August 19, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் – 6


சிவபுராணமும்(திருவாசகமும்) தமிழும் ஓர் ஆய்வு – 2இது சூட்சம பயணத்தை உள்ளடக்கியது


இப்படி மாணவன் தன் ஸ்தூல,சூட்சம தேகங்களை வழுபடுத்திய பின் சிவபுரத்திற்க்கு செல்லும் வழியை கூறுகிறார்.

அடுத்து21வது வரி கண்ணுதலான் தன் கருணை கண் காட்ட என ஆரம்பிக்கிறார் உடம்பில் இருக்கும் இறைவன் கண்ணை வைத்து வழிகாட்டி உள்ளே செல்லும் மார்க்கத்தை கூறி அந்த மார்க்கத்தில் வருகிற உடல் இன்னல்கள், இப்பிறவியில் வந்து பெற்ற, படித்த பல விடயங்கள் அங்கு வரும் அது அந்த வழியில் செல்லவிடாமல் தடுக்கும் அங்கு அதையெல்லாம் கவனிக்காமல் இருட்டில் சென்று கொண்டே இருக்கவேண்டும்.
                   
                                       
                                        


இந்த கட்டம் கொஞ்சம் சிரமம் தான் இருந்தாலும் மனதிற்க்கு எதையும் காட்டாமல் இருளை மட்டுமே காட்டி உள்ளே உள்ள ஒளி தெரியும்வரை செல்ல வேண்டும்.

அதாவது மாணிக்க வாசகர் சொல்வதுபோல்

“விலங்கு மனத்தால் விமலா”  

விலங்கு மனம் என்பது மனதிற்க்கு கற்பித்த ஒரு விடயத்தை மட்டும் நினைக்க செய்யுமாறு விலங்கு போடபடுவது, அதாவது விலங்கு போல ஒன்றை மட்டுமே செய்வது.இது மிகவும் முக்கியம் நண்பர்களே!!!

மனமும் உடலும் ஒன்றாக இருக்க ஒரு மெய் எழுத்து உள்ளது அதை தக்க குரு மூலம் அறிக

இப்படி செல்லும் போது இருட்டின் நடுவே விளக்கு இல்லாமல் ஒளி தெரியும் அது தான் சிவபுரத்தின்(பிராண உலகத்தின்) நுழைவுவாயில், அங்கு செல்வதற்க்குள் நடக்கும் சம்பவம் 21வது வரியிலிருந்து 87 வது வரி வரைக்கும் அனுபவம்

அவ்வாறு எல்லாவற்றையும் தாண்டி உங்களையும் அதில் சிக்க விடாமல் மீட்டு வந்து வாயிலில் நிற்க வைப்பார். இது எல்லாம் யோக சாதனை என கருத்தில் கொள்க

சிவபுரம் என்பது பிராண உலகம் அது உள்ளே சென்றவுடன் நிஜத்தில் உள்ளதைபோல் இருக்கும் அங்கு பலபேர் உங்களை சந்திப்பார்கள் அங்கு நீங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்.

முதல் முறையாக உள்ளே போகும் போது நீங்கள் யார் மூலம் வந்தீர்கள் என அவர்களிடம் கூற வேண்டும்.பின் அந்த குருவின் சார்பாக அடியாரோ, அக்குருவோ வந்து அழைத்து செல்லுவர்.
அதாவது கடைசி வரி சிவன் அடிகீழ் உள்ள பலரும் வணங்கி  அழைத்து செல்லுவர் என்கிறார்.

அனுபவ சூட்சம யாத்திரை


இதை அனுபவமாக சொல்லவேண்டுமானால் சூட்சம யாத்திரை செய்பவர்களுக்கு எளிதாக புரியும். அதாவது சூட்சம பயணம் செய்யும் போது சூட்சம உலகில் நுழைந்தவுடன் தாங்கள் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இங்கு வந்தீர்கள் என சூட்சம வாயிலில் உங்களுக்கு ஓர் எண்ணம் வரும் இங்கு தான் தெளிவாக ஒரு குருவின் பெயர் சொல்லவேண்டும் அதை விடுத்து பல குருமார்பெயர் தெரிந்து மனம் வெளிபடுத்தினால்  அங்கு பயணத்தில் குழப்பம் வரும் பின் அதை சரி செய்யவே பிராணன் விரயமாகும்.

இங்கு நடப்பது எல்லாமே உங்கள் சித்தமனதின் வேலை அது மேற்கொண்டு உள்ளே செல்ல முடியாமல் தடுமாற வைக்கும். அதற்கு முன்னமே சித்தத்தை சரியாக வைத்திருந்தால் பயணம் தொடரும் இல்லை என்றால் மீண்டும் வரவேண்டியது தான்.நண்பர்களே!! முதல் முறை மட்டுமே தடுமாற்றம் நடக்கும் பின் அனுபவம் கைகொடுக்கும்,இது அனுபவ உண்மை

மேற்கண்டவற்றில் நான் சொல்லுவதும் மாணிக்கவாசகர் சொல்லுவதும் ஒன்றுதான் என உங்களுக்கு புலப்படும்.

சூட்சம பயணம் இயல்பாகவே தூக்கத்தில் நடக்கும் ஆனால் நம் மனம் சரியாக இல்லாததால் சரியாக செல்லமுடியாமல் கவனிக்க முடியாமல் போகும்

இங்கு நிறைய விஷயம் மறைப்பாக உள்ளது. ஆதலால் இது பயிற்சி அல்ல,அல்லவே அல்ல!

இனி அடுத்த பகுதியில் உள்ளதை கீர்த்தித்திரு அகவல்,திரு அண்டபகுதி,போற்றித் திரு அகவல் ,திருச்சதகம் சுருக்கமாக கூறி தமிழும் திருவாசகம்  ஆய்வை நிறைவு செய்வோம்.

உங்கள் சித்தர் அடிமை

ரா.சங்கர்
ஈரோடு

நன்றி


வாழ்க வளமுடன்

No comments: