December 18, 2012

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-3

மலை கோவில் சிறப்புகள்(அதிசயங்கள்)

மூலவர் திருவுருவம்

மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.

உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்

அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற பிருங்கி முனிவர் வழிபட்ட சுயம்பு மரகதலிங்கம், நாக மாணிக்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.
பழனி மரகத லிங்கம்

வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.

அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.

வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும்.


மூலவர் செங்கோட்டுவேலவர்
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.

சுயம்பு மரகத லிங்கத்தின் அதிசய வரலாறு மகிமைகள்  பாகம் -4 ல்

திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-2

மலையின் ஆண் வடிவம் இது மலையின் முன் பகுதி

சித்தர்கள்

சதுரகிரி,பொதிகை,கொல்லிமலை,போன்றே இந்த மலையிலும் பல சித்தர்கள் தங்கி தவம் புரிந்துள்ளனர்.மேலும் இந்த மலையில் பல குகைகள், சஞீவினி மூலிகைகள் உள்ளன. இந்த மலையில் மூலிகை காவல் தெய்வமாக அனுமன் உள்ளார். நான் சில மூலிகைகள் தேடுகின்ற போது பல தடவை முக்கியமான மூலிகை உள்ள யிடத்தில ஒரு குரங்கு கூட யில்லை ஆனால் நான் மூலிகையின் அருகில் சென்றால் பல குரங்குகள் வந்துவிடுகின்றன. அதே போலத்தான் இங்கு ஒரு குகை ஒன்று உள்ளது அங்கு சென்றால் உதகஞ்செயநீர்(அகத்தியர் பரிபூரணம்1200) என்ற ஒரு நீர் உள்ளது அதை காட்ட என் குரு என்னை அழைத்து சென்ற போது அனுமன் படைகளால் நாங்கள் சூழ பட்டோம் பின் என் குரு அனுமத் கவசம் செய்து விலகி செல்லுமாறு செய்தார் பின் தான் அங்கு சென்றோம்.
மலையின் பெண் வடிவம் இது மலையின் பின் பகுதி


இங்கு அல்லி சுனை ஒன்று உள்ளது அதன் அருகில் தான் சித்தர் பீடம் உள்ளது.  ஒரு சித்தர் தினம் அங்கு வந்து வழிபடுவதாக என் குரு பலமுறை கூறியிருக்கிறார். மேலும் இந்த மலையில் ஆரா சுவாமி என்கிற ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் இந்த மலையில் ஜீவ சமாதியாகி உள்ளார் என்றும் பல மூலிகைகள்,சித்துகள் அவருக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார் .மேலும் போகர் கூறிய மலைதாங்கி(வர்மகலையில் நோக்கு வர்மத்திற்க்கு பயன்படும் மூலிகை அது)  என்ற மூலிகை இருப்பிடம் ஒரு சித்தர் இங்கு தான் காட்டினார் என்று என் குரு கூறியதுண்டு 

இந்த மலையில் நடந்த அனுபவம் நிறைய உண்டு அதை பின் ஒரு பதிவில் கூறுகிறேன்.

பதிவின் நோக்கம் பாகம் -3 நாளை


திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பாகம்-1


திருச்செங்கோடு வரலாறு சுருக்கம்

முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது. அவற்றில் ஒன்றுதிருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இந்த மலையின் சிறப்புகள் படங்களின் மூலம் உணரலாம்















 இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன
மேலும் இந்த திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கம் பதிவின் அவசியமும் அடுத்த பதிவில் காத்திருக்கிறது