December 22, 2012

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசி மகிமை



விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.
“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.
“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் வைகுண்ட வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

ஏகாதசி


ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். 

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நாலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது


வைகுண்ட ஏகாதசி அன்று அனந்தசயனத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வது உத்தமம்.



சித்தமருத்துவத்தில் ஏகாதசி


பொதுவாக சித்தமருத்துவத்தில் கூட ஏகாதசி அன்று உணவு அருந்துதல் கூடாது என்பர் ஏன் என்றால் அன்று சாப்பிடும் உணவின் தன்மை அதிகப்படும்
அது விஷமானாலும் சரி அமிர்தமானாலும் சரி



December 19, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-4

சுயம்பு மரகத லிங்கம்- வரலாறு 

             
 பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, ""முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்க்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பொருமான் லிஙக வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்க்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார் (போகர் பழனியில் புலிப்பாணி முனிவருக்கு இட்டது போலே சில விதிமுறைகள்)மீதி நேரத்தில் சதாரணமாக இந்த லிஙத்தை (மரகதலிங்கம்) வைத்து விடுங்கள் என்றார் பின் அர்த்தநாரீசர் திருவுருவத்தை முக உரு இல்லாமல் வெண்பாசாணம் கொண்டு செய்தார் பின் அங்கு ஒரு ஊற்று நீரையும் ஏற்படுத்தி அந்த நீரை பக்தர்களுக்கு கொடுக்குமாறு செய்தார்.

சுயம்பு லிங்கத்தின் மர்மம்


மரகதலிங்கத்துடன் மூலவர்

மரகதலிங்கம் இல்லாமல்
தினமலர் மாவட்டகோவில்கள் பகுதியில் சுயம்புலிங்கத்தை சுட்டி காட்டி உள்ளதை பாருங்கள்
           


      யார் இந்த மார்கழி மாதத்தில் குளித்து முடித்து மலையின் மீது நடந்தே வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்கிறார்களோ அவர்க்கு வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம் அல்ல உண்மை நாங்கள் அதை கண் கூடாக கண்டவர்கள் அதனால் எப்பாடுபட்டாவது பக்தர்கள் இதை வந்து பார்க்கவேண்டும் என கேட்டு கொள்கிறேன் குறிப்பு குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்க்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து விடுவார்கள் இது அதை விட சற்று பெரியதாக இருக்கும் இது தான் சாதரணமான தினத்தில் வைக்கபடும் லிங்கம்.  இந்த உண்மை பலரும் மறைத்து உள்ளனர்.அங்குள்ள வம்சாவழிகளுக்கு மட்டுமே தெறிந்த உண்மை. நாங்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்க்காக இதை கூறினேன்.மலையின் பஸ் ரூட்டு வழியாக நடந்து செல்லலாம்.    

நாகமாணிக்கம் மர்மம்


 நாகமாணிக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை.சுயம்பு மரகத லிங்கத்தின் பால் அபிஷேகம் பார்பது மிகவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அந்த பாக்கியம் எங்கள் குழுவுக்கு 17.12.12(மார்கழி-2)திங்கள் கிழமை கிடைத்தது.


அமைவிடம்:


திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

                                           
                                             ஓம் நமசிவய !!!!!


     
   

December 18, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-3

மலை கோவில் சிறப்புகள்(அதிசயங்கள்)

மூலவர் திருவுருவம்

மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.

உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்

அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற பிருங்கி முனிவர் வழிபட்ட சுயம்பு மரகதலிங்கம், நாக மாணிக்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.
பழனி மரகத லிங்கம்

வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.

அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.

வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும்.


மூலவர் செங்கோட்டுவேலவர்
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.

சுயம்பு மரகத லிங்கத்தின் அதிசய வரலாறு மகிமைகள்  பாகம் -4 ல்