October 13, 2012

மூலிகை மர்மம்-பூனை வணங்கி

அகத்தியர் மாந்திரீக காவியம் என்ற நூலில் பூனை வணங்கி என்ற மூலிகைக்கு காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து அதன் தலைக்கு ஒரு லட்சம் உரு கொடுத்தால் அதற்கு வசிய சக்தி வந்து விடும் என்கிறார் . இதன் வேரும் வசியத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள்

இதன் சாப நிவர்த்தி மந்திரம் " தூ தூ "
குப்பைமேனி என்கிற பூனை வணங்கி

இதன் தற்போதைய பெயர்: குப்பைமேனி என்கிற குப்பை கீரை இது பெரும்பாலும் ரோட்டு ஓரங்களில் உள்ளதாகும் இதில் பெரும்பாலும் புள்ளிகள் இல்லாத தழை வசியத்திற்க்கு பயன்படுத்துகிறார்கள்

என்னிடம் பலர் சாபநிவர்த்தி பற்றி கேட்கிறார்கள். இதில் பல முறைகள் உள்ளன

1.மூலிகை பிடுங்கும் காலம்
2.அதற்க்கு உரிய நட்சத்திரம்
3.எந்த திசையில் நிற்க வேண்டும்
4.என்ன நூல் கட்ட வேண்டும் (இரு நூல்கள் உண்டு)
5.எதை பலி கொடுக்கவேண்டும் (சேவல்,சாதம்)
6.என்ன மந்திரம் கூற வேண்டும்
7.எந்த விரல்கள் மூலம் பறிக்க வேண்டும்
8.எந்த கல்லில் அரைக்க வேண்டும் (சிவப்புகல்,கருப்புகல்,பச்சைகல்)
9.அரைக்கும் போது என்ன பொதுவாக சேர்க்க வேண்டும்(பால்,சில பிற்சேர்கை மூலிகை)

இதை எல்லாம் அறிந்தால் தான் வசிய மூலிகை வேலை செய்யும் இது எல்லாம் குரு மூலம் தான் செல்லி தருவார்கள் மேலும் இந்த முறையை நான் உங்களுக்கு கூற முடியாது ஏன் என்றால் என் குரு யாரிடமும்(சில விபரங்களைமட்டும்) சொல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னிக்கவும்....இது எல்லாம் செய்யாமல் வசிய மூலிகை வேலை செய்யாது

மூலிகைக்கு சபநிவர்த்தி செய்யவில்லை என்றால்உரிய (மருத்துவ)பலனை மட்டுமே கொடுக்கும் .
உதாரணம்: இது தோலில் உள்ள வியாதிகளை குணப்படுத்தும்

மேலும் இதன் மருத்துவபயன்கள்அளவிடற்கரியது அதை மற்றுமொரு பதிவில் கூருகிறேன்

உலக அழிவு கட்டுரை மீதியை நாளை பகிர்ந்து கொள்கிறேன்








1 comment:

MRGREENTHEHUNTER said...
This comment has been removed by the author.