔவையார்  தகடூரை அடைந்தார். அங்கு பஞ்சம் நிலவியது, இதனால் அங்குள்ள சிற்றரசனான காரி ஆசான் என்கிற காரி மன்னன் தன்னிடம் இருந்த தானியங்களை எல்லாம் மக்களுக்காக கொடுத்துகொண்டிருந்தன் இதை பார்த்த அவ்வை இது மிகபெரிய செயலல்லவா நீ வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர். பின் இவரைதான் அதியமான் விளைச்சலில் பங்கு தராததால் கைது செய்தான். இவரை விடுதலை செய்து அந்த நாட்டில் தம்  கவிதிறத்தால் மழை பொழிய செய்தார் ஔவை.
தன் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதால் தன் நாட்டின் ஒரு பகுதியான கஞ்சமலையில் இருந்து கருநெல்லி என்ற ஒரு நெல்லிகனி கொண்டுவரப்பட்டது .இதை சாப்பிட்டால் நீண்டநாள் வாழலாம் என்று அதை அவ்வைக்கு கொடுத்தான் அதியமான். மிக அதிசிய கனியான நெல்லியை கொடுத்ததால் நீயும் வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
பின் அங்கிருந்து பறம்பு நாடு வழியாக சென்றார் அங்குதான் ஒரு அதிசயத்தை கண்டார் பாரி மன்னனும் அவன் மகள்கள் இருவரும் வழியில் உள்ள ஒரு முல்லை கொடியின் மீது இறக்கம் கொண்டு தன் தேரையே அங்கு நிறுத்தி அந்த கொடிகளை எடுத்து தன் தேர்மீது படர  விட்டனர் இதை கண்ட அன்னையின் உள்ளம் அளவற்ற மகிழ்ச்சி கொண்டது .பின் பாரியை பார்த்து  வள்ளல்களில் ஒருவனாக திகழ்வாய் என்று பட்டம் சூட்டினர்.
அது சரி கடையேழு வள்ளல்கள் யார்யார் என்று தெரியுமா? அவர்களில்  மூன்று பேர் ஔவையால் வள்ளல் என்று பெயர் சூட்டபெற்றனர் 
பேகன் 
காட்டு மயில் அகவியதை கேட்டு அது குளிருக்காக நடுங்கியது என்று தன் பொன்னாடையை எடுத்து மயிலுக்கு போர்த்தி விட்டான் பேகன். சிறு உயிர்களிடத்தில் அன்பாக  கொடுத்ததால்  வள்ளல் என்று பெயர் எடுத்தான்  
பாரி 
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்தான், அதனால் செடி கொடிக்கு எல்லாம் மரியாதை செலுத்தியவன் என்ற பேரு பெற்று வள்ளல் என்ற பெயர் பெற்றான் 
காரி 
நல்ல சொற்களையும் உணவு தான்யங்களையும் வழங்கியதால் வள்ளல் என்ற பெயர் பெற்றான்    
ஆய்
நீலமணியும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலருக்கு கொடுத்தான் இதனால் இவன் இப்பெயர் பெற்றான் 
அதியமான் 
தமிழ் புலவரான ஔவைக்கு நெல்லிக்கனி (கரு நெல்லி )தந்தவன் 
நள்ளி
கர்ணனை போல(இரவலருக்கு ) வேண்டியவர்க்கெல்லாம் கேட்டதை கொடுத்தவன் நள்ளி 
ஓரி 
கூத்தாடுபவர்களுக்கும்,இரவலருக்கும் பல நாடுகளையும் ,செல்வங்களையும் பரிசாக வழங்கியவன் 
இதில் இவர்களின் கொடைத்திறம் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்கள், சூழ்ச்சி செய்து 
பாரி ,ஓரி,காரி,அதியமான் போன்ற வள்ளல்களை காலநேரம் பார்த்து ஒருவர் பின் ஒருவராக கொன்றனர்  
திருக்குறள் ஔவையின் மூலம் தான், மதுரை தமிழ் சங்கத்தில் பலத்தடைகளையும்  தாண்டி வெளியிடப்பட்டது. அதன் விளக்கம் நாளைய பதிவில் காண்போம்.