August 13, 2016

தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் - 3


எழுத்துகள் - ஓர் ஆய்வு

திருவள்ளுவர்
தமிழ் மொழியில் சூட்சம ரகசியம் இந்த எழுத்துகளின் உச்சரிப்பில் உள்ளது
 
அதாவது இந்த எழுத்துக்கள் எப்படி வந்தது, எப்படி உச்சரிப்பது

உயிர் எழுத்துகள் 12
மெயெழுத்துகள்.  18

இதில் இன்று உயிர் எழுத்துகளில் உள்ள சூட்சம் காண்போம்.

ஆதி காலத்தில் மொத்தம் ஐந்து எழுத்துக்கள் உருவாக்கபட்டது. அந்த ஐந்து எழுத்துக்கும் துணை எழுத்து கண்டு பிடிக்கப்பட்டது ஆக மொத்தம் பத்து உயிர் எழுத்துகள்

அதாவது

அ  இ  உ   எ  ஒ   ?    ?
ஆ  ஈ   ஊ ஏ  ஓ   ஐ ஒள

முதல் வரிசை குறில் எழுத்துகள், இரண்டம் வரிசை அதை சார்ந்துள்ள நெடில் எழுத்துகள்

இப்படி பார்க்கும் போது ஐ க்கும் ஒள க்கும் குறில் எழுத்து கிடையாது இந்த இரண்டு எழுத்தும் தனியாக தான் பயன்பட்டது இது ஆய்வாளர்கள் கருத்து.

இந்த இரண்டு எழுத்தும் பற்றி பின்னால் ஒரு பதிவில் கூறுகிறேன்.

எழுத்துகள் கிமு மூன்றாம் நூற்றாண்டின் படி பார்த்தால் பத்து எழுத்துக்கு மட்டுமே வடிவம் கொடுக்கப்பட்டது.இதன் படத்தை இதனுடன் அனுப்பியுள்ளேன் கவனிக்க.

உயிர் எழுத்துக்கள் நான் ஏற்கனவே சொன்னதுபோல் உயிர்சக்தியை உற்பத்தி பண்ணக்கூடியவை இந்த அ. என்பது "அ" என்று வாயிலில் இருந்து வெளிவர 12 சக்திகளை உற்பத்தி செய்து ஓசையாக வெளிவருகிறது நான் சொல்லவில்லை வள்ளலார் சொல்கிறார்.
 
வள்ளலார்
இப்போது வள்ளலார் அவர்கள் சாகா கல்வி தேவர்குறலில் முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

திருகுறள் முதல் அதிகாரம் முதல் பாட்டு

அகர உகர எழுத்தெல்லாம்

என ஆரம்பிக்கும் இங்கு நிற்க

திருவள்ளுவர் உயிர் எழுத்தான குறில் எழுத்துகளை அ இ உ எ ஒ என நாம் கூறும் எழுத்தை எதை சுட்டுகிறார் காண்க.

இப்படி குறில் எழுத்து எப்படி சாகா கல்விக்கு பயன்படும் என்றும், குறில் எழுத்து மட்டுமே சாகா கல்விக்கு பயன்படாது என்பதையும் மனதில் நிறுத்தவும்.(இதற்கு பின் பதிவு வரும்)

ஏனெனில் இதற்கு மற்ற குறளில் விளக்கமும், மெயெழுத்தில் சூட்சமும் உள்ளது. இப்போது நாம் உயிர் மட்டுமே ஆராய்கிறோம்.

எழுத்துவடிவம் மாறலாம் ஆனால் சொல் வடிவம் மாறாது.
தமிழ் எழுத்துகள்

ஆதிகாலத்தில் இ இன் வடிவம் ஃ என்ற வடிவம் தான். இந்த மூன்று புள்ளி தனியாக வராது முன்னால் அ காரமும் பின்னால் உ காரமும் வரும் என இலக்கண குறிப்பு உள்ளது

அப்படியானால்

அ இ உ .............எ ஒ 

இந்த ஐந்து குறில் உயிர் எழுத்தில் இருந்து மூன்று எடுத்தால் வள்ளுவர் கூறிய சாகாகல்வி எழுத்து
வரும்




அ இ உ இந்த  மூன்று எழுத்தில் இ மற்றும் தனியாக எடுத்தால் இ என்பது இறைவனை (அக்னியை) குறிக்கும்

ஆதிபகவன் முதற்றே உலகு. இதில் ஆதிபகவன் என்பதை இறைவன் என கொண்டால் இ  என்பது அக்னிக்குள் அடங்கும்

இ வடிவம் மூன்று புள்ளி   அதாவது ஃ இது தனியாக தெரியாது இது தெரியவேண்டுமானால் அ வும் உ வும் இருக்க வேண்டும் எண்ணில் இது எட்டு இரண்டு என சொல்வார்கள்.

இதையே யோகத்தில் அ சூரியன் உ சந்திரன் இ அக்னி என்பார்கள்

இந்த சூரியனையும்(அ) சந்திரனையும்(உ) வைத்து அக்னியோடு(இ) இணைவதையே சாகா கல்வி

குறள் வருவோம்

அகர உகர எழுத்தெல்லாம் ஃ(இ) முதற்றே உலகு

அகரத்தையும் உகரத்தையும் சிகாரத்தில் ஏற்றியவனே சிகரம் தொட்ட மனிதன் ஆவான்

சாகா கல்வியின் அடிபடைதான் இது. இது ஒரு குறிப்பு மட்டுமே மற்ற எழுத்துகளும் மீதி உள்ள ரகசியங்கள்

மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்

உங்கள் சித்தர் அடிமை
ரா.சங்கர்
ஈரோடு

நன்றி


வாழ்க வளமுடன்

No comments: