October 2, 2012

தம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-1

தம்பிக்கலை அய்யன் சித்தர்

தம்பணக்கலை


தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார்.தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் (arul migu neelagandeswarar &annapurani) தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. மருத்துவம்,ஆன்மிகம்,போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாக சொல்லப்படுகிறது


இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும் ,நாகதோஷம்,கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும் 


நாகேஸ்வரியின் சன்னதி


நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு 


பாம்பு விஷம் தீர்க்கும் கோவில்


நாகேஷ்வரியின் ஆலயம் பின் புறம் இங்கு தண்ணீர் மந்திரித்து கொடுக்கபடுகிறது இங்கு பாம்பு கடித்தவரை கொண்டுவந்து படுக்கவைத்து
மந்திரித்து தண்ணீர் கொடுத்தால் விஷம் இரங்குவது சிறப்பாகும்.இது பலமுறை நிருபிக்கபட்டுள்ளது. அதர்க்கும் ஒரு காரணம் இருக்கிறது
மிக அற்புதமான. மூலிகையான அமிர்த சஞ்சீவினி மூலிகை இங்கு உள்ளது இதை பற்றி விரிவாக இனி பார்ப்போம்

September 25, 2012

ஷிர்ரடி சாயி பாபா - வரலாறு

சாயி பாபா 
சீரடி சாய்பாபா  அக்டோபர் 15, 1918மராட்டி மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. இவருடைய வரலாறு கூறும் புத்தகம் கீழே கொடுத்துள்ளேன் 

மூலிகை மர்மம் -கரிசலாங்கண்ணி


அகத்தியர் பரிபூரணம் எனற நூலில் பின்வரும் வசியத்தை கூறுகிறார் 


பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று "யவசிவய' " என்று நீயும்
அப்பனே கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
கரிசலாங்கண்ணி
சுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
அனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.



பொற்பாவை என்னும் கரிசலாங்கண்ணியை சாப நிவர்த்தி செய்து சமுலம் எரித்த சாம்பலை கையில் வைத்து யவசிவய என்று உரு ஏற்றி சுழிமுனையில் மனதை வைத்து புருவ மத்தியில் இட்டால் எதிரிகள் வசியமாவர்

இதில் சபநிவர்த்தி செயிவித்தால் தான் மூலிகை வேலை செய்யும் பின் யவசிவய என்று 108 உரு கொடுத்தல் அவசியம்